ஆக்ரா : உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே யமுனை ஆற்றில் உயிருக்கு போராடிய, 16 வயது சிறுமியை சமீபத்தில் உள்ளூர்வாசிகள் பத்திரமாக மீட்டனர். சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.இது குறித்து போலீசார் கூறியதாவது:
அலிகாரைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் தன் வீட்டின் அருகே ஆண் நண்பர் ஒருவருடன் பேசியுள்ளார்.இதை பார்த்த அவரது தந்தை, மகளின் படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். அதற்கு சிறுமி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.அதன்பின், மகளிடம் குருகிராமுக்கு சென்று வரலாம் என கூறி, ஏமாற்றி பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். உடன் சிறுமியின் மாமாவும் வந்துள்ளார்.பாம்ரோலி கட்டாரா என்ற பகுதிக்கு சிறுமியை அழைத்து வந்த அவர்கள், மப்ளரால் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றனர். அவர் கூச்சல் போடவே, இருவருமாக சேர்ந்து சிறுமியை துாக்கி யமுனை ஆற்றில் வீசிவிட்டு தப்பி ஓடினர்.ஆற்றில் விழுந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர், அவரை பத்திரமாக மீட்டனர். சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், அவரது தந்தை மற்றும் மாமா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறோம். சிறுமி காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர். கோவை: வங்கியில் ரூ.7.33 கோடி மோசடி செய்த துணை மேலாளர் உட்பட, 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை, அவிநாசி ரோடு லட்சுமி மில் பகுதியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது.அங்கு வடவள்ளியை சேர்ந்த ஜெகன் பழனிசாமி, கிளை துணை மேலாளராகவும், நிவேதா மற்றும் ஷேக் அஷ்ரப் ஆகியோர் காசாளராகவும் பணிபுரிந்து வந்தனர்.இவர்கள் தங்கள் வங்கியின் வாடிக்கையாளர்கள் கென்னடி, ஹரிகிருஷ்ணன், குலோத்துங்கன் உட்பட, 13 பேரை தொடர்பு கொண்டு, தங்களது வங்கியில் இருந்து அவர்களது வங்கி கணக்கிற்கு பணத்தை டெபாசிட் செய்து தருவதாகவும், அந்த பணத்தை தங்களுக்கு எடுத்து தந்தால், நல்ல கமிஷன் தொகை தருவதாகவும் தெரிவித்து உள்ளனர். அதனை ஒப்பு கொண்ட அவர்கள், கமிஷன் தொகையை பெற்றுக் கொண்டு தங்கள் வங்கி கணக்கிற்கு வந்த பணத்தை, அவர்களுக்கு எடுத்துக்கொடுத்தனர்.இவ்வாறு ஜெகன் பழனிசாமி கடந்த ஒரு வருடமாக செய்து வந்தார்.இந்நிலையில் வங்கி நிர்வாகம், வங்கியின் வரவு, செலவு கணக்குகளை சரிபார்த்தனர்.அப்போது ரூ.7.33 கோடி கணக்கில் வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெகன் பழனிசாமியிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார்.தொடர்ந்து விசாரித்ததில் அவர், காசாளர்களுடன் சேர்ந்து வங்கி பணத்தை மோசடியாக, வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிற்கு டெபாசிட் செய்து இருந்தது தெரிந்தது.வங்கியின் மார்க்கெட்டிங் தலைவர் முகமது ஜியாவுதீன், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து கிளை துணை மேலாளர் ஜெகன் பழனிசாமி, 38, காசாளர்கள் நிவேதா, 34, ஷேக் அஷ்ரப், 38 மற்றும் வாடிக்கையாளர்கள் குலோத்துங்கன், 40, கென்னடி, 42, ஹரிகிருஷ்ணன், 48 ஆகிய ஆறு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இந்த மோசடியில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள், 10 பேரின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.டூவீலரில் வந்தவர்கள் பெண்ணிடம் செயின் பறிப்புபெரியகுளம்: பெரியகுளத்தில் பட்டப்பகலில் ரேஷன் பொருட்கள் வாங்கி சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச்செயின் பறித்து சென்றனர்.பெரியகுளம் தென்கரை வடக்கு அக்ரஹாரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி ராமரத்தினம் 60. இவரது மருமகள் நித்யாவுடன் 25. காலை 11:00 மணிக்கு பெருமாள் கோயில் அருகே ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி கொண்டு இருவரும் வீடு திரும்பினர். ராமரத்தினத்திற்கு முன்னால் 50 மீட்டர் இடைவெளியில் நித்யா நடந்து சென்றுள்ளார். டூவீலரில் வந்த இரு மர்மநபர்கள் ராமரத்தினத்திடம் 'சீனிவாசன்' என்பவரது வீட்டின் விலாசம் கேட்டுள்ளனர். எனக்கு தெரியாது என ராமரத்தினம் கூறி முடிப்பதற்குள், கண் இமைக்கும் நேரத்திற்குள்டூவீலர் பின்னால் உட்கார்ந்திருந்த மர்மநபர் ராமரத்தினம் கழுத்தில் அணிந்திருந்த ரூ.1.20 லட்சம் மதிப்பிலான 3 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். தென்கரை எஸ்.ஐ., அழகுராஜா விசாரணை செய்து வருகிறார்.போலீஸ்க்கு சவால்: பெரியகுளத்தில் பட்டப்பகலில் ஹெல்மெட் அணியாத இரு மர்மநபர்கள் செயின் பறிப்பு சம்பவம் நடத்தியது தென்கரை போலீசாருக்கு சவாலாக அமைந்துள்ளது.ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது விழுப்புரம்: விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெ க்டர் கோபி மற்றும் போலீசார், நேற்று மாலை மேல்தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள பிள்ளையார் கோவில் சந்திப்பு பகுதியில் ஆன் லைன் லாட்டரி சீட்டு விற்ற ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்த பழனி, 40; என்பவரை கைது செய்தனர்.கோவிலில் திருட்டு போலீஸ் விசாரணைதிண்டிவனம்: திண்டிவனம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டிவனம், ராஜாங்குளம் பகுதியில் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. நேற்று அதிகாலை 5:45 மணியளவில் அர்ச்சகர் நடராஜன் கோவிலுக்கு சென்று பார்த்தபோது, கோவிலின் பின் பக்கம் உள்ள இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பித்தளை விளக்கு, உண்டியல் பணம், மற்றும் பூஜைக்கு பயன்படுத்தும் பித்தளை, செம்பு குடம் என 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.தகவலறிந்து வந்த திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார், கைரேகை பிரிவு சப் இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி ஆகியோர் தடயங்களை சேகரித்தனர்.இதுகுறித்து கோவில் நிர்வாகி ஜீவரத்தினம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.மணல் கடத்தியவர் மீது வழக்கு விழுப்புரம்: வளவனுார் அருகே மணல் கடத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார் நேற்று சேர்ந்தனுார் ரயில்வே தரைபாலம் அருகே ரோந்து சென்றனர்.அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணலை கடத்தி வந்த தென்குச்சிப்பாளையம் பஞ்சமூர்த்தி மீது போலீசார் வழக்குப் பதிந்து மாட்டு வண்டியை மணலுடன் பறிமுதல் செய்தனர்.லாட்டரி விற்பனை 9 பேர் கைதுசிதம்பரம்; சிதம்பரம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் நகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, மாவட்ட தனிப்படை போலீசார் சிதம்பரம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, பஜனை மடத்தெரு பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக 9 பேரை பிடித்து சிதம்பரம் நகர போலீசில் ஒப்படைத்தனர்.சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து, சபாநாயகர் தெரு வைப்புச்சாவடியை சேர்ந்த தில்லைக்கண்ணு மகன் சிவானந்தம், 27; முருகன், 53; சிதம்பரம் மாரியம்மன் கோவில் தெரு மணிவேல், 40; சாத்தான்குடி பாலமுருகன், 52; சிதம்பரம் முத்துமாணிக்கம் தெரு மாரியப்பன், 38; தொப்பையான் தெரு ராஜேஷ், 35; உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.பொதுமக்களை மிரட்டியவர் கைதுகள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில், ஏமப்பேரைச் சேர்ந்த பச்சமுத்து மகன் ஆதிகேசவன், 22; கையில் கருங்கல்லை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினார்.பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தியதாக, ஆதிகேசவன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.குட்கா கடத்தியவர் கைதுதிருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே குட்கா கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.அரகண்டநல்லுார் சப் இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் மற்றும் போலீசார் நேற்று மதியம் மணம்பூண்டி நான்கு முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, பைக்கில் மூட்டைகளுடன் சந்தேகப்படும்படி வந்த நபரை பிடித்து சோனை செய்தனர். அதில், 156 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், அரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மன்னுநாதன் மகன் இளங்கோவன், 34; எனவும், திருக்கோவிலுாரில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக திருவண்ணாமலையில் இருந்து குட்காவை கடத்தி வந்ததாகவும் தெரிவித்தார். இதன் மதிப்பு மூன்று லட்சம் ரூபாய் ஆகும்.அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து பைக் மற்றும் 156 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, இளங்கோவனை சிறையில் அடைத்தனர்.இரு தரப்பினர் மோதல் 8 பேர் மீது வழக்கு பதிவு கள்ளக்குறிச்சி: தென்சிறுவளூர் கிராமத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.சின்னசேலம் அடுத்த தென்சிறுவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் ராஜிவ்காந்தி, 35; அதே பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல் மகன் வெங்கடேசன். இருவருக்குமிடையே தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.கடந்த ஜனவரி 27ம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.இது குறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில், வெங்கடேசன், ரமேஷ், அஜித்குமார், சீரான் மனைவி கசப்பு, ராஜிவ்காந்தி, மணிகண்டன், ரஞ்சித், மாரி ஆகிய 8 பேர் மீது கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்தனர்.பத்திரிகையாளரின் கார் மீது மர்ம கும்பல் கொடூர தாக்குதல்புனே: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி குறித்து விமர்சித்த மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பத்திரிகையாளரின் காரை, ஒரு கும்பல் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சமூக வலைதளம்பா.ஜ., மூத்த தலைவரான அத்வானிக்கு, நம் நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்கப்படும் என, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.இதுகுறித்து மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் நிகில் வாக்லே, பிரதமர் மோடி மற்றும் அத்வானி குறித்து விமர்சித்தார்.இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், பா.ஜ.,வினர் பலர் தங்கள் கண்டனங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.இதுதொடர்பாக நிகில் வாக்லே மீது பா.ஜ., தலைவர் சுனில் தியோதர் புகார் அளித்ததன்படி, அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்நிலையில், நேற்று மஹாராஷ்டிராவின் புனேவில் உருட்டு கட்டை, இரும்பு ராடு, ஹாக்கி மட்டை, முட்டை போன்றவற்றுடன் ஒரு கும்பல், நிகில் வாக்லேவின் காரை சூழ்ந்து தாக்கியது. இதில், அவரது கார் முற்றிலும் சேதமானது.இதுகுறித்து சமூக வலைதளத்தில் நிகில் வாக்லே குறிப்பிடுகையில், 'இதுவரை என் மீது ஆறு முறை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.நடவடிக்கை
'இதுபோன்ற தாக்குதல்களுக்கு அஞ்சும் கலாசாரம் எங்களிடம் இல்லை; இவை அனைத்தும், போலீசாரின் ஒத்துழைப்புடன் அரங்கேறி உள்ளன' என பதிவிட்டு உள்ளார்.இதுதொடர்பாக மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறுகையில், ''தாக்குதலில் ஈடுபட்டோர் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பர்; அது பா.ஜ.,வினராக இருந்தாலும் சட்டத்தை கையில் எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.