உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மினிமம் பேலன்ஸ் இல்லையென கூறி வங்கிகள் ரூ.8,500 கோடி கட்டாய வசூல்

மினிமம் பேலன்ஸ் இல்லையென கூறி வங்கிகள் ரூ.8,500 கோடி கட்டாய வசூல்

புதுடில்லி: பொதுத்துறை வங்கிகள், குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து, அபராதமாக கடந்த ஐந்து நிதியாண்டுகளில் மட்டும், கிட்டத்தட்ட 8,500 கோடி ரூபாய் வசூலித்துள்ளன.நேற்று பார்லியில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த, நிதித்துறைக்கான மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி இவ்வாறு தெரிவித்தார். வெவ்வேறு வங்கிகள் மற்றும் வெவ்வேறு விதமான கணக்குகளை பொறுத்து, இந்த அபராத தொகை மாறுபடுகின்றன.நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ., கடந்த 2020 - 21ம் நிதியாண்டு முதல், குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிப்பதை நிறுத்திய நிலையில், அதன் பிறகும் இந்த தொகை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பல வங்கிகள் காலாண்டு சராசரி இருப்பு வைத்திருக்காவிடில் அபராதம் வசூலிக்கின்றன. சில வங்கிகள் சராசரி மாதாந்திர இருப்பு வைத்திருக்காமல் இருந்தால், அபராதம் வசூலிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

ஆரூர் ரங்
ஜூலை 31, 2024 15:39

வட்டி கொடுப்பதும் வாங்குவதும் பாவம் என்ற கோட்பாட்டால் குறிப்பிட்ட இனத்தவர் வங்கி கணக்கே வைக்காமல் தங்களுக்குள்ளேயே கமுக்ககமாக பணப்பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். அதனால் மத்திய அரசுக்கு கணக்கும் காண்பிப்பதில்லை. எவ்வித வரியும் கட்டுவதில்லை. இப்படிப்பட்டவர்கள் இங்கு வந்து கருத்துப் போடுவதுதான் வேடிக்கை.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 31, 2024 12:33

மக்கள் கிட்டே சுரண்டி கொழுத்த தொழிலதிபர்களுக்கு வாராக்கடனா தூக்கிக் கொடுப்போம் ....


J.Isaac
ஜூலை 31, 2024 12:21

ஏழைகளின் துன்பத்தில் இன்பம் காணும் ஒன்றிய அரசுக்கு வாழ்த்துக்கள்


S BASKAR
ஜூலை 31, 2024 10:35

சரி 8500 கோடி வசூல் ஆயிடுச்சுல்ல. இனிமேல் என்ன ஓடிப்போன மல்லையா வோட கடன் 9000 கோடிய தள்ளுபடி பண்ணிட வேண்டியதுதானே


S BASKAR
ஜூலை 31, 2024 10:18

இந்த 8000 கோடி கூடவே ஒரு 18 % ஜீஎஸ்டி யும் புடுங்கி இருப்பாங்களே. அதை பத்தி மந்திரி வாயே திறக்கலை


selvaraj m
ஜூலை 31, 2024 09:08

இந்த கட்டணம் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைவர்க்கும் பொருந்தும், சாதாரண மக்களிடம் எவ்வுளவு கட்டணம் வசூலிக்கப் பட்டது வியாபார நிறுவன கணக்கில் எவ்வுளவு வசூலிக்கப்பட்டது என்று சரியான தகவலை கொடுக்கவேண்டும்.


vbs manian
ஜூலை 31, 2024 09:06

பகல் கொள்ளை.


Mario
ஜூலை 31, 2024 08:59

மினிமம் பேலன்ஸ் இல்லாததால் ஏழை மக்களிடம் இருந்து ரூ.8,500 கோடி வசூல்.தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி.


theruvasagan
ஜூலை 31, 2024 08:48

நமது உடமைகளை பேங்க் லாக்கரில் வைக்க சேவைக் கட்டணம் கட்ட வேண்டுமா இல்லையா. அதே மாதிரி நம் பணத்தை வங்கி பாதுகாப்பதற்கு கட்டணம் நிர்ணயிப்பதில் என்ன தவறு. ஆனால் நியாயமான ஒரே மாதிரியான கட்டணம் நாடு முழுவதும் எல்லா வங்கிகளிலும் அமல் படுத்தப்பட வேண்டும்.


S R George Fernandaz
ஜூலை 31, 2024 10:28

ஐயா வள்ளலார் அவர்களே பொருளை அறிந்து பேசவும். உங்கள் அரசியல் முட்டு குடுப்பு அல்ல இது. ஏழைகளின் பட்டினி பாவங்களின் பணம்.


VENKATASUBRAMANIAN
ஜூலை 31, 2024 08:43

முட்டாள்களின் செயல். ஜன் தன் அக்கவுண்ட் மினிமம் பேலன்ஸ் இல்லை. இது கூட தெரியாத கூமுட்டைகள் கமெண்ட் போடுகிறார்கள். முதலில் தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை