உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

பா.ஜ., 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 72 பேர் கொண்ட பா.ஜ.,வின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (13-ம் தேதி) வெளியானது.இதில் மீண்டும் நான்கு மத்திய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.தேர்தல் அறிவிப்பே இன்னும் வெளியாகாத நிலையில், 195 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை இம்மாதம் 4-ம் தேதி பா.ஜ., வெளியிட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3ph57nps&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உட்பட 34 அமைச்சர்களின் பெயர்களும் முதல் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இரண்டு முன்னாள் முதல்வர்களும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.வெளியிடப்பட்ட 195 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் 28 பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கர்நாடகா , பீஹார், மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத் , மாநிலங்களிலிருந்து போட்டியிடும் 72 பேர் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று(13-ம் தேதி) பா.ஜ., தலைமை வெளியிட்டுள்ளது.முக்கிய வேட்பாளர்கள் யார் யார்...1) பியூஸ் கோயல்: மும்பை வடக்கு2) பவசராஜ் பொம்மை: ஹவேலி தொகுதி3) தேஜஸ்வி சூர்யா: பெங்களூரு தெற்கு4) நிதின்கட்கரி: நாக்பூர் 5) அனுராக் தாக்குர்: ஹமீர்பூர் 6) எடியூரப்பா மகன் ராகவேந்திரா : ஷிமோகா 7) பிரகலாத்ஜோஷி; தர்வாத்.8) மனேகர்லால் கட்டார்: கர்னால் உள்பட 72 வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.முதற்கட்டமாக 195 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானதையடுத்து , இன்று 72 பேர் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் என 267 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ., வெளியிட்டுள்ளது. இரு பட்டியலிலும் தமிழக வேட்பாளர்கள் பெயர் இடம்பெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்