உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேச மாடல் அழகி கோல்கட்டாவில் கைது

வங்கதேச மாடல் அழகி கோல்கட்டாவில் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொல்கட்டா: போலி ஆவணங்களை வைத்து கோல்கட்டாவில் வசித்து வந்த வங்கதேச மாடல் அழகியை போலீசார் கைது செய்தனர். பஹல் காம் தாக்குதலுக்குப் பின், நாடு முழுதும் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் கண்டறியப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேற்கு வங்கத்தில், அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்த ஏராளமானோர் சட்ட விரோதமாக ஊடுருவிஉள்ளனர். இந்நிலையில், கொல்கட்டா போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், வங்க தேச மாடல் அழகி சாந்தா பால் என்பவர் சிக்கினார். கடந்த 2023ம் ஆண்டு மேற்கு வங்கத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அவர், 'மிஸ் ஆசியா குளோபல்' அழகிப் பட்டம் வென்றவர். கொல்கட்டாவில் தங்கி விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த சாந்தா பால், விளம்பர மாடலாகவும் உள்ளார். தமிழ், ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விசா முடிந்த பிறகும் சாந்தா நா டு திரும்பவில்லை. மேலும் வீடு வாடகைக்கு எடுக்க ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டைகளை போலியாக அச் சிட்டு பயன்படுத்தி வந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சாந்தா பாலுக்கு 8-ம் தேதி வரை காவல் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Barakat Ali
ஆக 03, 2025 14:10

சென்னைக்கு வந்திருந்தா சின்னவரு உங்களுக்காக காரு பந்தயமே நடத்திருப்பாரு..... ????


Jack
ஆக 03, 2025 08:35

யாதும் ஊரே யாவரும் கேளிர் ... தஸ்லிமா நஸிரீனுக்கும் அதனான் சஹானிக்கும் இந்திய குடியுரிமை வழங்கியது இந்தியா ... இந்த அம்மணி இந்து என்பதால் கிடைக்கவில்லையோ ?


Kasimani Baskaran
ஆக 03, 2025 07:29

வைக்கோல்களை அனுப்பி வாதாடி அவர் கும்மிடிப்பூண்டியில் பிறந்தார் என்ற சான்றிதழை காட்டி மீட்டெடுக்கவேண்டும்... தீம்க்கா சிறுபான்மையினர் அணியை நடத்த தகுதியான ஆள் கிடைத்து விட்டார்.


Palanisamy Sekar
ஆக 03, 2025 06:21

ஆஹா தமிழ் சினிமாவிலும் நுழைந்துள்ளார் என்றால் இங்கே உள்ள பலரை வளைத்துபோட்டிருப்பாள் போலும். தமிழகத்தில் கூட வங்கதேசத்தின் அதிக எண்ணிக்கையில் இருக்க கூடும். அவர்களின் ஓட்டுக்களில்தான் திமுக ஜெயித்துவருகின்றது. அரபுக்கல்லூரியில் இதுபோன்ற பலர் இருப்பதாக கூறி ஒருவர் இன்ஸ்ட்டாகிராமில் புதுக்கோட்டையிலிருந்து புலம்பி இருந்தார். அதுபோன்ற பள்ளி கல்லூரிகளிலும் தேர்தல் ஆணையமும் போலீசும் கவனம் செலுத்துவார்களா? தேர்தல் ஆணையம் நிச்சயம் காதுகொடுத்து கேட்கும். அப்போ போலீசு.... ? உயர் அதிகாரிகளால் கைகள் கட்டப்பட்டிருக்குமோ?


raja
ஆக 03, 2025 05:42

வங்க முதல்வர் மமதையின் மகத்துவம்


சமீபத்திய செய்தி