உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் பத்திரிகையாளர்களுக்கு ஜாக்பாட்: ஓய்வூதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு

பீஹாரில் பத்திரிகையாளர்களுக்கு ஜாக்பாட்: ஓய்வூதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.பீஹாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. போலி வாக்காளர்களை தடுக்கும் வகையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. ஆளும் தே.ஜ., கூட்டணி அரசு ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது. பீஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 26) பத்திரிகையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:பீஹார் பத்ரகார் சம்மான் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் மாதம் ரூ.6,000க்கு பதிலாக ரூ.15,000 ஓய்வூதியத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஓய்வூதியம் பெறும் பத்திரிகையாளர்கள் இறந்தால், அவர்களைச் சார்ந்திருக்கும் நபருக்கு (கணவன் (அ) மனைவி) வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.3 ஆயிரத்திற்கு பதிலாக ரூ.10 ஆயிரம் ஓய்வூதியத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தில் பத்திரிகையாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகையாளர்கள். அவர்களுக்கு சமூக வளர்ச்சியில் முக்கிய பங்கு உண்டு. பத்திரிகையாளர்கள் தங்கள் பத்திரிகை சேவையை பாரபட்சமின்றிச் செய்யவும், ஓய்வுக்குப் பிறகு மரியாதைக்குரிய முறையில் வாழவும், ஆரம்பத்தில் இருந்தே பத்திரிகையாளர்களின் வசதிகளை நாங்கள் கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D Natarajan
ஜூலை 26, 2025 11:50

உலக அநியாயம். பத்திரிகையாளர் அரசாங்கம் வேலை செய்பவர்களா? எப்படி பென்ஷன் கொடுக்கலாம். யார் வீட்டு பணம் . புதிய சட்டம் கொண்டு வரவேண்டும். வருமான வரி செலுத்துபவர்களுக்கு 2 வோட்டு மற்றவர்களுக்கு 1 வோட்டு. ஓட்டின் வலிமை அப்போது தெரியும்


Bhaskaran
ஜூலை 26, 2025 11:20

கேரளாவில் பத்திரிகை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனைத்து தொழிலாளிகளுக்கும் பத்திரிக்கை யார் மற்றும் பிறதொழிலாளருக்கும்மாதம்3000 ரூபாய் ஓய்வூதியமாக அம்மாநில அரசு வழங்குகிறது


முருகன்
ஜூலை 26, 2025 11:06

இதனால் தேர்தல் முடியும் வரை ஆட்சியில் நடக்கும் தவறுகளை வெளிபடுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது மக்கள் வரிப்பணம் தானே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை