உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மராட்டியர்களால் தோற்கடிக்கப்பட்டவர் அவுரங்கசீப்: அமைச்சர் அமித் ஷா பேச்சு

மராட்டியர்களால் தோற்கடிக்கப்பட்டவர் அவுரங்கசீப்: அமைச்சர் அமித் ஷா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ''தன்னைத்தானே 'ஆலம்கீர்' எனப்படும், 'பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன்' கூறிக் கொண்ட முகலாய மன்னர் அவுரங்கசீப், மராட்டியர்களால் தோற்கடிக்கப்பட்டு, மஹாராஷ்டிராவில் அடக்கம் செய்யப்பட்டார்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

போராட்டம்

இங்குள்ள சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தின் குல்தாபாத் நகரில் முகலாய மன்னர் அவுரங்கசீபின் கல்லறை உள்ளது. அவுரங்கசீபின் மகன் ஆஸம் ஷா, நிஜாம் ஆஸப் ஜா உள்ளிட்டோரின் கல்லறைகளும் இங்குதான் உள்ளன. அவுரங்கசீபின் கல்லறையை அகற்றும்படி மஹாராஷ்டிராவில் சமீப காலமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மஹாராஷ்டிராவின் ராய்கட்டில் உள்ள சத்ரபதி சிவாஜி கோட்டையில், சிவாஜியின் 345வது நினைவு தினம் நேற்று நடந்தது. அதில், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், மற்றும் சிவாஜியின் வாரிசுகளான பா.ஜ., - -எம்.பி.,உதயன்ராஜே போஸ்லே, மஹாராஷ்டிர அமைச்சர் சிவேந்திரஷின் போஸ்லே ஆகியோர் பங்கேற்றனர். இதில், அமித் ஷா பேசியதாவது:தன்னைத்தானே 'ஆலம்கீர்' என்று அழைத்துக்கொண்ட ஒரு ஆட்சியாளர், உயிரோடு இருந்தவரை மராட்டியர்களுடன் போராடி, இறுதியில் தோல்வியடைந்தவராக மஹாராஷ்டிராவில் இறந்தார். அவரது கல்லறை மராட்டிய மண்ணில் அமைந்துள்ளது.

மன உறுதி

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியை மஹாராஷ்டிராவுக்குள் சுருக்க வேண்டாம். சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்த அவரது மன உறுதி, தைரியத்தை நம் நாடு போற்றுகிறது. இந்திய சுதந்திரத்தின் 100வது ஆண்டு நிறைவின்போது, வல்லரசாக வேண்டும் என்ற லட்சியத்துக்கு, சிவாஜியின் 'சமதர்மம், சுயராஜ்யம்' கொள்கைகள் ஊக்குவித்து வருகின்றன. சமதர்மத்தை பாதுகாத்து, சுயராஜ்யத்தை நிறுவி, தனது தாய் ஜிஜாபாய்க்கு பெருமை சேர்த்தவர், சத்ரபதி சிவாஜி. இந்த ராய்கட் கோட்டைதான் அவரது தலைநகராக இருந்தது. சத்ரபதி சிவாஜியின், 'ராஜமுத்திரை' தான், தற்போது இந்திய கடற்படையின் கொடியாக இருக்கிறது. இவ்வாறு அமித் ஷா பேசினார். ஆலம்கீர் என்றால், பாரசீக மொழியில், 'பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன்' என, பொருள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sampath Kumar
ஏப் 13, 2025 08:39

இந்தியாவை 800 வருடங்கள் ஆட்சி செய்தவர்கள் அவர்கள் இது வரலாறு


Barakat Ali
ஏப் 13, 2025 07:01

என்ன உளறல் இது?? அன்றைய மராத்திய பூமி அடிமைத்தனத்திற்கு ஆட்படவில்லையா ????


karupanasamy
ஏப் 13, 2025 06:46

உண்மையை உரக்க கூறுங்கள். நமக்கு முசுலீம்கள் செய்த அக்கிரமங்களை சினிமாவாக, பாடலாக, நாடகமாக, கார்டூனாக அனைத்து ஊடகங்களிலும் வெளியிட்டு இசுலாத்தின் உண்மை நிறத்தை உலகுக்கு உணர்த்தவேண்டும். கொடூர மூடநம்பிக்கை மார்க்கம் மறையும்.


karupanasamy
ஏப் 13, 2025 06:46

உண்மையை உரக்க கூறுங்கள். நமக்கு முசுலீம்கள் செய்த அக்கிரமங்களை சினிமாவாக, பாடலாக, நாடகமாக, கார்டூனாக அனைத்து ஊடகங்களிலும் வெளியிட்டு இசுலாத்தின் உண்மை நிறத்தை உலகுக்கு உணர்த்தவேண்டும். கொடூர மூடநம்பிக்கை மார்க்கம் மறையும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 13, 2025 06:43

இன்று போல அன்றும் மிலேச்சர்கள் நுழையும்போது ஹிந்து மன்னர்களிடையே, ஹிந்துக்களிடையே ஒற்றுமை இல்லை ........ இது அமித் ஷாவுக்குத் தெரியுமா ??


அப்பாவி
ஏப் 13, 2025 05:44

எழுதுங்க. வரலாற்றையே மாத்தி எழுதுங்க.


புதிய வீடியோ