உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் 65லட்சம் பேரின் பெயர்களை டிஜிட்டல் முறையில் பதிவேற்ற உத்தரவு

பீஹாரில் 65லட்சம் பேரின் பெயர்களை டிஜிட்டல் முறையில் பதிவேற்ற உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஹாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை, அதற்கான காரணத்துடன் இணையதளத்தில் வெளியிடுமாறு தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்களுடன் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்ட சபை தேர்தல் நடப்பதையொட்டி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குற்றச்சாட்டு

தேர்தலுக்கு ஆறு மாதம் இருக்கும் நிலையில், வாக்காளர் பட்டியலை திருத்தக் கூடாது என்ற விதியை தேர்தல் கமிஷன் மீறிவிட்டதாக அதில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது. மேலும், வாக்காளர் பட்டியல் சேர்ப்புக்கு ஆதார், ரேஷன் கார்டுகளை ஏற்க தேர்தல் கமிஷன் மறுப்பதாகவும் முறையிடப்பட்டது. இந்தச் சூழலில் கடந்த 1ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதில், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர், உயிரிழந்தோர், இரு வேறு இடங்களில் பதிவு செய்தோர் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது. தேர்தல் கமிஷனின் இந்நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடப்பட்டது. உயிருடன் இருப்பவர்களின் பெயர்களையும் தேர்தல் கமிஷன் நீக்கி இருப்பதாக எதிர்க்கட்சிகள் சார்பில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அத்துடன் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'நீக்கப்பட்டவர்களின் விபரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட உத்தரவிட வேண்டும்' என கோரப்பட்டது. இதற்கு பதிலளித்த தேர்தல் கமிஷன், 'வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விபரங்களை வெளியிடுவதற்கு எந்த விதியும் இல்லை. மேலும், இது வரைவு வாக்காளர் பட்டியல் தான், இறுதி வாக்காளர் பட்டியல் வரும் செப்., 30ம் தேதி வெளியிடப்படும்' என விளக்கம் அளித்தது.

முறைகேடுகள்

இதற்கிடையே, ஆதார், ரேஷன் கார்டுகளில் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால், அவற்றை நம்பகமான ஆவணமாக ஏற்க முடியாது என்ற தேர்தல் கமிஷனின் பரிந்துரையை உச்ச நீதிமன்றம் ஏற்றது. மேலும், சரிபார்ப்பு பணிக்காக பரிந்துரைத்த ஆவணங்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்த்தப்பட்டிருப்பதும் ஏற்புடையதே என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மால்யா பக்சி அமர்வு முன், இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்றும் தொடர்ந்தது. அப்போது, எதிர்க்கட்சிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, நிஜாமுதீன் பாஷா ஆகியோர் ஆஜராகி வாதிட்டதாவது:தேர்தல் கமிஷனின் நடவடிக்கை தன்னிச்சையானது. வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரை நீக்குகின்றனர் என்றால், அதற்கான காரணத்தை தேர்தல் கமிஷன் நிச்சயம் தெரியப்படுத்த வேண்டும். அடையாள சரிபார்ப்புக்காக தேர்தல் கமிஷன் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கலாம் என கூறுகிறது. ஆனால், பீஹாரில் அதை வைத்திருப்போர் எண்ணிக்கை மிக மிக குறைவு. அதே போல், பட்டியல் இனத்தவர்களில் 0.37 சதவீதம் பேர் மட்டுமே கணினியை பயன்படுத்துகின்றனர். எனவே, அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் சிக்கல்கள் இருக்கும் சூழலில், இணையதளம் வாயிலாக சரிபார்ப்பு பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொள்வதை எவ்வாறு ஏற்பது?இவ்வாறு அவர்கள் வாதிட்டனர். தொடர்ந்து, தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி வாதிடுகையில், ''வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தமாக நீக்கப்பட்டவர்கள் 65 லட்சம் பேர். அதில், 22 லட்சம் பேர் உயிரிழந்தோர்,'' என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'உயிருடன் இருப்பவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டு இருப்பதாக ஆதாரத்துடன் எதிர்தரப்பினர் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் நிறைய சந்தேகங்கள் எழுகின்றன' என்றனர். இதை தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விபரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட வேண்டும். நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர், உயிரிழந்தோர், இரு வேறு இடங்களில் பதிவு செய்தவர்கள் என அனைவரது பெயர்களையும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், பஞ்சாயத்து அளவிலான அலுவலகங்கள் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலகங்களில் பார்வைக்காக வைக்க வேண்டும். நாளிதழ்கள், 'டிவி'க்கள் மற்றும் ரேடியோக்களிலும் இது தொடர்பாக விரிவான விளம்பரங்கள் வெளியிட வேண்டும். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டோர், மீண்டும் அதில் சேர ஆதார் அடையாள அட்டையுடன் முறையிடுவதற்கு தேர்தல் கமிஷன் அனுமதி தர வேண்டும். மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விபரங்களை இணையதளத்திலும் வெளியிட வேண்டும். இதை, நான்கு நாட்களுக்குள் தேர்தல் கமிஷன் செய்து முடிக்க வேண்டும். மாவட்டம் வாரியாக எந்ததெந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்; அதற்கான காரணம் என்ன? என அனைத்து விபரங்களும் அதில் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமூக ஊடக கணக்குகள் இருந்தால், அதிலும் இந்த அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து, இவ்வழக்கு விசாரணை வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ஜெய்ஹிந்த்புரம்
செப் 09, 2025 04:58

எல்லா வாக்காளர் பேரையும் டிஜிட்டல் தரவுகளாக கொடுத்தால் பாஜகவின் அடியாள் போல தேர்தல் ஆணையம் எவ்வளவு திருட்டுத்தனங்களை செய்து இருக்கிறது என்பதை கண்டு பிடிக்கலாம்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 09, 2025 04:54

திருடனுக்கு கட்டெறும்பு, தேள், பாம்பு, குழவி, எல்லாம் சேர்ந்து கடிச்ச வலி.. கதறல் கொஞ்சம் ஓவராகத் தான் கேட்கிறது


ஆரூர் ரங்
ஆக 15, 2025 09:28

வயநாடு பகுதியில் கூட ஏராளமான போலி வாக்காளர்கள். எனவே பட்டியலைத் தயாரித்த கம்யூனிஸ்டு அரசும் ஜெயித்த பிரியங்கா வும் அரசியலிலிருந்து விலகவேண்டும்.


Iyer
ஆக 15, 2025 09:18

"தேர்தல் ஆணையம்" ஒரு சுதந்திரமான நிறுவனம். அது எப்படி செயல்பட வேண்டும் என்று உத்தரவிட SCக்கு அதிகாரம் இல்லை. SC ன் உத்தரவுக்கு தேர்தல் ஆணையம் அணிபடியாது என்று நம்புகிறேன்.


VENKATASUBRAMANIAN
ஆக 15, 2025 08:09

பாவம் இதிலும் பல்ப் வாங்கப்போகிறார். இதுவரை மூன்று தடவை நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுவிட்டார். இது நாலாவது முறையாக இருக்கும்


Rajasekar Jayaraman
ஆக 15, 2025 07:31

அது சரி அதில் உள்ள திருடர்களை யார் தண்டிப்பது இவர்களுக்கு மட்டும்தான் உச்சபட்ச அதிகாரமா இதை மாற்ற வேண்டும்


Karthik Madeshwaran
ஆக 15, 2025 06:57

இது ராகுலின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. மீண்டும் மீண்டும் சொல்கிறேன், நீங்கள் ராகுலை மட்டம் தட்ட தட்ட, அவர் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறார். தேர்தல் கமிஷன், கார்ப்பரேட் ஊழல் பாஜக கட்சியின் கைப்பாவையாக தான் செயல் படுகிறது என்பதை பெரும்பாலான இந்தியர்கள் மிக நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள். இவ்வளவு கோல்மால் செய்தும் 2024 தேர்தலில் பாஜக கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. நியாயமாக தேர்தல் நடந்திருந்தால் கண்டிப்பாக பாஜக தோற்று இருக்கும். பல நாள் திருடன் நிச்சயம் ஒரு நாள் அகப்படுவான்.


Palanisamy Sekar
ஆக 15, 2025 06:38

இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை தெரிவிப்போர் தேர்தல் முடிந்த ஓரிரு மாதங்களில் நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்வார்கள். ஆனால் இங்கே அமெரிக்க வரிவிதிப்பில் ட்ரம்பின் கடுமையான மிரட்டல் சமயத்தில் உள்நாட்டில் இந்த பிரச்சினையை ஊதி பெரிதாக்க காரணம் மோடிஜியை பதவியிலிருந்து வெளியேற்ற செய்கின்ற நாடகமாகவே தெரிகின்றது. போராட்டம் என்கிற பெயரில் போலீசின் தடுப்பை மீறி சில காங்கிரஸ் எம் பிக்களின் பெண்கள் மேலே ஏறி கத்துவதை கட்டுவதை காணும்போது இதன் பின்னணியில் வெளிநாட்டு சதிகூட இருக்கலாம் என்றே தோன்றுகின்றது. இந்த பட்டியலில் உள்ள பெயர்களை ஏன் காங்கிரசே சேர்த்திருக்காது என்று எதிர்கேள்வி கேட்க ஆளில்லை. இந்த பட்டியலில் உள்ளோர் பாஜகவின் ஓட்டுக்கள் என்று எப்படி சொல்கின்றார்கள்? ஏன் காங்கிரஸ் ஆட்களாக கூட இருக்கலாமே. சந்தேகமே இல்லை. அப்படி சேர்த்தும் கூட காங்கிரஸ் ஆட்சிக்கு வாராமல் போனது எவர் குற்றம்? நீதிமன்றத்தில் நீதிபதிகள் கூட உணர்ச்சிவசப்பட்டுதான் பேசுகின்றார்களே தவிர யோசித்து தீர்ப்பினை சொல்ல தெரியவில்லை. இப்படிப்பட்ட குற்றச்சாட்டை கூறுகின்ற காங்கிரஸ் சில மாநிலங்களில் இப்படித்தான் பதவிக்கு வந்தார்களா என்ன? பாஜகவின் பதிலடி போதவில்லை, பிரச்சாரமும் தேமேன்னு இருப்பது மிகப்பெரிய பாஜக கட்சிக்கு சோதனைதான்.


rajan_subramanian manian
ஆக 15, 2025 06:22

பதிவு செய்யட்டும்.வெளி நாட்டவரை அடையாளம் காண ஒரு சிறந்த வழி. இந்த போங்கு ஆட்டம் ஆடும் ராஹுல்க்கு ஒரு முடிவு. இதன் மூலம் SIR நாடு முழுவதும் அமுல்படுத்தட்டும். தெரியாமல் தான் கேட்கிறேன் தேர்தல் ஆணையத்திற்கு என்று சர்வே செய்பவர்கள் அந்தந்த மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள். இவர்கள் எல்லோருமே beejaapee சொல்வதைத்தான் கேட்கிறார்கள் என்று இந்த எதிரி கட்சி தலைவர் உளறுவதை யாருமே கண்டுகொள்ளவில்லையே?


Iyer
ஆக 15, 2025 02:17

தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு இட SC க்கு எந்தவித அதிகாரமும் இல்லை SC தன் வேலைகளை ஒழுங்காக செய்வதில்லை லக்ஷக்கணக்கில் வழக்குகள் பைசல் ஆகாமல் தேங்கி உள்ளன


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை