உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பசுக்களின் மடியை கத்தியால் வெட்டிய பீஹார் வாலிபர் கைது

பசுக்களின் மடியை கத்தியால் வெட்டிய பீஹார் வாலிபர் கைது

சாம்ராஜ்பேட்: பசுக்களின் மடியை கத்தியால் வெட்டிய, பீஹார் வாலிபர் கைது செய்யப்பட்டார். குடிபோதையில் செய்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார்.பெங்களூரு, சாம்ராஜ்பேட்டில் வசிப்பவர் கர்ணன். பசுக்களை வளர்த்து, வாழ்க்கை நடத்துகிறார். இவருக்கு சொந்தமான மூன்று பசுக்கள் காட்டன்பேட் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலையில் சுற்றின.மூன்று மாடுகளின் மடியும் வெட்டப்பட்டு இருந்தது, விடிந்ததும் தெரிய வந்தது. காயமடைந்த பசுக்கள் மீட்கப்பட்டு, கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன.வக்பு வாரியம் விவசாயிகளுக்கு நோட்டீஸ் கொடுத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சாம்ராஜ்பேட்டில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் மடி அறுக்கப்பட்ட மூன்று பசுக்களும் கலந்து கொண்டன.இதனால் குறிப்பிட்ட ஒரு மதத்தினர், பசு மாட்டின் மடியை அறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ., --- எம்.பி., மோகன், பல்வேறு ஹிந்து அமைப்பினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தினர்.மாடுகளின் மடி அறுக்கப்பட்டது குறித்து காட்டன்பேட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.இந்நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் சையத் நஸ்ரு, 30, என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் பீஹார் மாநிலத்தின் சம்பரான் பகுதியை சேர்ந்தவர்.பெங்களூரில் சில ஆண்டுகளாக வசித்து வரும் அவர், மாடுகளின் மடி அறுக்கப்பட்ட இடத்திலிருந்து 100 மீட்டர் துாரத்தில் உள்ள தையல் கடையில் வேலை செய்ததும் தெரிந்தது.குடிபோதையில் மாடுகளின் மடியை கத்தியால் அறுத்ததை ஒப்புக்கொண்டார். கைதான சையத் நஸ்ரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என, அவர் வேலை செய்த கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.இதற்கு மாட்டின் உரிமையாளர் கர்ணன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.'மனநலம் பாதித்தவருக்கு வேலை கொடுத்தது ஏன்? மனநலம் பாதித்தவரால் எப்படி, மாடுகளின் மடியை சரியாக அறுக்க முடியும்? எங்களுக்கு மேலும் சிலர் மீது சந்தேகம் உள்ளது.இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்று தெரிய வேண்டும். எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாமல் போலீசார் நேர்மையாக விசாரிக்க வேண்டும்' என, அவர் வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Anantharaman Srinivasan
ஜன 15, 2025 00:39

ஏதேனும் குற்றம்புரிந்து மாட்டிக்கொண்டால் நெஞ்சுவலி வந்துடும் இல்லையேல் மனநோயாளி. கலைஞர் டீவி பணம் வாங்கிய வழக்கில் மனநோயாளி என்று சொல்லித்தான் தயாளு அம்மாளை கருணாநிதி தப்பிக்கவைத்தார்.


Kundalakesi
ஜன 15, 2025 00:07

மனநலம் பாதித்த நபருக்கு வேலை கொடுப்பதும், மது விற்பதும் என்ன கணக்கு


Sudha
ஜன 14, 2025 20:48

மனநலமின்மை குடி இவை எந்த அமைச்சகத்தின் கீழ் வருகிறது?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 14, 2025 20:10

நஸ்ரு கைது செய்யப்பட்ட பிறகு, உள்ளூர்வாசிகள் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறத் தொடங்கினர். குற்றம் சாட்டப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல என்று கர்ணன் நிராகரித்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக அவரைப் பார்த்து வருவதாகக் கூறினார். நஸ்ருவின் முதலாளியைக் கைது செய்யுமாறு அவர் காவல்துறையினரை வலியுறுத்தினார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் நஸ்ரு மது அருந்துவதற்காக எந்த பார் திறக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் அறிய விரும்பினார். குற்றம் சாட்டப்பட்டவரை சிறைக்கு அனுப்புவதில் காவல்துறையின் அவசரம் குறித்து கர்ணன் சந்தேகம் தெரிவித்தார், மேலும் நஸ்ரு மட்டும் இந்தச் செயலைச் செய்யவில்லை என்று சந்தேகித்தார். சில தெரியாத நபர்கள் இதற்குப் பின்னால் இருப்பதாகவும், அதிக பால் கொடுக்கும் பசுக்களை குறிவைத்ததாகவும் அவர் கூறினார்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 14, 2025 19:54

கைதான சையத் நஸ்ரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என, அவர் வேலை செய்த கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார் ....... அந்த கடை உரிமையாளனின் seed ஐ பிரிச்செடுக்கணும் ......


sankaranarayanan
ஜன 14, 2025 19:44

குடிபோதையில் மாடுகளின் மடியை கத்தியால் அறுத்ததை ஒப்புக்கொண்டார். கைதான சையத் நஸ்ரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என, அவர் வேலை செய்த கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதுபோன்று குடிபோதையில் செய்தார் என்பது அல்லது மனநலம் குன்றியவர் என்பது இவைகளெல்லாம் கட்டுக்கதைகள் கேட்டு கேட்டு காதே புளிச்சுப்போச்சு அது எப்படி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றால் சரியால பசுவின் மடியை அறுக்க மட்டும் அவருக்கு தெரியும் ஏன் அவன் தன்னுடைய உறுப்பை அறுத்துக்கொள்ள தெரியாதா மக்களே விழித்துக்கொள்ளுங்கள் அவன் பெயரை சொல்லி அவனை இதில் மாட்டிவிட்டு பின்னலே ஒரு கும்பலே இருக்கிறது அதை போலீசும் இப்போது கண்டுகொள்ளாது அடுத்த ஆட்சி வந்தால் எல்லாமே வெளிவரும் அதுவரைக்கும் பசுவிற்கு நேர்ந்த கதி அதை செத்தவனுக்கும் நேர மக்களே தயாரா இருக்க வேண்டும் நீதி மன்றக்கள் இவைகளை கண்டே கொள்ளாது


என்றும் இந்தியன்
ஜன 14, 2025 18:00

குடிபோதையில் மாடுகளின் மடியை கத்தியால் அறுத்ததை ஒப்புக்கொண்டார். கைதான சையத் நஸ்ரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என, அவர் வேலை செய்த கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.???கதை கதையாம் காரணமாம் அதை வரி வரியாய் கூறிடுவோம் புரட்டுக்கு இது . மன நலம் பாதிக்கப்பட்டவனாம் அதான் பசுவின் மடியை சரியாக பார்த்து அறுத்தானாம்???இந்த மாதிரி ஆளுங்களுக்கு ஒரே சொலுஷன் அவன் கழுத்தை அறுத்தல் இதுதானே சரியா சட்டம் அப்படியே செய்து விட வேண்டியது தான்


என்றும் இந்தியன்
ஜன 14, 2025 18:00

குடிபோதையில் மாடுகளின் மடியை கத்தியால் அறுத்ததை ஒப்புக்கொண்டார். கைதான சையத் நஸ்ரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என, அவர் வேலை செய்த கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.???கதை கதையாம் காரணமாம் அதை வரி வரியாய் கூறிடுவோம் புரட்டுக்கு இது . மன நலம் பாதிக்கப்பட்டவனாம் அதான் பசுவின் மடியை சரியாக பார்த்து அறுத்தானாம்???இந்த மாதிரி ஆளுங்களுக்கு ஒரே சொலுஷன் அவன் கழுத்தை அறுத்தல் இதுதானே சரியா சட்டம் அப்படியே செய்து விட வேண்டியது தான்


Mohammed Jaffar
ஜன 14, 2025 16:49

பாவம் அந்த மாடு.. எதுக்கு இப்படி கொடுமை செய்யணும்? குடுச்சுட்டு என்ன வேண்ணா செய்யலாமா? கடுமையா தண்டனை கொடுக்கணும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 14, 2025 20:15

உன்கூட்டத்தின் வெறியாட்டம் ......


HoneyBee
ஜன 14, 2025 15:31

செய்வதையெவ்லாம் செய்..பிறகு மனநோயாளி என்று நடி. இது தான் இப்ப ஃபேஷன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை