மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
1 hour(s) ago
சாம்ராஜ் நகர்: பொங்கலை முன்னிட்டு, சாம்ராஜ் நகர் பிலிகிரி ரங்கநாதசுவாமி கோவில் ரதோற்சவம், சிக்க தேர் திருவிழாவை முன்னிட்டு, வரும் 15, 16ம் தேதிகளில் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதித்து, மாவட்ட கலெக்டர் ஷில்பா நாக் உத்தரவிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பொங்கலை முன்னிட்டு, வரும் 15, 16ம் தேதிகளில் சாம்ராஜ் நகர் பிலிகிரி ரங்கநாதசுவாமி கோவில் ரதோற்சவம், சிக்க தேர் திருவிழா நடக்கிறது.இவ்விழாவில் பங்கேற்க மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளுவர். இதனால் தனியார் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொது போக்குவரத்து வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்படுகிறது.அதுமட்டுமின்றி மலைப்பாதையானது காடுகள் நிறைந்ததாகவும், மிகவும் செங்குத்தானதாகவும், குறுகலாகவும் உள்ளது. இதனால் சாலை போக்குவரத்து ஏற்பட்டு, விபத்துகள் நடக்க வாய்ப்பு உள்ளது.எனவே மோட்டார் வாகன சட்டம், விதிமுறைகள், போக்குவரத்து கட்டுப்பாடு சட்டத்தின்படி, சாம்ராஜ் நகர் மாவட்டம், யாழந்துாரின் கும்பள்ளி, சாம்ராஜ் நகரின் ஹோண்டர்பாலு சோதனை சாவடி வழியாக வரும் இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago