உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தனி மாநிலமாக அறிவிக்கக்கோரி கிழக்கு நாகாலாந்தில் பந்த்

தனி மாநிலமாக அறிவிக்கக்கோரி கிழக்கு நாகாலாந்தில் பந்த்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோஹிமா: கிழக்கு நாகாலாந்தை தனி மாநிலமாக அறிவிக்க கோரி, அப்பகுதியில் உள்ள ஆறு மாவட்டங்களில் தொடர் கடையடைப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியைச் சேர்ந்த முதல்வர் நெய்பியு ரியோ தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கிழக்கு பிராந்திய மக்களுக்கு வளர்ச்சி திட்டங்கள் முழுமையாக சென்று சேர்வதில்லை என்றும், மேற்கு பகுதியில் வசிக்கும் மக்களுடன் ஒப்பிடுகையில், தாங்கள் பின்தங்கி இருப்பதாக பல ஆண்டுகளாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.இந்நிலையில், கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு என்ற அமைப்பின் கீழ், ஆறு மாவட்டங்களின் பழங்குடி அமைப்பினர் மற்றும் முன்னணி இயக்கங்கள் ஒன்றிணைந்து, 15 ஆண்டுகளாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.கிழக்கு நாகாலாந்தின் மோன், துயென்சாங், லாங்லெங், கிபிர், நோக்லக் மற்றும் ஷமடோர் மாவட்டங்களை சேர்ந்தோர் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே, கிழக்கு நாகாலாந்தை தனி மாநிலமாக அறிவிக்க கோரி, கடந்த 8ம் தேதி முதல், தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.கிழக்கு நாகாலாந்தின் ஆறு மாவட்டங்களில் பிரதானமாக வசிக்கும் சாங், கியாம்னியுங்கன், கொன்யாக், போம், சாங்டம், திகிர் மற்றும் யிம்கியுங் ஆகிய பழங்குடியினர் இந்த கடையடைப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு அப்பகுதி வணிகர்கள், தொழில் நிறுவனங்கள் என, அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்து வருவதால், பெரும் வெற்றி பெற்றுள்ளதாக போராட்டத்தை முன்னெடுத்துள்ள கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.முன்னதாக, கிழக்கு நாகாலாந்தில் லோக்சபா தேர்தலுக்கு எந்த அரசியல் கட்சியையும் பிரசாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி, மார்ச் 5ம் தேதி இந்த அமைப்புகள் சார்பில் பொது அவசர நிலையை கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு அறிவித்திருந்தது.இதன் வாயிலாக, அரசியல் கட்சியினர் கிழக்கு நாகாலாந்து மாவட்டங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி