உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சவுதி அரேபியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி தங்கம் டில்லியில் பறிமுதல்!

சவுதி அரேபியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி தங்கம் டில்லியில் பறிமுதல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில் ரூ.1.3 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சவுதி அரேபியாவில் இருந்து வந்தவர் கைது செய்யப்பட்டார்.சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து குவைத் வழியாக டில்லி வந்த விமானத்தில் பயணித்த நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர்.எக்ஸ்ரே சோதனையில் எதுவம் தெரியாத நிலையில், அவரிடம் நேரடியாக அதிகாரிகளை சோதனையில் ஈடுபட்டனர். அதில், தங்கத்தை உருக்கி அவர் கடத்தி வந்தது உள்ளாடையிலும், பையின் அடியில் வைத்தும் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து 1,585 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.1.3 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். அவரை கைது செய்த அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

kumar
பிப் 27, 2025 20:22

அவருக்கு பெயர் இல்லையா..அந்த சார் யார்?


Sampath Kumar
பிப் 27, 2025 20:05

சபாஷ் இந்த தங்கத்தை யாரு கிட்ட கொடுப்பிங்க ? பிஜேபி காரன்கிட்டத்தான் அது கடைசியில் போகும். பிடித்து என்ன பிரயோசனம்?


Ganapathy
பிப் 27, 2025 20:38

திராவிட களவாணி


Amar Akbar Antony
பிப் 28, 2025 07:11

தங்கள் கூட்டத்தின் கொள்கையே உங்கள் கருத்து இல்லையென்றால் ஐயோ போகுதே என்ற வயிதெரிச்சல் எப்புடியோ தங்கள் அச்சப்படவேண்டாம் அது முறையாக ரிசெர்வே வங்கிக்கு செல்லும். ஆங் இங்க டாஸ்மாக் நாட்டில் எங்க கோவில்களில் இருந்த தங்கத்தை என்ன செய்தீர்கள்? அபேஸ்?


அப்பாவி
பிப் 27, 2025 19:38

சவூதி ரொம்ப நல்ல நாடு. அங்கேருந்து தங்கம் கடத்திக்கிட்டு வந்தால் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. நாமளும் கட்டிப் புடிச்சு நட்போட இருக்கம்.


Bye Pass
பிப் 27, 2025 19:33

பெரும்பாலும் skilled அண்ட் unskilled வேலை செய்பவர்கள் தாங்கள் வேலை செய்த காலத்திற்கு தகுந்த அளவிற்கு சட்டபூர்வமாக தங்கம் கொண்டுவர அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் பங்குசந்தையில் பல்லாயிரம் கோடிகளை வெளிநாட்டு கம்பெனிகள் சட்டத்தின் ஓட்டைகளை சாதகமாக பயன்படுத்தி கொள்ளை அடிக்கிறார்கள்


புதிய வீடியோ