உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் தொடர்ந்து இடியும் பாலங்கள்: ஒரே மாதத்தில் 15வது சம்பவம்

பீஹாரில் தொடர்ந்து இடியும் பாலங்கள்: ஒரே மாதத்தில் 15வது சம்பவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில் அராரியா மாவட்டத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. பீஹாரில் ஒரு மாதத்தில் இதுவரை 15 பாலங்கள் இடிந்துள்ளன.பீஹார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து புதிய மற்றும் பழைய பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் நடைபெற்றன. பாலம் இடிந்து விழும் வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாவதையடுத்து பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். அங்கு கனமழை பெய்ததால் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து பாலத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டது. இதனால் பல பாலங்கள் இடிந்து விழுந்தன.தற்போது மற்றொரு பாலமும் சேதமடைந்தது. அராரியா மாவட்டத்தில் அம்ஹாரா கிராமத்தில் பர்மன் ஆற்றை கடப்பதற்காக பொதுப்பணித் துறையால் 2008ம் ஆண்டு கட்டப்பட்ட இப்பாலம், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த பாலம் ஏற்கனவே 2017ல் ஏற்பட்ட வெள்ளத்தில் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டு, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, 2021ல் பாலம் மீண்டும் புனரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது மீண்டும் இடிந்து விழுந்தது.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பீஹாரில் இடிந்து விழும் 15வது பாலம் இதுவாகும். அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே பாலம் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்பாக நீர்வளத்துறை மற்றும் ஊரக பணித்துறையை சேர்ந்த 16 இன்ஜினியர்களை மாநில அரசு சஸ்பெண்ட் செய்து விசாரணை நடத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Nandakumar Naidu.
ஜூலை 19, 2024 00:59

கூடிய சீக்கிரம் தேர்தல் வரப்போகிறது, எனவே பாலங்கள் இடிந்து விழுவதில் லாலு கட்சியின் சதித்திட்டமாக இருக்கலாம். கடுமையான விசாரணை வேண்டும். அதெப்படி ஒரே மாதத்தில் இத்தனை பாலங்கள் இடிந்து விழும்? சந்தேகம் உள்ளது.


அப்புசாமி
ஜூலை 18, 2024 15:25

சிறப்பு அந்தஸ்து குடுத்ததுக்கப்புறம் 100 புதுப்பாலங்கள் கட்டிருவாரு


Apposthalan samlin
ஜூலை 18, 2024 13:05

தமிழ் நாட்டில் உள்ள அணைகள் திமுக அதிமுக கட்டிய பாலங்கள் 200 ஆண்டை கடந்து இன்னும் கம்பீரமாக இருக்கிறது.பீகார் இல் ஆட்சி முழுவதும் ஊழல் முறைகேடுகள் இதற்கு லல்லு ஆட்சி எவலோவோ மேல்


SUBRAMANIAN P
ஜூலை 18, 2024 13:30

தமிழ் நாட்டில் உள்ள அணைகள் திமுக அதிமுக கட்டிய பாலங்கள் 200 ஆண்டை கடந்து.... சுத்த உளறல்..


ES
ஜூலை 18, 2024 12:46

People will blame TN for this too hypocrites


முருகன்
ஜூலை 18, 2024 12:29

இதுவே தமிழகத்தில் நடந்தால் இங்கோ ஒருவர் சிபிஐ விசாரணை கோரி இருப்பார்


தத்வமசி
ஜூலை 18, 2024 12:21

நம்மூரில் புதியதாக கட்டப்பட்ட இடங்கள் திறப்புவிழாவிற்கு முன்னதாகவும், பின்னதாகவும் விழுந்துள்ளது. ரெண்டு லட்சம் பெறுமானம் இல்லாத நிழற்குடைகள், குடிதண்ணீர் தொட்டிகள் பத்து லட்சத்தில் கட்டும் மேதாவிகள் உள்ளனர். தமிழகத்தில் பேப்பர் சாலை மிகவும் பிரசித்தம். சாலையே போடாமல் முடித்ததாக ஒரு செய்தி படித்தோம்.


RAAJ68
ஜூலை 18, 2024 12:05

பிஜேபியை சம்பந்தப்படுத்தி எழுதுவது அறியாமை. பிஜேபியுடன் கூட்டணி இப்பொழுது தானே அமைந்தது. இடிந்து விழுந்த பாலங்கள் எல்லாம் பழைய பாலங்கள் எந்த ஆட்சியில் கட்டப்பட்டது என்பது தெரியாது. புணரமைக்கப்பட்ட பாலம் என்று செய்தியில் கூறியுள்ளது. கருத்து எழுதுவதற்கு முன் செய்தி முழுவதையும் நன்றாக கவனமாக படிக்கவும்.


J.Isaac
ஜூலை 18, 2024 15:50

உங்கள் செய்தி பிஜேபியை குறை சொல்லதாகதான் இருக்கும்.


RAAJ68
ஜூலை 18, 2024 12:02

பாஜக நித்தீஷ் கூட்டணி எப்பொழுது உருவாயிற்று கண்ணா? பாலம் எப்பவோ கட்ட ஆரம்பித்து விட்டனர் அப்போது நித்திசின் கூட்டாளி யாரு? மாட்டுத்தீவன ஊழல் பிரபலம் லல்லுவின் மகன் இல்லையா? எனவே எதையும் சரியாக தெரிந்து கொண்டு எழுது கண்ணா.


Lion Drsekar
ஜூலை 18, 2024 11:50

பள்ளிக்கூடமே இல்லாதவர்கள் நாட்டையே ஆளும்போது அவர்களுக்கு தெரியாதா எதை எதை எப்படி எய்யவேண்டும் என்று . நமக்கு இந்த படிவுகள் ஒரு சுமை இறக்கி . எப்படியும் யாரும் என்றைக்குமே எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்போவதும் இல்லை அப்படி இருக்க நமக்குத்தான் மன உளைச்சல் . வந்தே மாதரம்


Velan
ஜூலை 18, 2024 11:27

விடியல விட மேசம் போல


மேலும் செய்திகள்









புதிய வீடியோ