உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அசாமில் உணவகங்கள், ஹோட்டல்களில் மாட்டிறைச்சிக்கு தடை: காங்., யோசனையில் வந்தது என்கிறார் முதல்வர்

அசாமில் உணவகங்கள், ஹோட்டல்களில் மாட்டிறைச்சிக்கு தடை: காங்., யோசனையில் வந்தது என்கிறார் முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கவுகாத்தி: அசாமில் உணவகங்கள், ஹோட்டல்கள், பொது விழாக்கள் மற்றும் சமுதாய நிகழ்வுகளில் மாட்டிறைச்சி பரிமாறவும், சாப்பிடவும் அம்மாநில அரசு தடை விதித்து உள்ளது.இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது: அசாமில், முன்பு கோவில் அருகே மாட்டிறைச்சி சாப்பிட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இனிமேல், உணவகங்கள், ஹோட்டல்கள், பொது இடங்கள், பொது நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சி பரிமாற தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். இதனால், இந்த இடங்களில் இனிமேல் அதனை சாப்பிட முடியாது. இதற்கான முடிவு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், கடந்த சில நாட்களாக மாட்டிறைச்சி குறித்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். மாட்டிறைச்சி வேண்டாம் என்ற கருத்தை மக்களிடம் தெரிவித்தனர். அமைச்சரவை கூட்டத்தில் அவர்களின் அறிக்கையை விரிவாக விவாதித்தோம். அதில், தற்போது உள்ள மாட்டிறைச்சி தடை சட்டத்தில், சமுதாய நிகழ்வுகள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் தடை குறித்து போதுமான சட்டங்கள் ஏதும் இல்லை.இதனையடுத்து புதிய சட்டத்தில், இந்த விதிகளை சேர்த்தோம். இது சட்டத்தை வலுப்படுத்துவதுடன், காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியது முன்னெடுக்கப்பட்டு உள்ளது. இதனால், இச்சட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என நம்புகிறோம். இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

kulandai kannan
டிச 05, 2024 16:53

யோகிக்கு போட்டி இவர்தான்.


ஆரூர் ரங்
டிச 05, 2024 07:45

பசுவதை தடை செய்யப்பட வேண்டும் என்பது அரசியல் சட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ளதுதான்.


Oviya Vijay
டிச 05, 2024 07:11

என்ன ஒரு முன்னெச்சரிக்கை... வாவ்...


kumar
டிச 05, 2024 06:29

learn from assam


SPB SP
டிச 05, 2024 06:04

அது போகட்டும் அப்படியே நாம மசூதி பக்கத்துல பன்றி இறைச்சி கடையை ஆரம்பித்து ஒரு புரட்சி பண்ணுவோம்


SPB SP
டிச 05, 2024 05:57

நீங்கள் சொல்வதுதான் சரி, இறைச்சியை வைத்து அரசியல் செய்கிறார்கள்


Oviya Vijay
டிச 04, 2024 22:57

.....இருந்தாலும் இருக்கலாம்...


Priyan Vadanad
டிச 04, 2024 22:44

சசி சார் மடியில் குரங்கு பழம் சாப்பிட்டுவிட்டு தூங்கிய செய்தி படத்தை பார்த்து .... அங்கு கருத்து பதிவிட்ட அனைவரும் எந்த அளவுக்கு கேவலமான மனநிலையை கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. / தான் யோக்கியன் என்று மார்தட்டும் இவர்களும், இவர்களை சார்ந்தோரும், யாரை ரோல் மாடலாக கொண்டுள்ளனர் என்பதை வெளிச்சமிட்டு காட்டும் அந்த பதிவுகளுக்கு நன்றி.


Priyan Vadanad
டிச 04, 2024 22:42

இறைச்சியில்தானா உங்கள் அரசியல்?/ மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து பெட்டியை நிரப்புவது உங்கள் கண்களுக்கு தெரியாதபடி நடிக்கிறீர்கள். / நாய் வித்த காசு குறைக்காதாம். / மாட்டிறைச்சி வித்த காசு அம்மான்னு கத்தாதாம் .


Oviya Vijay
டிச 04, 2024 22:41

மாடுகள் எண்ணிக்கை குறைந்தால் போதிய கோமியம் கிடைக்காது என்ற பயமோ? இருந்தாலும் இருக்கலாம்...


Sivak
டிச 04, 2024 23:46

கரெக்ட் தான்.. நீங்க வேணும்னா...


Mettai* Tamil
டிச 05, 2024 09:32

ஆமா , வீட்டு வாசல்ல கோமியம் சாணம் சேர்த்து தெளிக்கனுமுள்ள ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை