உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய-அமெரிக்க இடையே மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்

இந்திய-அமெரிக்க இடையே மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமெரிக்காவிடம் ட்ரோன்கள் வாங்குவதற்காக இந்தியா- அமெரிக்கா இடையே 3.1 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது, இந்திய- அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் இந்திய ராணுவ பயன்பாட்டிற்காக அமெரிக்காவிடமிருந்து 3.1 பில்லியன் டாலர் மதிப்பில் 31 எம்.க்யூ.9பி ரக ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் வாங்குவது, நவீன ஏவுகணைகள், தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் வாங்கிட ராணுவ ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் , இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் சமீபத்தில் தெரிவித்தது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு தொடர்பாக அமைச்சரவை குழு இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன் மூலம் இந்தியா -அமெரிக்க இடையே மிகப்பரெிய ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.மொத்தம் 31 ட்ரோன்களில் 15 ட்ரோன்கள் இந்திய கடற்படைக்கும், 8 ட்ரோன்கள் ராணுவத்திற்கும், 8 ட்ரோன்கள் விமானப் படைக்கும் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த ட்ரோன்களை இந்தியா என்ன செய்யும்?*இந்த ட்ரோன்கள் கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் திறன் கொண்டவை எதிரி இலக்குகளை நோக்கி ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளை வீசும் திறன் கொண்டவை.நீண்ட தூரம் பறந்து உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் கண்காணிப்பை மேற்கொள்ளும் திறன் கொண்டது. மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணம், தேடுதல் மற்றும் மீட்பு, வான்வழி முன்னறிவிப்பு, மின்னணு போர், மேற்பரப்பு எதிர்ப்பு போர் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் ஆகியவற்றிலும் பயன்படுத்தலாம்.* அதுதவிர போதைப் பொருள் கடத்தல், கடற்கொள்ளையர் பிரச்னை போன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்கவும் இந்த ட்ரோன்களை பயன்படுத்தலாம்.இந்தியா தனது எல்லைகளில் கண்காணிப்புத் திறனை அதிகரிக்கவும், அச்சுறுத்தல்களை மிகவும் திறம்படக் எதிர்கொள்ளவும், குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதைக் கண்காணிக்கவும் பயன்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Saravanan
அக் 11, 2024 05:49

மிடில் ஈஸ்ட்டின் பாரிஸ் லெபனன் லெபனன் 1943ல சுந்திரம் அடையும் போது கிருஸ்துவர்கள் எண்ணிக்கை 76% இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 18% 1974ல் ஹிஸ்புல்லா புரட்சிபடை லெபனனை கைபற்றும் போது கிருஸ்த்துவர்களின் எண்ணிக்கை 52% இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 48% இப்போது இஸ்லாமியர்கள் 84%கிருத்துவர்கள் 16% சுற்றிலும் இஸ்ரேலை தவிர இஸ்லாமிய நாடுகளால் சூழப்பட்ட நாடு லெபனன் ஏறக்குறைய இந்தியாவை போல 2%ம் மட்டுமே அதிகமாக இருந்த கிருத்துவர்களால் முஸ்லீம்கள் கொடுமைப்படுத்துகிரார்கள் என்ற நரேட்டிவ்வை பரவ விட்டு லெப்ட் லிபரல்கள் கம்யூனிசம் என்ற பெயரில் உள்ளே நுழைந்து திவிரவாத தாக்குதலால் கிருத்துவர்களை விரட்டி விட்டு நாட்டை ஆக்கரமித்து ஜனநாயக நாட்டை இஸ்லாமிய நாடாக மாற்றினார்கள் லெபனனனோட இந்த நிலமை மிக விரைவில் இந்தியாவுக்கு வரும்


Kasimani Baskaran
அக் 10, 2024 05:41

இந்த வகை டிரோன்கள் இந்திய இராணுவத்தில் பலத்தை பல மடங்கு அதிகரிக்கும். இந்தியாவும் அதி நவீன டிரோன்களை உருவாக்கி விமானப்படையில் சேர்க்க வேண்டும்.


நிக்கோல்தாம்சன்
அக் 10, 2024 05:23

உள்ளேயே இருக்கும் ட்ராவிடிய அயலக அணியின் ஜாபர் , அமீர் போன்றோர் கடத்தும் பொருட்களும் இதில் சிக்குமா?


அப்பாவி
அக் 10, 2024 03:50

நம்மாள் போனாலே அங்கே அவிங்களுக்கு வேட்டைதான். பதிலுக்கு ஒரு ஆயிரம் H1 விசாக்கள் குடுத்துருவாங்க.


hari
அக் 10, 2024 11:45

என்ன ஆனாலும் உனக்கு 200 ரூபாவும் ஓசி பிரியாணியும் உண்டு..... அப்பப்போ அந்த பாஞ்சு லட்சம் பஞ்ச் மறக்காதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை