மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
7 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
13 hour(s) ago
பெங்களூரு: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பெங்களூரு நகரின் முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பெங்களூரில் கடந்த மூன்று நாட்களுக்கு நடந்த போலீஸ் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் சித்தராமையா, அயோத்தியில் 22ம் தேதி நடக்கும் கும்பாபிஷேக விழாவின்போது, கர்நாடகத்தில் கலவரம் போன்ற நிகழ்வுகள் நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி' அறிவுறுத்தி இருந்தார்.இதையடுத்து பெங்களூரு நகரில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அத்துடன், அவசர விடுமுறையை தவிர, சாதாரண விடுமுறை வழங்க வேண்டாம் என்றும், உயர் அதிகாரிகள் விடுமுறை எடுக்கக் கூடாது என்றும் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, வாய் மொழி உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, டி.சி.பி.,க்களுடன் ஆலோசனை நடத்தி, பதற்றம், மிக பதற்றம் நிறைந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.ஊர்வலம், ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது. நல்லிணக்கத்தை பேணுவதற்கு அந்தந்த மத தலைவர்களுடன் சந்திப்பு நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
7 hour(s) ago | 2
13 hour(s) ago