உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிலுவை வரி வசூலுக்கு பெங்., மாநகராட்சி அறிவித்த திட்டம்... தோல்வி! எதிர்பார்த்தது 1,000 கோடி; வசூலானது ரூ.463 கோடி மட்டுமே

நிலுவை வரி வசூலுக்கு பெங்., மாநகராட்சி அறிவித்த திட்டம்... தோல்வி! எதிர்பார்த்தது 1,000 கோடி; வசூலானது ரூ.463 கோடி மட்டுமே

பெங்களூரு : பல ஆண்டுகளாக, சொத்து வரி செலுத்தாமல் பாக்கி வைத்தவர்களுக்காக, பெங்களூரு மாநகராட்சி, 'ஒன் டைம் செட்டில்மென்ட்' என்ற ஓ.டி.எஸ்., திட்டத்தை செயல்படுத்தியது. ஆனால், இந்த திட்டம் வெற்றி பெறவில்லை. 1,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிபார்த்த நிலையில், வசூலானது 463 கோடி மட்டுமே.பெங்களூரு மாநகராட்சி கருவூலத்தை நிரப்புவதில், சொத்து வரி முக்கிய பங்கு வகிக்கிறது. வளர்ச்சி பணிகளுக்கு சொத்து வரியை மட்டுமே, மாநகராட்சி நம்பியுள்ளது. ஒவ்வொர் ஆண்டும் அதிகமான வருவாயை எதிர்பார்த்து, பட்ஜெட் தாக்கல் செய்கிறது. ஆனால் எந்த ஆண்டும் இந்த இலக்கை எட்டியதாக உதாரணங்களே இல்லை.பொது மக்களிடம் சொத்து வரியை வசூலிப்பதற்குள், அதிகாரிகளுக்கு போதும் போதும் என்றாகிறது. வரி செலுத்துவதில் பலர் ஆர்வம் காண்பிப்பது இல்லை. வரி வசூலை அதிகரிக்க மாநகராட்சி பல சலுகைகளை அளித்துள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில், சொத்து வரி செலுத்தினால் வரி தொகையில், 5 சதவீதம் தள்ளுபடி சலுகை அளிக்கிறது. அப்போதும் வரி வசூல் அதிகரிக்கவில்லை.இதே காரணத்தால், அரசின் உத்தரவுப்படி தள்ளுபடி சலுகையை ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது. இந்த சலுகையை மக்கள் பயன்படுத்துவதில், ஆர்வம் காண்பிக்கவில்லை. ஆண்டுக்கு ஆண்டு வரி பாக்கி வைத்துள்ளோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வரி பாக்கியை வசூலிக்கும் நோக்கில், 'ஒன் டைம் செட்டில்மென்ட்' எனும் ஓ.டி.எஸ்., திட்டத்தை மாநில அரசு, நடப்பாண்டு பிப்ரவரி 27ல் செயல்படுத்தியது.இதற்கு முன் ஆண்டுக்கணக்கில் வரி பாக்கி வைத்துள்ளோரிடம், அபராதம் மற்றும் வட்டியுடன் மாநகராட்சி வரி வசூலிக்கும். பாக்கி வைத்துள்ள வரியை மொத்தமாக செலுத்தினால், அவர்கள் அபராதமோ அல்லது வட்டியோ செலுத்த வேண்டியது இல்லை. இவர்கள் ஒரே நேரத்தில் வரி நிலுவையை செலுத்தினால், ஓ.டி.எஸ்., திட்டத்தின் பயனை பெறலாம்.இந்த சலுகையால், 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, வரி வசூலாகும் என, பெங்களூரு மாநகராட்சி எதிர்பார்த்தது. ஆனால் இதுவரை வெறும் 463.03 கோடி ரூபாய் மட்டுமே வசூலானது. இது அதிகாரிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.பெங்களூரில் 5.51 லட்சம் சொத்துதாரர்கள் உள்ளனர். இதில் பாதியளவு சொத்து உரிமையாளர்கள் மட்டுமே, ஓ.டி.எஸ்., சலுகையை பயன்படுத்தி கொண்டனர். 3.24 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம், 624 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க வேண்டியுள்ளது. இந்த சலுகை ஜூலை 31ல் முடிவடைகிறது. இன்னும் 20 நாட்களே மிச்சம் உள்ளன. அதற்குள் இலக்கை எட்டுவது கஷ்டம் என, அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:நகரில் 5 முதல் 7 லட்சம் சொத்துகள், வரி எல்லைக்குள் வரவில்லை. சிலர் ஓ.டி.எஸ்., சலுகையை பயன்படுத்தி தங்கள் சொத்துகளை, வரி எல்லைக்குள் சேர்த்துள்ளனர். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த அளவில், வரி வசூலாகவில்லை. சலுகையை பயன்படுத்தி, வரி செலுத்துவதில், மக்கள் ஆர்வம் காண்பிக்கவில்லை.வரி பாக்கி வைத்துள்ள 3.95 லட்சம் சொத்துதாரர்களுக்கு, நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதில் 70,000 சொத்துதாரர்கள் மட்டுமே, வரியை செலுத்தினார். மற்றவர்கள் நோட்டீசை பொருட்படுத்தவில்லை. சிலர் சொத்துகளை குறைவாக அறிவித்து, வரி ஏய்ப்பு செய்துள்ளனர். இவர்களுக்கும் நோட்டீஸ் அளித்துள்ளோம்.கடந்தாண்டுடன் ஒப்பிட்டால், நடப்பாண்டு சொத்து வரி வசூல் குறைந்துள்ளது. 2023ல் ஏப்ரல் முதல், ஜூன் இறுதி வரை 2,287 கோடி ரூபாய் வரி வசூலானது. ஆனால் இம்முறை ஜூலை 7 வரை, 1,758 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

வசூலான வரி அளவு (பிப்ரவரி 27 முதல், ஜூலை 7 வரை)

மண்டலம் - தொகைதாசரஹள்ளி - ரூ. 16.37 கோடிபொம்மனஹள்ளி - ரூ.73.09கிழக்கு - ரூ. 70.57 கோடிமஹாதேவபுரா - ரூ. 109.37 கோடிஆர்.ஆர்.நகர் - ரூ. 33.78 கோடிதெற்கு - ரூ. 71.94 கோடிமேற்கு - ரூ. 50.83 கோடிஎலஹங்கா - ரூ. 36.27 கோடி***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்