உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய வடிவத்தில் பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்: சிவகுமார்

புதிய வடிவத்தில் பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்: சிவகுமார்

பெங்களூரு: ''பெங்களூருக்கு புதிய வடிவம் அளிக்கும் நோக்கில், முதல்வர் சித்தராமையா பட்ஜெட்டில், முக்கிய திட்டங்கள் அறிவித்துள்ளார். இதற்கு தகுந்த படி, பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.பெங்களூரு பல்கலைக்கழகத்தின் ஞானபாரதி வளாகத்தில் நேற்று நடந்த 'வீட்டு வாசலுக்கு அரசு திட்டம் என்ற விழாவில், துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:பெங்களூரின் புதிய திட்டங்களுக்கு, வருவாய் திரட்ட பல திட்டங்கள் உள்ளன. பெங்களூரில் மெட்ரோ ரயில் இயங்கும் பாதைகளில், மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்துள்ளோம். இது குறித்து, மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்பியுள்ளோம்.பெங்களூருக்கு புதிய வடிவம் அளிக்கும் நோக்கில், முதல்வர் சித்தராமையா பட்ஜெட்டில், முக்கிய திட்டங்கள் அறிவித்துள்ளார். இதற்கு தகுந்த படி, பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

சுரங்க சாலை

யஷ்வந்த்பூரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண, சுரங்க சாலை அமைப்பது குறித்து, திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. சுமனஹள்ளி, கோரகுன்டே பாளையா உட்பட, பல இடங்களில் திட்டம் செயல்படுத்தப்படும். இதுவரை 12 தொகுதிகளில், இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 20,000 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.முதல்வரும், இரண்டு முறை மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சி நடத்தினார். இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள், தங்களின் பிரச்னைகளை கூறிக்கொண்டனர். இந்த மனுக்களை கவனிக்க, தனி அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.நீங்கள் பிரச்னைகளுடன், எங்களை தேடி வரக்கூடாது என்பதால், நாங்களே உங்கள் வீட்டு வாசலுக்கு வருகிறோம். அனைத்து பிரச்னைகளையும், ஒரே நாளில் தீர்த்து வைக்க முடியாது. படிப்படியாக தீர்த்து வைப்போம். அரசு அலுவலகங்களில், அதிகாரிகள் பணியாற்றா விட்டால் மட்டுமே, நீங்கள் உங்கள் பிரச்னைகளை எங்களிடம் கொண்டு வருகிறீர்கள்.மின்சாரத்துறை மூலம், உங்களின் வீட்டின் மாடியில், சோலார் மின்சாரம் பேனல் பொருத்த அரசு மானியம் வழங்கும். விலை உயர்வால் அவதிப்படும் மக்களுக்கு, நிவாரணம் வழங்குவது அரசின் நோக்கமாகும்.

மனு அளிக்க அறிவுரை

வாக்குறுதி திட்டங்களில், ஏதாவது ஒரு திட்டம் உங்களுக்கு கிடைக்கா விட்டால், மனு அளிக்கலாம். உங்களின் பட்டா, பென்ஷன் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்கலாம். சமீபத்தில் இந்த தொகுதியில், ஆவணங்களை ஆய்வு செய்த போது, சில அதிகாரிகள் ஆவணங்களை திருத்த முயற்சித்தது தெரிந்தது. அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கட்டட தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அரசு சலுகைகள் கிடைக்கும். வியாபாரிகள் நடைபாதையில் கடைகளை போடாமல், தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்ய வேண்டும்.ஆர்.ஆர்.நகரில் ஆழ்துளை கிணறு தோண்டுவது குறித்து, அதிகாரிகளுடன் பேசுவேன். பெங்களூருக்கு 6 டி.எம்.சி., தண்ணீர் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வறட்சி சூழ்நிலை உள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. மேலும் ஆழமாக போர்வெல் தோண்டுவது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, நாங்கள் 200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை