உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் பா.ஜ., ஆதரவுடன் மீண்டும் முதல்வரானார் நிதீஷ்குமார்

பீஹாரில் பா.ஜ., ஆதரவுடன் மீண்டும் முதல்வரானார் நிதீஷ்குமார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: இன்று காலை பீஹார் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நிதீஷ்குமார், பா.ஜ., ஆதரவுடன் மாலை மீண்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிதீஷ்குமார் முதல்வராக பதவியேற்பது இது 9வது முறையாகும். பா.ஜ.,வை சேர்ந்த 2 பேர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.

பரபரப்பு

பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மகாகட்பந்தன் கூட்டணி ஆட்சி இருந்தது. கூட்டணி அரசில் இருந்து விலகி, மீண்டும் பா.ஜ.,வுடன் நிதீஷ் குமார் கூட்டணி அமைக்கப் போவதாக கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fx07tkb5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று காலை தனது கட்சி தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன் நிதீஷ்குமார் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் முதல்வருக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நிதீஷ்குமார் கவர்னர் மாளிகையில் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். நிதீஷின் ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.

சரியாக நடக்கவில்லை

பிறகு நிதீஷ்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‛‛பீஹார் முதல்வர் பதவியை இன்று நான் ராஜினாமா செய்துவிட்டேன். அமைச்சரவையை கலைக்கவும் கவர்னரிடம் பரிந்துரைத்துள்ளேன். இண்டியா கூட்டணியை நான் தான் உருவாக்கினேன். ஆனால் விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. நான் காயப்படுத்தப்பட்டேன். எனவே இண்டியா கூட்டணியை விட்டு வெளியேறி விட்டேன்'' எனக்கூறினார்.

கவர்னர் ஏற்பு

நிதீஷ்குமாருக்கு ஆதரவு தெரிவிக்கும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் கவர்னரிடம் அளிக்கப்பட்டது. இதனை கவர்னர் ஏற்றுக்கொண்டார். பிறகு, மாநிலத்தில் ஆட்சி அமைக்க நிதீஷ்குமார் உரிமை கோரினார்.

9வது முறை

இன்று மாலை 5:00 மணியளவில் கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடந்தது. இதில், நிதீஷ்குமார் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். கவர்னர் ராஜேந்திர அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

8 அமைச்சர்கள்

பா.ஜ.,வின் சம்ராட் சவுத்ரி விஜய் சின்ஹா, பிரேம் குமார், ஐக்கிய ஜனதா தளத்தின் ஷரவோன் குமார், பிஜேந்திர பிரசாத் யாதவ், விஜய் குமார் சவுத்ரி, மதசார்பற்ற ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சி தலைவர் சந்தோஷ் குமார் சுமன், சுயேச்சை எம்.எல்.ஏ., சுமித் குமார் சிங் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அதில் சம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோருக்கு துணை முதல்வர் அந்தஸ்து அளிக்கப்பட்டு உள்ளது.நிதீஷ்குமார் பதவியேற்கும் போது பா.ஜ.,வினர் ஸ்ரீராம் என கோஷம் போட்டனர். பதவியேற்பு விழாவில் பாஜ., தலைவர் நட்டா, லோக்ஜனசக்தியின் சிராக் பஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி வாழ்த்து

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பீஹாரில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும். மாநிலங்களின் வளர்ச்சிக்கு எந்தக் கல்லையும் விட்டு வைக்காது. முதல்வராக பதவியேற்ற நிதீஷ்குமாருக்கும், துணை முதல்வராக பதவியேற்ற சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முழு அர்ப்பணிப்புடன் மக்கள் சேவை செய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ