உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சரிந்தது கெஜ்ரிவால் சாம்ராஜ்யம்!

சரிந்தது கெஜ்ரிவால் சாம்ராஜ்யம்!

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்துள்ளதன் மூலம், தேசிய தலைநகரில் ஆதிக்கம் செலுத்தி வந்த அரவிந்த் கெஜ்ரிவால் சாம்ராஜ்யம் சரிந்துள்ளது. டில்லி ஆம் ஆத்மி கோட்டையாக விளங்கி வந்தது. கடந்த 2015ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதியில் 67 தொகுதிகளை கைப்பற்றி ஆம்ஆத்மி ஆட்சியை பிடித்தது. பின்னர் 2020ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 63 தொகுதிகளில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற, கெஜ்ரிவால் இரண்டாவது முறையாக முதல்வர் ஆனார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=owxg2d4j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதைத் தொடர்ந்து அவரது கட்சிக்கு பஞ்சாப் சட்டசபை தேர்தலிலும் வெற்றி கிடைத்தது. குஜராத் மாநிலத்திலும், அவரது கட்சிக்கு கணிசமான சதவீதத்தில் ஓட்டுகள் கிடைத்தன.இதனால் அவரது கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்தும் கிடைத்தது. இப்படி அடுத்தடுத்து மேலே மேலே உச்சம் நோக்கி சென்று கொண்டிருந்த கெஜ்ரிவால் மீது எழுந்த ஊழல் புகார்கள், அவரது அரசியலுக்கு தடையாக அமைந்தன.மதுபான ஊழல் வழக்கில், கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது அமைச்சர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். ஊழல் வழக்குகளில் சிக்கி சோதனைக்கு ஆளாகினர்.சிறையில் இருந்து ஜாமினில் விடுதலை ஆகவே கெஜ்ரிவால் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அப்படி வெளியில் வந்தவர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, அதிஷியை முதல்வர் ஆக்கினார். சிறையிலிருந்து விடுதலையான பிறகும், கெஜ்ரிவால் 'மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும். மக்கள் எனக்கு வாய்ப்பு தருவார்கள்' என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி தேர்தல் பிரசாரத்திலும், டில்லி மக்கள் ஆம் ஆத்மி மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக கூறியிருந்தார்.தற்போது தேர்தல் முடிவுகள் தலைகீழாக உள்ளன. ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, பா.ஜ., கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளனர். இதனால் தேசிய தலைநகரில் 10 ஆண்டுக்கும் மேலாக அசைக்க முடியாத செல்வாக்குடன் ஆதிக்கம் செலுத்தி வந்த கெஜ்ரிவால் சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டுள்ளது; இதன் பாதிப்பு பஞ்சாபிலும் எதிரொலிக்கும் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

அன்பே சிவம்
பிப் 08, 2025 19:47

இந்திய நாட்டின் துரோகிகளுக்கு முழு ஆயுட்கால சமாதி இன்று தில்லியில் கட்டபட்டது 1). Congress. 2). ஆம் ஆத்மி 3). இங்கேயும் சில பேருக்கு கூடிய விரைவில் நடந்தே தீரும். Let's wait.


Laddoo
பிப் 08, 2025 18:02

இந்த போட்டோவை பார்த்தால் யாரு ஆம்பள என்றே தெரியல


மோகனசுந்தரம் லண்டன்
பிப் 08, 2025 19:10

அதுதான் எனக்கும் சந்தேகமாக இருந்தது.


Dharmavaan
பிப் 08, 2025 17:15

தமிழ் நாட்டில் சாராய அரசு சரியவில்லை கேவலம் தமிழ் நாட்டு மக்கள்


Muralidharan S
பிப் 08, 2025 13:15

சரிகிறது சாராய சாம்ராஜ்ஜியம் என்று திருத்தி எழுதுங்கள். மெத்தப்படித்த ஊழல்வாதி யை எல்லாம் சாம்ராஜ்ஜியம் என்றா சொல்வது, .. ... ஊழல், லஞ்சம், தாராள மதுவியாபாரத்திற்கு துணை, பொதுச்சொத்தை திருடுவது, மக்களின் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை நாட்டிற்கு எதிரான பேச்சுகள் / செயல்பாடுகள் - இதுதான் அர்பன்-கேஜரிவால்.


சிவம்
பிப் 08, 2025 12:21

தில்லி அரசியல் நாசமா போனதற்கு இந்த வால் முளைத்த கேஜரியும், இவரை வளர்த்து விட்ட அன்னா ஹசாரேவும் தான் காரணம். முன்னிலை வகிக்கும் அந்த 27 இடத்தில் ஊழல் குற்றச்சாட்டில் ஜெயிலுக்கு போன aap தலைமைக்கு ஆதரவாக வாக்களித்த அந்த மக்களை பேட்டி எடுத்து காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.


veeramani hariharan
பிப் 08, 2025 11:17

When TN will change. கர்பிணி பெண் ரயிலில் ரேப் 3 வயது குழந்தை பால்வாடியில் ரேப் 8 வயது குழந்தை பள்ளியில் ரேப் 13 வயது குழந்தை 3 ஆசிரியர்களால் ரேப் பஸ்க்கு நின்னுருந்த 16 வயசு வடநாட்டு பெண் ரேப் பல்கலைகழகத்தில் 19 வயது மாணவி ரேப் இதை எல்லாம் புகார் குடுக்க வேண்டிய பெண் ADGP மீது கொலை முயற்சி ADGPக்கு கீழ வேலை பார்க்கிர பெண் SIக்கு அரிவாள் வெட்டு பெண் VOA மீது தாக்குதல் நடத்தி சாணியை கரைத்து ஊற்றிய எம்எல்ஏ ஆதரவாளர் Meanwhile இதை எல்லாம் தடுக்க வேண்டிய இரும்புகரம் என்னடா பன்னுதுன்னு பார்த்தா அல்வாவை‌ சாப்பிட்டுகிட்டு அதை நேரடியாக ஓளிபரப்பு வேற செஞ்சிக்கிட்டு இருக்கு....


Ray
பிப் 08, 2025 12:13

ரயில் மத்திய அரசு நிர்வாகம்னு தெரிஞ்சுக்கணும் ரெண்டு கொலை வழக்கில் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளினால் ஜாமீன் வாங்க சட்டமும் அதற்கான வக்கீல்களும் உள்ள நாடு “Bail is the rule, jail is the exception” is a principle of the Indian Constitution that states that a person should not be imprisoned unless the law allows it.


ulaganathan murugesan
பிப் 08, 2025 10:49

சரிகிறது.. தேய்கிறது என்றெல்லாம் சொல்ல வேண்டாம். மகளிர் உதவித்தொகை யார் அதிகமாக தருகின்றார்களோ அவங்க ஜெயிக்க போறாங்க. பிஜேபி அப்படித்தான் ஜெயிக்க போகுது. பணநாயகம் வென்றதுனு தலைப்பு போடு தினமலர். நீ அப்படி போட மாட்டே... நீ பிஜேபி முட்டு னு ஊருக்கே தெரியும்


Sudarsan Ragavendran
பிப் 08, 2025 11:00

அப்புறம் எதுக்கு இந்த பேப்பரை படிக்கற


Muralidharan S
பிப் 08, 2025 13:23

நீ திருட்டு திராவிஷத்திற்கும், குவாட்டருக்கும், அவனுங்க போடற அசைவ பிரியாணிக்கும் ஒட்டு போடற " பெரிய முட்டு" ன்னு நல்லா புரியுது..


கோபாலன்
பிப் 08, 2025 10:48

கெஜ்ரிவால் 10 ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக்கை வீதிக்கு வீதி அறிமுகம் செய்து இருந்தால் இன்று படுத்துக்கொண்டே ஜெயித்து இருக்கலாம். இலவசங்களை அள்ளி தெளித்து இருந்தால் மக்கள் கையேந்தி கொண்டு இருப்பார்கள். தமிழகத்தில் திராவிட கட்சிகள் பாணியில் செயல் பட்டு இருந்தால் எளிதாக வெற்றி பெற்று இருக்கலாம்.


Muralidharan S
பிப் 08, 2025 13:38

எவன் ஊழல் செஞ்சா என்ன ?? சட்டம் ஒழுங்கு எப்படி நாசமா போனா என்ன ??, ஆத்து மணலை அள்ளித்திருடி 10 தலைமுறைக்கு சொத்து சேர்த்தா நமக்கே என்ன ?? கோவில் சொத்து எவ்வளவு கொள்ளை போனால் என்ன ?? குழந்தைகள் கல்வி எப்படி நாசமா போனா என்ன ?? நாடு எப்படி நாசமா போனா என்ன... ?? எவன் நம்மள ஓசி.. ஓசி.. ன்னு இளக்காரம் பண்ணினா என்ன ??.. கேவலம் பாத்தா முடியுமா ?? நமக்கு வேண்டியது - குவாட்டரும், பிரியாணியும், ஓட்டுக்கு காசும், டிவி, பிரிட்ஜ் , வாஷிங் மெஷின், கிரைண்டர்" - அது கிடைச்சா போதும் - எவனுக்கு வேணும்னாலும் ஓட்டுப்போடுவோம்nnu வெக்கம் மானம் ரோஷம் சூடு சொரணை - இப்படி எதுவுமே இல்லாம அலையிற கூட்டம் - டில்லியில் இருக்கும் ன்னு நெனைச்சுட்டீங்களா ???? ..


Nandakumar Naidu.
பிப் 08, 2025 10:33

APP பிராட் கும்பல் மண்ணோடு மண்ணாக அழிந்து போக வேண்டும்.


abdulrahim
பிப் 08, 2025 10:20

வினை விதைத்தவன் வினை இருக்கிறன், அண்ணா ஹசாரே என்ற போல்டோடு சேர்ந்து கொண்டு ஊழலுக்கு எதிராக போராடுவதாக காட்டிக்கொண்டு ஆட்சி அமைத்து பின்பு ஊழலில் திளைத்தவர் போர்ஜரிவாள், காங்கிரசிற்கு எதிராக செய்த துரோகங்கள் அனைத்திற்கும் இனி பாஜகவிடம் பதில் சொல்லி மாறடிக்கவேண்டும் ,போர்ஜரிவாளின் தோழ்வி ஒரு வகையில் காங்கிரசின் வெற்றி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை