உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனரீதியாக பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஆரோக்கியமாக இல்லை; சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

மனரீதியாக பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஆரோக்கியமாக இல்லை; சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இல்லை என ஜன்சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.டில்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்தை பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் புறக்கணித்தது குறித்து பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: நிதிஷ் குமார் ஆரோக்கியமாக இல்லாததால் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர் உடல் ரீதியாகவும், மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார். மிகவும் ஏழ்மையான மாநிலமான பீஹாரின் முதல்வர், வளர்ச்சிக்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.ஆனால் இன்று தே.ஜ., கூட்டணி கட்சி முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளார். அவர் பீஹார் சட்டசபை தேர்தலில் அதிக இடங்களைப் பெற பேரம் பேசச் சென்றுள்ளார். ஒரு பொதுவான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் தேர்வில் தேர்ச்சி பெற உடல் மற்றும் மருத்துவ பரிசோதனைகளை எடுக்க வேண்டும். ஆனால் அவரது பெயர் கூட நினைவில் இல்லாத மாநில முதல்வருக்கு அத்தகைய எதுவும் தேவையில்லை. பீஹாரில் நிதிஷ்குமாருக்கு ஆதரவு இருப்பதால் பா.ஜ., அவரை முதல்வராக வைத்துள்ளது. நிதிஷ் குமாரை தேர்தல் வரை முதல்வராக வைத்திருக்க வேண்டியது பா. ஜ.,வின் கட்டாயம். அவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள் என்றால், அவர் அடுத்த கட்சிக்கு இடம் மாறுவார். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Barakat Ali
மே 25, 2025 23:45

மற்ற மாநில முதல்வருக்கு மன ஆரோக்கியம் சரியா இருக்குதா ????


venugopal s
மே 25, 2025 22:17

அது தான் அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்த போதே எங்களுக்குத் தெரியுமே!


Venugopal, S- Taambrass
மே 26, 2025 08:22

கோப்பால் அப்போ கட்டு மரம் பீ ஜே பி யுடன் கூட்டணி வைத்தபோது உனக்கு என்ன தெரிந்தது?


ஆரூர் ரங்
மே 25, 2025 22:06

உங்க உதவியால் வென்ற ஒருவர்கூட அவ்வப்போது லண்டனின் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார். இது தெரிந்தும்தானே 3800000000 க்கு ஆசைப்பட்டு ஆலோசனை கொடுத்தீர்?


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 25, 2025 20:38

பிரசாந்த் கிஷோர் எப்போது டாக்டர் ஆனார்.


Ramesh Sargam
மே 25, 2025 20:22

ஆனால் பணரீதியாக எல்லா அரசியல்வாதிகளும் மிக மிக அயோக்கியமாக இருக்கிறார்கள்.


கல்யாணராமன்
மே 25, 2025 20:17

உமக்கு மனநலம் சரியில்லை என்று கேள்விப்பட்டேன். உண்மையா?


SUBBU,MADURAI
மே 25, 2025 20:10

இது உளவியல் ரீதியாக நிதீஷ்குமாரையும் அவரது கட்சியினைரையும் தாக்குவதற்கு ஒப்பானது. ஆனால் இந்த பிகேவின் தேர்தல் உத்திகள் அவரின் சொந்த மாநிலமான பீகாரில் மட்டும் செல்லுபடியாக மாட்டேன்கிறது அதனால் தான் அவர் இது போன்று உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.


சமீபத்திய செய்தி