உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேச முதல் பெண் பிரதமர் கலிதா ஜியா இறுதிச் சடங்கு; நாளை டாக்கா செல்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

வங்கதேச முதல் பெண் பிரதமர் கலிதா ஜியா இறுதிச் சடங்கு; நாளை டாக்கா செல்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில், நாளை (டிசம்பர் 31) மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா, 80, இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக இன்று காலமானார். இவரின் மறைவுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்பதால், டாக்காவில் நாளை (டிசம்பர் 31) நடக்கும் இறுதிச் சடங்கில் பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அடுத்து 3 நாட்கள் அரசு துக்க அனுசரிக்கப்படும் என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் இந்திய அரசு மற்றும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாளை (டிசம்பர் 31) டாக்காவுக்குச் செல்வார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Nachiar
டிச 30, 2025 22:42

நீங்கள் இப்பொழுது பாரதத்திற்கு அவசியம் தேவையான ஒரு மனிதர். அதனால் அனாவசிய இடர்களை ஆபத்துக்களை தவிர்த்தல் அவசியம். உங்கள் சேவை நீண்ட காலங்களுக்கு பாரத்திற்கு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். ஜெய் பாரத்


Gugan
டிச 30, 2025 21:05

SIR BE SAFE


கோமாளி
டிச 30, 2025 20:47

Surprising


தமிழ்வேள்
டிச 30, 2025 20:37

ஸ்ரீ ஜெய் ஷங்கர் ஜி, தங்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது... விழிப்புடன் இருங்கள்.... பகவான் ஸ்ரீ ராமர், அஞ்சனை மைந்தன் தங்களுக்கு துணையிருக்கட்டும்....ஜெய் ஹிந்த்...


Somasundaram J
டிச 30, 2025 20:20

THAT SOUNDS GOOD. THIS IS BALANCING.


SUBBU,MADURAI
டிச 30, 2025 19:58

Khaleda Zia gone, Jaishankar flies in. India doesnt forget old allies, even in tough times. Subtle flex to Dhakas interim govt


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை