உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இறுதி ஊர்வலத்தில் படையெடுத்த தேனீக்கள்: சாலையில் உடலை போட்டு உறவினர் ஓட்டம்

இறுதி ஊர்வலத்தில் படையெடுத்த தேனீக்கள்: சாலையில் உடலை போட்டு உறவினர் ஓட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விஜயவாடா: ஆந்திராவில் இறுதி ஊர்வலத்தில் தேனீக்கள் படையெடுத்ததால், சாலையிலேயே சடலத்தை போட்டுவிட்டு உறவினர்கள் ஓட்டம் பிடித்தனர். தெலுங்கானாவின் சித்திபேட் மாவட்டத்தில் உள்ள பட்டபத்தியில் கடந்த மாதம், 72 வயது முதியவர் இறந்தபோது, இறுதிச் சடங்கு நடத்த அவரது உடலை உறவினர்கள் எடுத்துச் சென்றனர்.

70 வயது மூதாட்டி

அப்போது, இறுதி ஊர்வல பாதையில் தேனீக்கள் புகுந்து, ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை கொட்டியது. அதில் உயிரிழந்தவரின் மனைவி, குடும்பத்தினர் உட்பட 40 பேர் காயமடைந்தனர். இதுபோல, உ.பி.,யிலும் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள நாகல அரிச்சந்திரா கிராமத்தில், கடந்த 17ம் தேதி, 70 வயது மூதாட்டியின் இறுதி ஊர்வலத்தில் தேனீக்கள் புகுந்தது. இதில், மூதாட்டியின் உடலை சுமந்து சென்றவர்கள் உட்பட 30 பேர் காயமடைந்தனர். மூதாட்டி உடலை போட்டுவிட்டு, உறவினர்கள் ஓட்டம் பிடித்ததால், எட்டு மணி நேரம் தாமதத்துக்கு பின், போலீசார் உதவியுடன் இறுதிச்சடங்கு நடந்தது. இந்த சம்பவங்களைப் போலவே, ஆந்திராவிலும் தேனீ துரத்தல் சம்பவம் நேற்று நடந்தது. இங்குள்ள அல்லுரி சித்தராமராஜு மாவட்டத்தின் எடபக்கா தாலுகாவில் உள்ள கவுரிதேவி பேட்டையில் ஒருவர் உயிரிழந்தார். வீட்டில் இறுதிச் சடங்குகள் நடந்த பின், உடலை அடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக உறவினர்களும், ஊர் மக்களும் எடுத்துச் சென்றனர்.மரங்கள் நிறைந்த பகுதி யில் இறுதி ஊர்வலம் சென்றது. அப்போது ஊர்வலத்தில் சென்றவர்கள் பட்டாசுகளை வெடித்தனர். பட்டாசு சத்தம் கேட்டதால் திடீரென ஏராளமான தேனீக்கள் படையெடுத்து வந்தன.

அட்டகாசம்

இறுதி ஊர்வலத்தில் சென்றவர்களை சரமாரியாக தேனீக்கள் கொட்டியதில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால், மற்றவர்கள், தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக, சடலத்தை சாலையிலேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.மற்றவர்களுக்கு, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பல மணி நேரத்துக்குப் பின், தேனீக்கள் அட்டகாசம் குறைந்ததும், சாலையில் விட்டுச்சென்ற உடலை எடுத்துச் சென்று உறவினர்கள் அடக்கம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Karthik
மார் 30, 2025 20:56

இறந்தவரை அடக்கம் செய்ய போகும்போதாவது கொஞ்சம் அமைதியாக அடக்கத்துடன் சென்றிருக்கலாம். அமைதி இழந்த இயற்கை ஸ்பாட் பனிஷ்மென்ட் கொடுத்திடுச்சு போல..


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 30, 2025 08:56

ஆந்திராவிலா தெலுங்கானாவிலா


ராஜ்68
மார் 30, 2025 08:24

இறுதி ஊர்வலம் என்றால் அமைதியாகச் செல்ல வேண்டும் அதுதான் மரியாதை. ஆனால் இவர்களோ லிட்டர் கணக்கில்குடித்து விட்டு ஆட்டம் பாட்டம் தாரை தப்பட்டம் வீதி எல்லாம் பூவ போடுவது அதிபயங்கர ஓசை ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிப்பது இதெல்லாம் தேவையா. வீதிகளை அசுத்தப்படுத்தி பட்டாசு வெடித்து அமைதியைக் கெடுக்கும் செயல்களுக்கு தடை கொண்டு வர வேண்டும்.


Kasimani Baskaran
மார் 30, 2025 07:14

வினோதமான நிகழ்வு...


Raj
மார் 30, 2025 07:05

நல்லது தான். இறந்த உடலை வீதி வீதியாக கொண்டு சென்று, போகும் வழி எல்லாம் அந்த இறந்த உடலின் மேல் உள்ள பூக்களை அந்த வீதிகளில் வீசி, பொரியை போட்டு அதை மிதித்து தான் வீட்டிற்குள் செல்ல வேண்டும், என்ன கலாசாரமோ.. தேனீக்கள் செய்தது சரியே.


Kalyanaraman
மார் 30, 2025 06:49

தீபாவளி போன்ற பண்டிகைகளின் போதும் கோயில் திருவிழாக்களின் போதும் அந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. ஆனால் துக்கமான இறப்பு நிகழ்ச்சிக்கு எப்படி பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள் புரியவில்லை ?? ?


KRISHNAN R
மார் 30, 2025 06:23

ரோட்டில் பூ போடுவது,, பட்டாசு இதெல்லாம் டிஜிட்டல் காலத்தில் தேவையா.. தேனீக்களை சீண்டியதால். வந்த வினை


Appa V
மார் 30, 2025 05:44

ரோஜாப்பூ மாலை போட்டிருப்பாங்க ..தேன் குடிக்க வந்திருக்கலாம் ..


Rajinikanth
மார் 30, 2025 05:10

போக்குவரத்துக்குதான் இடைஞ்சல் செஞ்சுட்டு இருந்தாங்க. இப்போ பட்டாசு வெடிச்சு தேனீக்களையும் தொல்லை பண்ணா இப்டி தான் நடக்கும்


சமீபத்திய செய்தி