மேலும் செய்திகள்
டில்லி குண்டு வெடிப்பை நிகழ்த்திய சதிகாரன் உமரின் பழைய வீடியோ!
1 hour(s) ago | 6
அப்போலோ புரோட்டான் டாக்டர் நாளை புதுச்சேரி வருகை
7 hour(s) ago
மான்கள் பலி 31 ஆனது: நோய் தடுப்பு பணி தீவிரம்
7 hour(s) ago
பாட்னா: எங்களின் நேர்மையான முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன, பலனில்லை. இருப்பினும் பீஹார் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார். பீஹார் தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்கள் கடந்துவிட்டன. முன் எப்போதும் இல்லாத வகையில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்று வெற்றியை பெற்றது. தேஜ கூட்டணிக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.அடுத்த ஒரு சில நாட்களில் பீஹார் முதல்வராக நிதிஷ்குமார் பொறுப்பேற்க உள்ளார். அதை தொடர்ந்து அடுத்து வரக்கூடிய நாட்களில் அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தோல்விக்கான காரணங்களை மகாகட்பந்தன் எதிர்க் கட்சிகள் கூட்டணி ஆராய்ந்து வரும் வேளையில், இந்த தேர்தலில் தனித்தே போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் படுதோல்வி அடைந்தது. எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்பதோடு ஓட்டு சதவீதமும் பெரியதாக இல்லை.இந் நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்கள் கழித்து, மவுனம் கலைத்துள்ளார் பிரசாந்த் கிஷோர். பாட்னாவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; எல்லோரும் ஓட்டை 10,000 ரூபாய்க்கு விற்றுவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் அதில் உண்மை இல்லை. குழந்தைகள் எதிர்காலம் கருதி, இனி வரும் நாட்களில் மக்கள் ஓட்டை காசுக்காக விற்கமாட்டார்கள் என்று நம்புவோம்.தேர்தலை மிகவும் நேர்மையான முறையில் எதிர்கொண்டோம், அதற்காக செயல்பட்டோம். ஆனால் எங்கள் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. நாங்கள் காசு கொடுத்து, ஒன்றுமறியா பீஹார் மக்களை ஏமாற்றி அவர்களின் ஓட்டுகளை வாங்கவில்லை.ஆனாலும் தோல்விதான் கிடைத்தது. எங்கேயோ நாங்கள் தோற்று போய் இருக்கிறோம். தோல்விக்கான காரணங்களை ஆராய்வோம். எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். கடந்த 3 ஆண்டுகளாக நான் எப்படி பணியாற்றினேன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். பீஹாரை முன்னேற்றுவது ஒன்று தான் எண்ணம், செயல்பாடு. அதில் இருந்து நான் ஒருபோதும் பின் வாங்க போவதில்லை.நாங்கள் தவறு செய்திருக்கலாம், ஆனால் எந்த குற்றமும் செய்யவில்லை. சமூகத்தில் ஜாதிய விஷத்தை தூவும் எந்த வேலையும் செய்யவில்லை. இந்து-முஸ்லீம் என மக்களை மத ரீதியாக நான் பிளவுபடுத்தி செயல்படவில்லை. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.
1 hour(s) ago | 6
7 hour(s) ago
7 hour(s) ago