உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பந்தா ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜாவின் பயிற்சிக்கு தடை

பந்தா ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜாவின் பயிற்சிக்கு தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மஹாராஷ்டிராவை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கரின் பயற்சி நிறுத்தி வைத்து அரசு உத்தரவிட்டு உள்ளது.மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பூஜா கேத்கர் என்ற இளம்பெண் யு.பி.எஸ்.சி., தேர்வில் அகில இந்திய அளவில் 821வது இடத்தை பிடித்தார். பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்த அவர், புனே உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். அரசால் வழங்கப்படாத வசதிகளை இவர் அத்துமீறி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bgidp8g2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தன் சொகுசு காரில் அரசு பெயர் பலகை மற்றும் சிவப்பு - நீல சுழல் விளக்கு பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. விதிமீறலில் ஈடுபட்டதை அடுத்து பூஜா, வாஷிம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள அவர், ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தபோது, உடல் ரீதியான குறைபாடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சான்றிதழ்களை முறைகேடாக சமர்ப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் கமிஷனை சமீபத்தில் அமைத்தது.தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு உள்ளான பூஜா கேத்கரின் பயிற்சியை நிறுத்தி வைத்துள்ள அரசு, அடுத்த கட்ட நடவடிக்கைக்காக முசோரி வர வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. வரும் 23ம் தேதிக்குள் முசோரியில் உள்ள பயிற்சி மையத்திற்கு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து,மாவட்ட பயிற்சி திட்டத்தில் இருந்து அவரை மாநில அரசு விடுவித்து உள்ளது.

கலெக்டர் மீது பாலியல் புகார்

இதற்கிடையே தான் பயிற்சி திட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டதையறிந்து, புனே மாவட்ட கலெக்டர் மீது போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார் புஜா கேத்கர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Azar Mufeen
ஜூலை 17, 2024 11:48

அம்மணி குஜராத் கேடரில் பயிற்சி பெற்று அங்கேயே சேர்த்திருந்தால் அட... அட.. பிஜேபி முழு ஆதரவுடன் காசு பார்த்து இவரையும் நல்ல நிலைமைக்கு கொண்டுவந்திருப்பார்கள் என்ன செய்ய வடை போச்சே ..ஜெய் ஷா


தமிழ்வேள்
ஜூலை 17, 2024 09:44

அம்மணி தமிழக கேடரில் தேர்வு பெற்று இங்கே பயிற்சி யில் இருந்திருந்தால்..அட..அட.... திமுக முழு மனத்துடன் ஆதரவு நல்கி அம்மணி மூலமும் துட்டு பார்த்து அம்மணியையும் ஒரு லெவலுக்கு கொண்டு வந்து இருப்பார்கள்....வடை போச்சே சின்னதே...


vaiko
ஜூலை 17, 2024 00:51

economically weaker section கோட்டாவை தீர்த்து கட்டுவதில் உங்களுக்கு ஏன் இந்த அதீத ஆர்வம்?


தாமரை மலர்கிறது
ஜூலை 16, 2024 21:09

கோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரி அந்த பிரிவிலேஜுடன் தான் இருப்பார் என்பதற்கு இவர் ஒரு பெரிய உதாரணம். இவரை காரணம் காட்டி, கோட்டாவை முடித்துக் கட்டுவது நல்லது.


Indhuindian
ஜூலை 16, 2024 20:29

எதுக்கு திருப்பி கூப்பிடனும் அப்படியே வூட்டுக்கோ ஜெயிலுக்கோ அனுப்ப வேண்டியதானே தண்ட செலவு


...
ஜூலை 16, 2024 19:28

இவளுக்கு ஓபிசி சான்று தந்தவர்களை விசாரிக்கனும்.மருத்துவமும் ஓபிசி கோட்டாவில் தான் படிச்சிருக்காளாம்.அப்பா ஐஏஎஸ் ஓபிசி கோட்டா வாய்ப்பே இல்லை


R S BALA
ஜூலை 16, 2024 18:34

இவருக்கு கலெக்டர் ஆகும் தகுதி கொஞ்சமும் இல்லை MP MLA ஆகும் தகுதி இருக்கிறது உடனே ஒரு கட்சியில் சேரவும்.


Premanathan Sambandam
ஜூலை 16, 2024 19:39

அருமையான யோசனை. சரியான யோசனை. பாராட்டுகிறேன்.


Dharmavaan
ஜூலை 16, 2024 18:14

தற்கால நிலையில் இது பெரிய விஷயமல்ல


Sivak
ஜூலை 16, 2024 17:43

இப்பவே இந்த அலப்பறை என்றால் பொறுப்பான பதவி குடுத்தால் அவ்வளவு தான் ... தகுதி இழப்பு செய்ய வேண்டும் ...


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை