உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பி.சி.பாட்டீல் மகள் பா.ஜ.,வுக்கு டாட்டா

பி.சி.பாட்டீல் மகள் பா.ஜ.,வுக்கு டாட்டா

ஹாவேரி: ஹாவேரி ஹிரேகெரூர் தொகுதி பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., - பி.சி.பாட்டீல். இவர், முன்னாள் அமைச்சரும் ஆவார். இவரது மகள் ஸ்ருஷ்டி. ஹாவேரி மாவட்ட பா.ஜ., மகளிர் அணி தலைவியாக இருந்தார். இந்நிலையில், மாவட்ட மகளிர் அணி தலைவி பதவியில் இருந்து விலகுவதாக கூறி, ஹாவேரி மாவட்ட பா.ஜ., தலைவர் அருண்குமார் புஜாரிடம், ஸ்ருஷ்டி நேற்று கடிதம் கொடுத்தார்.அவர் கூறுகையில், ''கட்சியின் சாதாரண தொண்டராக தொடருவேன்; ஓராண்டு தலைவியாக இருந்தது மகிழ்ச்சியான விஷயம். எதிர்பார்த்த அளவுக்கு தலைவி பதவியில் இருந்து, எதையும் சாதிக்கவில்லை என்று தோன்றியது. இதனால் ராஜினாமா செய்கிறேன். பதவி வேறு யாருக்காவது கிடைக்கட்டும். அவருக்கு உறுதுணையாக இருப்பேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Bhaskaran
பிப் 11, 2025 11:41

ரெம்ப ஆசையில்லை இந்தியாவின் மிக உயரிய விருது கேட்டு தரலேங்கிற கோபமா யிருக்கலாம்


SRIKANTH SUBRAMANIAN
பிப் 10, 2025 10:04

உங்க அதிபருக்கு பாரத் ரத்னா எதிர்பார்த்து பத்ம விருது கொடுத்த கோபமா???இல்ல வேற தொழில் அனுமதி கேட்டு கிடைக்காத கோபமா???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை