உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கி மோசடி: சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையும் அனில் அம்பானி மீது வழக்கு

வங்கி மோசடி: சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையும் அனில் அம்பானி மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எஸ்பிஐ வங்கி ரூ.2,900 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தி மோசடி செய்ததாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ பதிவு செய்த வழக்கு அடிப்படையில், பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனம் மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில் அம்பானி. அவரது தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தை தழுவிய நிலையில், வெவ்வேறு மோசடி வழக்குகளிலும் அவர் சிக்கியுள்ளார்.எஸ்பிஐ வங்கிக்கு ரூ.2,929 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.இதனைத் தொடர்ந்து கடன் பிரச்னையில் திவாலான அவரது நிறுவனமான ஆர்காம்-ஐயும் மற்றும் அனில் அம்பானியையும் மோசடியாளர் என பாங்க் ஆப் பரோடா வங்கி அறிவித்தது. ஜூனில் எஸ்பிஐ வங்கியும், ஆகஸ்ட்டில் பாங்க் ஆப் இந்தியா வங்கியும் ஆர் காமை மோசடி பட்டியலில் இணைத்தது.இந்நிலையில், வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கு அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sudha
செப் 10, 2025 20:20

இது அம்பானி யிடம் இருந்து பணம் கறக்க மாற்று வழி. தவறு செய்திருந்தால் உள்ளே போட வேண்டியது தானே , கேஜரிவால் மாதிரி


தாமரை மலர்கிறது
செப் 10, 2025 19:16

அம்பானி சிறந்த தேசப்பற்றாளர். இவர் வந்கிமோசடி செய்ய வாய்ப்பே இல்லை. இந்தியாவை வளர்த்தெடுத்த பெருமை கொண்ட குடும்பம். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தவறான போக்கை கடைபிடித்துள்ளன. விரைவில் சரிசெய்யும்.


Oviya Vijay
செப் 10, 2025 19:13

இத்தனை வெறுப்புணர்வு கொண்ட திகழ்ஓவியன் சாருக்கு, மோடி ஜி பெயரை உச்சரிக்க தகுதியுள்ளதா...???


திகழ்ஓவியன்
செப் 10, 2025 19:03

என்ன ஆச்சு RAFEL 40000 கோடி இவருக்கு தான் மோடி கொடுத்தார் , ஒரு வேலை எலெக்டர்கள் பாண்ட் வாங்கவில்லையோ . அல்லது இப்படி எல்லாம் செய்து அவர் லாஸ் ஆகிவிட்டார் என்று சொல்லி அவர் வாங்கிய கடன் அனைத்தும் ரத்து ஆக போகுதோ


மகிழ்காவியன் OJAX ANTORIO
செப் 10, 2025 19:46

இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? மோடி அவர்களின் நல்லாட்சியில் அனைத்து அமைப்புகளும் சட்டத்திற்கு உட்பட்டு எந்த பாரபட்சமும் இன்றி செயல்படுகின்றன. மாநிலத்தில் அராஜகம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றை எந்த தயக்கமும் இல்லாமல் ஏற்றுக் கொண்ட நமக்கு இது கொஞ்சம் குழப்பமாகத் தான் இருக்கும்.


Sivakumar
செப் 10, 2025 20:20

அஜித் பவார் ஆயிரம்,கோடிக்கணக்கில் ஊழல் செய்து ஜெயிலில் மாவு ஆட்டப் போகிறார் என்று சொன்னது நம் பிரதமர்தன். இப்போது அவர் துணை முதல்வர். இன்னும் சொல்லனுமா, இல்ல இது போதுமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை