உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்ச்சை வீடியோ வெளியானதால் விலகினார் பா.ஜ., வேட்பாளர்

சர்ச்சை வீடியோ வெளியானதால் விலகினார் பா.ஜ., வேட்பாளர்

லக்னோ:லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆபாச வீடியோ வெளியானதால், பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தர பிரதேச எம்.பி., தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலையொட்டி, பா.ஜ., சார்பில், 195 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.இதில், உத்தர பிரதேசத்தின் பாரபாங்கி தொகுதியின் தற்போதைய எம்.பி.,யான உபேந்திர சிங் ராவத் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அவர் நேற்று அறிவித்துள்ளார்.இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:பா.ஜ.,வின் வேட்பாளர் பட்டியலில் என் பெயர் இடம்பெற்றிருந்தது. இந்த பட்டியல் வெளியான நிலையில், சமூக வலைதளத்தில் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், ஆபாச வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக, 'டீப்பேக்' எனப்படும் போலி வீடியோ வெளியிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளேன்.என் மீதான களங்கத்தை துடைத்தெறிந்து, நிரபராதி என்பதை நிரூபிக்கும் வரையில், எந்தத் தேர்தலிலும் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். இதை பரிசீலிக்கும்படி, கட்சித் தலைமையை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ