உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., வேட்பாளரை தகுதி நீக்க கோரிக்கை

பா.ஜ., வேட்பாளரை தகுதி நீக்க கோரிக்கை

தேர்தல் ஆணையத்துக்கு, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுப்பியுள்ள கடிதம்:சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, பா.ஜ., எம்பிக்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் முகவரிகளைப் பயன்படுத்தி, புதுடில்லி தொகுதியில் புதிய வாக்காளர்களை சேர்க்கின்றனர். புதுடில்லி தொகுதி பா.ஜ., வேட்பாளர் பர்வேஷ் வர்மா வீட்டு முகவரியில் மட்டும் 33 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.ஒரே இரவில் நாடு முழுதும் இருந்து 33 பேர் வர்மாவின் வீட்டுக்கு குடிபெயந்துள்ளனர். இந்த முறைகேட்டை செய்ததற்காக தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பர்வேஷ் வர்மாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.அதேநேரத்தில், இந்த மோசடியை செய்தவர்கள் மீது குற்றநடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ., உயர் நிலைக்குழு தலைவர்களால் திட்டமிடப்படாமல் இவ்வளவு வாக்காளர்கள் திடீரென எப்படி, பா.ஜ., வேட்பாளரின் வீட்டு முகவரிக்கு குடியேறியதாக வேட்பாளராக சேர்க்க விண்ணப்பிக்க முடியும்?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை