மேலும் செய்திகள்
தேசிய நலன் மீதான பற்றால் உச்சத்தை தொட்டவர் பிரதமர் மோடி; அமித் ஷா
2 hour(s) ago | 1
இளம்பெண் தற்கொலை முயற்சி
4 hour(s) ago
சிப்பி காளான் வளர்ப்பு செயல் விளக்கம்
4 hour(s) ago
4 பேரிடம் ரூ.1.61 லட்சம் அபேஸ்
4 hour(s) ago
பெங்களூரு : காவி சால்வை கொண்டு வந்த, பா.ஜ., உறுப்பினரை மேலவையில், போலீசார் தடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.கர்நாடக மேலவை கூட்டத்தில் பங்கேற்க, நேற்று முன் தினம் பா.ஜ., உறுப்பினர் கேசவ பிரசாத், பிளாஸ்டிக் கவரில் காவி சால்வையை கொண்டு வந்தார். விதான் சவுதாவில் நுழைந்த அவரை, போலீசார் தடுத்து நிறுத்தி, கவரை சோதனை நடத்தினர். அதில் காவி சால்வை இருப்பதை பார்த்து, 'உள்ளே கொண்டு செல்ல கூடாது' என, கூறினார்.கோபமடைந்த கேசவபிரசாத், “காவி சால்வை கொண்டு செல்வதை தடுக்க நீங்கள் யார், உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது. இப்படி செய்யும்படி கூறியது யார்?” என கேள்வி எழுப்பினார்.அப்போது பாதுகாவலர்கள், 'எங்களுக்கு உயர் அதிகாரிகளிடம் இருந்து, உத்தரவு வந்துள்ளது. காவி சால்வை, காவி உடைகளை உள்ளே எடுத்துச் செல்லாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என, கூறியுள்ளனர். நாங்கள் யாரையும் அவமதிக்கவில்லை. உள்ளே கொண்டு செல்லும் பைகளை சோதனையிடுகிறோம்' என்றனர்.அதே நேரத்தில் அங்கு வந்த, பா.ஜ., - எம்.எல்.சி.,க்கள் ரகுநாத் மல்யாபுரே, ருத்ரேகவுடா ஆகியோரும், போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். 'சட்டம் வகுப்பது நாங்கள், அதை பின்பற்றுவது எங்களுக்கு தெரியும். காவி சால்வை எங்களின் அடையாளம். அதைத் தடுக்கும்படி உங்களுக்கு யார் உத்தரவிட்டது?' என காட்டமாக கேள்வி எழுப்பினர்.ரகுநாத் மல்யாபுரே, “யார் என்ன செய்கின்றனர் என பார்க்கலாம், நீங்கள் காவி சால்வையை உள்ளே கொண்டு வாருங்கள்,” என, கேசவ பிரசாத்திடம் கூறினார். பாதுகாவலர்கள் இயலாமையில் நின்றனர்.காங்கிரஸ் அரசு தேவையின்றி, காவி சால்வைக்கு தடை விதித்து, தர்ம சங்கடத்துக்கு ஆளானது. பா.ஜ.,வுக்கு வாதிடும் அஸ்திரத்தை கொடுத்துள்ளது.
2 hour(s) ago | 1
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago