தாமதமான மன்னிப்பு!
ராகுல், மிகவும் தாமதமாக மன்னிப்பு கோரியுள்ளார். முதலில், எமர்ஜென்சி அமல்படுத்தியதற்கும், சீக்கிய கலவரத்திற்கும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்குபின் பிற்படுத்தப்பட்ட பிரிவினரிடம் அவர் மன்னிப்பு கோர வேண்டும். இதுதவிர, ரபேல் விவகாரத்திலும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். சிவ்ராஜ் சிங் சவுகான் மத்திய அமைச்சர், பா.ஜ.,கீழ்த்தரமான அரசியல்!
நீதிபதிகள் யஷ்வந்த் வர்மா மற்றும் சேகர் யாதவ் ஆகியோருக்கு எதிராக வெவ்வேறு நிலைப்பாடுகளை மத்திய அரசு கொண்டுள்ளது. இது, கீழ்த்தரமான அ ரசியலின் வெளிப்பாடு . ஒரு நீதிபதிக்கு எதிராக சீற்றமாகவும்; மற்றொரு நீதிபதிக்கு எதிராக மவுனமாகவும் நடவடிக்கை எடுப்பது நியாயமற்றது. அபிஷேக் மனு சிங்வி ராஜ்யசபா எம்.பி., காங்கிரஸ்
காப்பாற்ற முடியாது!
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா வின் பதவியை இந்த முறை யாராலு ம் காப்பாற்ற முடியாது. கொள்ளை, லஞ்சம் நிறைந்த ஆட்சிக்கு முடிவு ஏற்படும். தேர்தல் கமிஷனின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் வாயிலாக மேற்கு வங்கத்தில் உள்ள வங்கதேச மற்றும் ரோஹிங்கியா மக்கள் வெளியேற்றப்படுவர். இது, போலி ஓட்டுகளை தடுக்கும். சுவேந்து அதிகாரி மே.வங்க சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், பா.ஜ.,