உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூட்டு பலாத்கார வழக்கில் ஜாமின்: வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள்

கூட்டு பலாத்கார வழக்கில் ஜாமின்: வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள்

பெங்களூரு: கூட்டு பலாத்கார வழக்கில் ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து, சிறையில் இருந்து வெளியே வந்த ஏழு பேர், கார்கள், பைக்குகளில் பேரணியாக சென்றதுடன், சத்தமாக பாடல்களை ஒளிபரப்பு செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.கர்நாடக மாநிலம் ஹவேரியைச் சேர்ந்த 26 வயதான பெண் ஒருவர், அம்மாநில போக்குவரத்து துறையில் பணியாற்றும் 40 வயதான டிரைவர் ஒருவரை கலப்பு திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரும், அங்கு இருந்த ஓட்டல் ஒன்றில் இருவரும் தங்கியிருந்தனர்.அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று, அந்த பெண்ணை தாக்கியதுடன் வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர்.இது தொடர்பாக அப்தாப் சந்தனகடி, மதர் சாப் மண்டகி, சமிவுல்லா லாலாநவர், முகமது சாதிக் அகசிமானி, சோயிப் முல்லா, தவுசிப் சோட்டி மற்றும் ரியாஸ் சவிகேரி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பிறகு பல மாதங்களாக நீதிமன்ற காவலில் உள்ளனர். நீதிமன்ற விசாரணையின் போது பாதிக்கப்பட்ட பெண், கைதானவர்களை அடையாளம் காட்ட தவறியதாக தெரிகிறது. இதனால், வழக்கு பலவீனமானது.இந்நிலையில், இந்த ஏழு பேருக்கும் ஹவேரி செசன்ஸ் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனையடுத்து வெளியில் வந்த அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அகி அலுர் நகரப்பகுதியில்மோட்டார் பைக்குகள் மற்றும் கார்களில் பேரணியாக சென்றனர். அப்போது பாடல்களை சத்தமாக ஒலிக்க விட்டனர். அப்போது அவர்கள் புன்னகைத்தபடி, வெற்றிச் சின்னத்தை காட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

என்றும் இந்தியன்
மே 27, 2025 16:37

இந்த மாதிரி தான்தோன்றி சேர்ந்தவர்களுக்கு ஒரே கணக்கு நாங்கள் என்னவேண்டுமானாலும் செய்வோம்.


Thiru Arasu
மே 27, 2025 15:37

இத oru tharkaliga santhosham thaan.


Alex Axe
மே 25, 2025 20:56

பசங்க அப்படித்தான் இருப்பானுங்க .


Senthoora
மே 24, 2025 22:58

இதே தமிழகத்தில் நடந்தஇருந்தால் ஐயாகோ, ஐயாகோ என்று கத்தி முதலமைச்சர் ராஜினாமா, தன வம்ச வம்சத்தையே திராவிடர்கள் என்று கூப்பாடு போட்டிருப்பார்கள். தப்பித்தார் நம்மாள்.


GANESH
மே 24, 2025 21:30

காக்கி சட்டை ரவுடிகள் கருப்பு சட்டை கேடிகள் சேர்ந்து வெள்ளை சட்டை திருடனை அரசியல் வாதிகள் காப்பாற்றுகிறார்கள்,


Sundaran
மே 24, 2025 20:05

பெண்ணின் குடும்பத்தினரே குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் நீதிமன்றங்களை நம்பி பயனில்லை


Chandrasekaran Balasubramaniam
மே 24, 2025 19:13

இந்தியா ஆங்கிலேய சட்டங்களை பின்பற்றினால் இப்படித்தான் தப்பித்து விடுவார்கள் அரசியல் வியாதிகளும் குற்றவாளிகளும்.


metturaan
மே 24, 2025 19:12

அட போங்க சார்.... ஊழல் வழக்கில் ஒருவருஷம் தண்டனை பெற்று வந்தா ராஜமரியாதையோடு அமைச்சர் பதவி தரப்படும் நாட்டில் இதையெல்லாம் பெருசா பேசறீங்க... எல்லாம் நம்ம தலையெழுத்து


ashok kumar R
மே 24, 2025 17:17

கடவுள் நியா தீர்ப்பு காலம் தாமதம் அதற்கு தான் எல்லாம் தலை விரித்து ஆடுகிறது


RADHAKRISHNAN
மே 24, 2025 16:32

இதில் நீதிமன்றத்தை குறைசொல்லவேண்டியதில்லை, பாதிக்கப்பட்ட பெண் அந்த கழுசடைகளை அடையாளம் காட்டவில்லை, தவறு அங்கேதான் உள்ளது, அப்பெண் மிரட்டப்பட்டு இருக்கலாம் அல்லது விலைபோயிருக்கலாம், இதில் காவல்துறை இந்த வழக்கை கையாண்ட விதமும் சரியல்ல, பாதிக்கப்பட்ட பெண்னுக்கு பக்கபலமாக இருந்து குற்றவாளிகளை அடையாளம் காட்டப்படிருக்கவேண்டும்.


Aarthy
மே 24, 2025 21:32

ஒன்றா இரண்டா ? அவர்களை பற்றி குறை சொல்ல... நாதாரிகள்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை