உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவுரங்காபாத் ரயில் நிலைய பெயர் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்

அவுரங்காபாத் ரயில் நிலைய பெயர் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்

சத்ரபதி சம்பாஜிநகர்:: மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத் ரயில் நிலையத்தின் பெயரை, 'சத்ரபதி சாம்பாஜிநகர்' என மாற்றி அரசிதழில் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. மஹாராஷ்டிராவில் அவுரங்காபாத் நகரில், எல்லோரா, அஜந்தா குகைகள் உட்பட முக்கிய சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. இந்நகரை, ஹைதராபாதின், 7ம் நிஜாம் மன்னர் மிர் உஸ்மான் அலி கான் கட்டமைத்து, முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் பெயரை சூட்டினார். முன்னதாக, உத்தவ் தாக்கரே தலைமையிலான மஹாவிகாஸ் அகாதி கூட்டணி அரசு, அவரங்காபாத் நகரின் பெயரை சத்ரபதி சம்பாஜிநகர் என மாற்ற நடவடிக்கை மேற்கொண்டது. எனினும், அதற்குள் மஹாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மஹாயுதி கூட்டணி அரசு பொறுப்பேற்றது. இதை த்தொடர்ந்து, சத்ரபதி சிவாஜியின் மகன் சத்ரபதி சாம்பாஜியை போற்றும் வகையில், அவுரங்காபாதுக்கு சத்ரபதி சம்பாஜிநகர் என்ற பெயர் கடந்த, 202 3ல் சூட்டப்பட்டது. இதற்கிடையே, தென் மத்திய ரயில்வே மண்டலத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக திகழும் அவுரங்காபாத் ரயில் நிலையத்தின் பெயரையும் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. க டந்த 1900ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையத்தின் பெயர், சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றப்பட்டதை, அதிகாரப்பூர்வமாக அரசிதழில் கடந்த 15ம் தேதி மஹாராஷ்டிரா அரசு வெளியிட்டது. காச் சிகுடா - மன்மத் ரயில் வழித்தடத்தின் இடையே உள்ள இந்த ரயில் நிலையம், நம் நாட்டின் பிற நகரங்களை இணைக்கும் முக்கிய ரயில் நிலையமாக திகழ் கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை