உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் வாக்காளர் பட்டியல் குறித்து ஒரு கட்சி கூட ஆட்சேபனை தெரிவிக்கவில்லை: தேர்தல் ஆணையம்

பீஹார் வாக்காளர் பட்டியல் குறித்து ஒரு கட்சி கூட ஆட்சேபனை தெரிவிக்கவில்லை: தேர்தல் ஆணையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; பீஹார் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு ஒரு வாரம் கடந்தும், எந்த அரசியல் கட்சியும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் அது குறித்து இதுவரை (ஆகஸ்ட் 8 காலை 9 மணி வரை) எந்த அரசியல் கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை, ஒரு உரிமை கோரல் கூட வரவில்லை என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது; தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளுக்கு 1,60,813 வாக்குச் சாவடி நிலையிலான முகவர்கள் உள்ளனர். இவர்கள் மூலமாக எந்த உரிமை கோரலோ, ஆட்சேபமோ கிடைக்கப்பெறவில்லை. நேரடியாக 6,257 உரிமை கோரல் அல்லது ஆட்சேபம் பெறப்பட்டு உள்ளது.18 வயது பூர்த்தி அடைந்தவர்களிடம் இருந்து 36,060 படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. விதிமுறைகளின்படி 7 நாட்கள் நிறைவடைந்த பின் இது குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் மூலம் முடிவெடுக்கப்படும். இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Iyer
ஆக 09, 2025 15:26

2 கோடி பங்களாதேசிகள் பீகார் , WB ல் மட்டுமே சிக்கி உள்ளனர். இன்னும் சுமார் 3 கோடி பங்களாதேசிகள் + ரொஹிங்கியாக்கள் நாடு முழுவதும் பரவி உள்ளனர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கினால் மட்டும் போதாது இந்த 5 கோடியையும் நாடு கடத்தவேண்டும்


Balasubramanian
ஆக 09, 2025 15:21

எழுதி வைத்து கொள்ளுங்கள் - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் - எங்கள் அணு குண்டு வீச்சை கண்டு பயந்து தேர்தல் ஆணையம் - மிகவும் நியாயமான வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்டது! பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் - அதன் தலைவர் பேச்சை முன் கணிக்க அந்த பிரம்மாவாலும் முடியாது! ஆதாரம் ஏதும் இன்றி குற்றச்சாட்டுகள் அடுக்கப்படும்


GMM
ஆக 09, 2025 13:30

ராகுல் எவ்வளவு பெரிய தலைவர்? அவரிடம் உறுதிமொழி கேட்கும் போது கட்சிகளின் 1,60,813 வாக்குச் சாவடி முகவர்கள் எம்மாத்திரம்? பீகார் பட்டியல் குறித்து புகார் வராது? தேர்தல் ஆணையம் மீது ராகுல் வன் புகார் கூறும்போது யாராவது நாடு முழுவதும் பல கட்சிகள் இதே தேர்தல் ஆணையம் கொண்டு வெற்றி பெற்றது எப்படி என்று கேட்கவில்லை. இனி தேர்தல் ஆணையம் கள்ள வாக்காளர்கள் விவரம் சேகரித்து வெளியிட வேண்டும். காங்கிரஸ் கலங்கி விடும்? தற்போது ஆதார் இணைப்பு, ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியம் புரியும்.


ponmurugan
ஆக 09, 2025 11:51

புதியதாக இணைக்கப்பட்ட வாக்காளர்கள் மட்டும் தான் உடனடியாக பதில் அளிக்க முடியும் மற்ற தில்லுமுல்லுகள் எல்லாம் டேட்டா analizse செய்த பிறகு தான் தெரிய வரும்.. அதற்குள் தேர்தல் முடிந்து விடும்


vbs manian
ஆக 09, 2025 11:45

சட்ட வி ரோதமாக இந்தியாவுக்குள் வந்து லோக்கல் அரசியல் துணையோடு ஆதார் ரேஷன் கார்டு எல்லாம் வாங்கி வோட்டு போடுகிறார்கள். இது சரியா. இறந்து போனவர் வாக்களிக்கிறார். இதையெல்லாம் சரி செய்தால் கூச்சல் போடுகிறார்கள்.


babu
ஆக 09, 2025 11:41

அவர் சொன்ன குற்றாசாட்டு பொய் என தேர்தல் ஆணையம் நிரூபிக்கவேணும்...இல்லை என்றால் நீதிமன்றம் தண்டிக்கும்


vivej
ஆக 09, 2025 14:47

நீதிமன்றம் ராகுலை.கழுவி ஊத்த போகுது....


Svs Yaadum oore
ஆக 09, 2025 11:39

வடக்கனுக்கு படிக்க தெரியாது வாசிக்க தெரியாதாம் .. அதனால் அவர்களை சோற்றுக்கு சுலபாக மதம் மாற்றலாம் என்று கேரளாவில் இருந்து ஒரு கும்பல் கிளம்பி வடக்கன் மாநிலத்தில் ஊடுருவல் ....வெள்ளைக்காரன் கொடுக்கும் பிச்சை காசுக்கு மதம் மாற்றம் செய்யும் கேரளா கும்பல் ...அதனாலதான் வடக்கன் கொடுக்க வேண்டியதை கொடுத்து கேரள மதம் மாற்றும் கும்பலை கேரளாவுக்கு திருப்பி அனுப்பினான் ...


ASIATIC RAMESH
ஆக 09, 2025 11:35

சபாஷ்...


Svs Yaadum oore
ஆக 09, 2025 11:33

பெங்களூரு தொகுதி பற்றி பவர் பாயிண்ட் ப்ரெசன்ட்டேஷன் கொடுத்த இத்தாலி காங்கிரஸ் ஆசாமி அறிவித்த போலி வாக்காளர் பெயர் அனைத்தும் ஹிந்துக்கள் ..அவர்கள் அனைவரும் இத்தாலி ஆசாமி அறிவித்தது பொய் என்று கூறி வருகிறார்கள் ..அந்த தொகுதியும் ஹிந்துக்கள் பெரும்பான்மை உள்ள தொகுதி ...இதே போல சிறுபான்மை அதிகம் உள்ள தொகுதியை எடுத்து போலி வாக்காளர் பெயராக சிறுபான்மை பெயர்களை அறிவிக்கட்டுமே ....அந்த இத்தாலி ஆசாமி அதை செய்ய மாட்டார் ....காரணம் சிறுபான்மை வோட்டு மொத்தமும் இத்தாலி காங்கிரஸ் கட்சிக்கு ...


M S RAGHUNATHAN
ஆக 09, 2025 12:12

செய்யமாட்டார். ஏனெனில் செய்தால் தலை உடம்பில் இருக்காது.


Apposthalan samlin
ஆக 09, 2025 11:28

அவர்கள் படிப்பு அறிவு அற்றவர்கள் அவர்களுக்கு என்ன தெரியும் படிக்க தெரியாது வாசிக்க தெரியாது


vivek
ஆக 09, 2025 14:45

அப்போதல்ல அண்ணனுக்கு எவளோ அறிவு.....சமச்சீர் அறிவு போல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை