உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேசத்தின் சட்ட விரோத கட்டுமானம்: கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு

வங்கதேசத்தின் சட்ட விரோத கட்டுமானம்: கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு

புதுடில்லி: சர்வதேச எல்லையில் வங்கதேசம் சார்பில் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்கும்படி, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊடுருவல் அதிகரிப்பு

அண்டை நாடான வங்கதேசத்துடன், நம் நாடு, 4,096 கி.மீ., துார எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் மட்டும், 2,217 கி.மீ., துாரம் அடங்கும்.கடந்த 2024 ஆகஸ்டில், வங்கதேச பிரதமராக இருந்த அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டுக்கு தப்பி வந்ததை அடுத்து, அந்நாட்டில் இருந்து எல்லை வழியாக நம் நாட்டுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவுவது அதிகரித்தபடி உள்ளது. இதனால் இந்தியா - வங்கதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள இந்தியா - வங்கதேச எல்லை பகுதிகளில், 2024ல் மட்டும், 80க்கும் அதிகமான முறை, வங்கதேச பாதுகாப்பு படையினர் சட்ட விரோத கட்டுமானங்களை கட்ட முயற்சித்தனர். இதை நம் எல்லை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். மேற்கு வங்கத்தின் தக் ஷின் தினாஜ்பூர் மாவட்டத்தின் மாலிக்பூர் என்ற கிராமம், இந்தியா - வங்கதேச எல்லையில் உள்ளது.

தடுத்து நிறுத்த வேண்டும்

இந்த கிராமத்திற்குள், சமீபத்தில் ஆயுதங்களுடன் நுழைந்த வங்கதேசத்தினர், எல்லை பாதுகாப்பு படையினரை தாக்கினர். இதில் நம் வீரர் ஒருவர் காயமடைந்தார். தற்காப்புக்காக நம் படையினர் துப்பாக்கியால் சுட்ட போது, வங்கதேச எல்லைக்குள் அவர்கள் ஓடிவிட்டனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறியதாவது:இந்தியா - வங்கதேச சர்வதேச எல்லையில், வங்கதேசம் சார்பில் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி, எல்லை பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லை பட்டாலியன்களின் பின்புறத்தில் நிறுத்தப்பட்டுள்ள மூத்த அதிகாரிகள், முக்கிய பகுதிகளுக்கு தொடர்ந்து சென்று, தேவையான இடங்களில் முகாமிட வேண்டும். நம் நாட்டுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் நபர்களை தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

subramanian
பிப் 06, 2025 11:09

சட்ட விரோத கட்டமைப்பை இடித்து தள்ள வேண்டும்.


subramanian
பிப் 06, 2025 11:06

வங்கதேசத்திற்கு ரயிலை நிறுத்த வேண்டும். எந்த மனிதாபிமான உதவிகளை அனுப்ப கூடாது. நம்முடன் நட்பாக இருக்கும் நாட்டுக்கு மட்டும் உதவி செய்ய வேண்டும்.


Kasimani Baskaran
பிப் 06, 2025 07:59

இந்தியாவில் இருக்கும் வங்கதேசத்தவர்களை முதலில் நாடு கடத்த வேண்டும். அதை செய்தாலே ஒருவகை பயம் இருக்கும்.


Kanns
பிப் 06, 2025 07:36

Capture 25% Bdesh entire Coast for Accommodating All Pre1947 Hindus etc Minorities of AfPakBangla. Capture another 25% to Flush Out AllForeign Infiltrators/ Invaders


Nandakumar Naidu.
பிப் 06, 2025 03:34

என்ன தற்காப்புக்காக சுடுவது, ஒரு ஐம்பது அல்லது நூறு வன்முறையாளர்களை சுட்டுத்தள்ள வேண்டும். அப்போது தான் அடங்குவார்கள். இஸ்ரேல் வழியை பின்பற்றி கடுமையாக நடந்துகொள்ள வேண்டும்.


சமீபத்திய செய்தி