மேலும் செய்திகள்
டிப்பர் லாரி மோதி 10 செம்மறி ஆடுகள் பலி
02-Nov-2025
பாட்னா: பீஹாரில் ஆட்டோவும், சரக்கு லாரியும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.இதுபற்றிய விவரம் வருமாறு; பீஹாரில் உள்ள ஷேக்பரா-சிகந்திரா சாலையில் 12 பேருடன் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. மனின்டா என்ற கிராமம் அருகே வந்த போது, ஆட்டோவும், எதிரே வந்த சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதியது. இதில் ஆட்டோ முற்றிலும் நொறுங்கியது.இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்பட்ட போது, ஆட்டோ டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
02-Nov-2025