உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா அதிரடியான துவக்கம்; மோசமான வானிலை காரணமாக ஆட்டம் பாதிப்பு

இந்தியா அதிரடியான துவக்கம்; மோசமான வானிலை காரணமாக ஆட்டம் பாதிப்பு

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதிரடியான துவக்கத்தை கொடுத்துள்ளது. ஆனால், மோசமான வானிலை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 3, 4வது போட்டியில் போட்டியில் வென்ற இந்தியா 2-1 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது, கடைசி போட்டி இன்று பிரிஸ்பேன் மைதானத்தில் நடக்கிறது.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி., அணியின் கேப்டன் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்திய அணியை பொறுத்தவரையில் திலக் வர்மாவுக்கு பதிலாக ரிங்கு சிங் அணியில் இடம்பிடித்துள்ளார்.வழக்கம் போல துவக்க வீரர்களாக கில் மற்றும் அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். 4.5 ஓவர்களில் 52 ரன்னை எட்டிய போது, மோசமான வானிலை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. அபிஷேக் 23 ரன்னுடனும், கில் 29 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.இந்தப் போட்டியில் அபிஷேக் ஷர்மா 11 ரன்னை எட்டிய போது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,000 ரன்களை கடந்துள்ளார். இதன்மூலம், டி20 கிரிக்கெட்டில் வேகமாக (528 பந்துகளில்) 1000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை