உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கிகளில் டிபாசிட் விகிதம் கலெக்டர் அறிவுறுத்தல்

வங்கிகளில் டிபாசிட் விகிதம் கலெக்டர் அறிவுறுத்தல்

நொய்டா:“புதுடில்லி அருகே, நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள வங்கிகளில் பணம் டிபாசிட் செய்வது மிகவும் குறைந்துள்ளது,” என, கவுதம் புத்தா நகர் மாவட்ட மணீஷ் குமார் வர்மா கவலை தெரிவித்துள்ளார்.அரசு திட்டங்கள் மற்றும் வங்கிகளில் கடன் வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சூரஜ்பூரில் நடந்தது. வங்கி அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்தக் கூட்டத்தில் கலெக்டர் மணீஷ் குமார் வர்மா பேசியதாவது:கடந்த காலாண்டில் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் வங்கிகளில் பணம் டிபாசிட் விகிதம் 66.19 சதவீதமாக இருக்கிறது. அதேநேரத்தில் பல வங்கிக் கிளைகளில் இந்த விகிதம்-- 60 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.அந்த வங்கிகளில் டிபாசிட் விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு மண்டல மேலாளருக்கு அறிவுறுத்தப்படும். பொருளாதார அமைப்பை மேலும் வலுப்படுத்துவதில் வங்கிகளுக்கு முக்கியப் பங்கு உள்ளது. மாநில மற்றும் மத்திய அரசின் திட்டங்களின் தகுதியான பயனாளிகளுக்கு அதிக முன்னுரிமை அளித்து கடன் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி