உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விபத்தில் பைக் ஓட்டுனர் இறந்த வழக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., டிரைவர் விடுதலை

விபத்தில் பைக் ஓட்டுனர் இறந்த வழக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., டிரைவர் விடுதலை

தார்வாட்: விபத்தில் பைக் ஓட்டுனர் இறந்த வழக்கில், சாட்சியங்கள் சரியாக இல்லாததால், கே.எஸ்.ஆர்.டி.சி., டிரைவரை விடுதலை செய்து, கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் தார்வாட் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது.விஜயபுராவின் முத்தேபிஹாலை சேர்ந்தவர் மனேசிங். கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் டிரைவர். 2010ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி, பாகல்கோட் கலதகி கிராமப் பகுதியில் பஸ் ஓட்டிச் சென்றார். அப்போது எதிரே வந்த பைக்கும், பஸ்சும் மோதி கொண்டன.பைக்கை ஓட்டி வந்த மல்லிகார்ஜுன் தேவடகி என்பவர் இறந்தார். இந்த விபத்து தொடர்பான வழக்கில், மனேசிங்கிற்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை மற்றும் 20,000 ரூபாய் அபராதம் விதித்து, பாகல்கோட் நீதிமன்றம் 2015ல் தீர்ப்பு கூறியது.இந்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தார்வாட் பெஞ்சில் மனேசிங் மேல்முறையீடு செய்தார். நீதிபதி ராமசந்திரா விசாரித்தார்.விபத்தை நேரில் பார்த்ததாக கூறப்பட்ட இரண்டு சாட்சியங்கள், மனேசிங் பஸ்சை வேகமாக ஓட்டி வந்து, விபத்து ஏற்படுத்தியதாக தெரிவித்தனர். ஆனால் மல்லிகார்ஜுன் தான் பைக்கை வேகமாக ஓட்டி வந்து, பஸ் மீது மோதியதாக, மனேசிங் தரப்பு வக்கீல் வாதாடி வந்தார்.சில நாட்களுக்கு முன்பு, இரண்டு சாட்சிகளிடம் நடத்திய குறுக்கு விசாரணையில், விபத்து நடந்தபோது, தாங்கள் அந்த இடத்தில் இருக்கவில்லை என்று பிறழ் சாட்சி கூறினர்.வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று முன்தினம் நீதிபதி ராமசந்திரா தீர்ப்பு கூறினார். சாட்சியங்கள் சரியாக இல்லாததாலும், மனேசிங் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போலீசார் தவறியதாலும், மனேசிங்கை இந்த வழக்கில் இருந்து, விடுதலை செய்வதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்