உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., கூட்டணி அபாரம்!: காங்கிரஸ் தலைமையிலான அணிக்கு பெரும் பின்னடைவு

மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., கூட்டணி அபாரம்!: காங்கிரஸ் தலைமையிலான அணிக்கு பெரும் பின்னடைவு

மும்பை: மஹாராஷ்டிராவில், 246 நகராட்சிகள் மற்றும், 42 நகர பஞ்சாயத்துகள் என, மொத்தம் 288 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான ஆளும், 'மஹாயுதி' கூட்டணி, 212ல் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணி, 48 உள்ளாட்சி அமைப்புகளை மட்டுமே கைப்பற்றி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., இடம் பெற்ற மஹாயுதி கூட்டணியின் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 246 நகராட்சிகள் மற்றும் 42 நகர பஞ்சாயத்துகள் என, மொத்தம் 288 உள்ளாட்சி அமைப்புகளுக்கு, கடந்த 2 மற்றும் 20ம் தேதிகளில், இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y3x08917&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 இந்த தேர்தலில், ஆளும் மஹாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான காங்., - உத்தவ் தாக்கரேயின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., இடம் பெற்ற மஹா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 246 நகராட்சிகளில், ஆளும் மஹாயுதி கூட்டணி, 178ஐ கைப்பற்றி சாதித்துள்ளது. இதில், பா.ஜ., 100; துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா 45; மற்றொரு துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்., 33 நகராட்சிகளை கைப்பற்றி உள்ளன. மஹா விகாஸ் அகாடி கூட்டணி, 41 நகராட்சிகளையே பிடித்துள்ளது. இதில், காங்., 26; உத்தவ் சிவசேனா ஏழு; தேசியவாத காங்., சரத் சந்திர பவார் பிரிவு எட்டு இடங்களிலும் வென்றுள்ளன. மற்ற 27 நகராட்சிகளை இதர கட்சிகள் கைப்பற்றி உள்ளன. அதேபோல, 42 நகர பஞ்சாயத்துகளில், 34ஐ மஹாயுதி கூட்டணி கைப்பற்றி உள்ளது. பா.ஜ., 23; சிவசேனா எட்டு; தேசியவாத காங்.,3 நகர பஞ்சாயத்துகளிலும் வென்றுள்ளன. மஹா விகாஸ் அகாடி கூட்டணி, ஏழு பஞ்சாயத்துகளை மட்டுமே பிடித்துள்ளது. கடந்தாண்டு சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் ஒரு முறை ஆளும் மஹாயுதி கூட்டணி தன் பலத்தை நிரூபித்துள்ளது. மஹாயுதி கூட்டணி தரப்பில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர், மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அது, தற்போது அவர்களுக்கு கை கொடுத்துள்ளது. ஆனால், மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் ஒருங்கிணைப்பே இல்லை. காங்., சில பகுதிகளில் கடுமையாக போராடினாலும், உத்தவ் சிவசேனா நிர்வாகிகள் களத்துக்கே வரவில்லை. சரத் பவார் தரப்பு நிர்வாகிகள், தங்கள் சொந்த தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தினர். இதுவே, அக்கூட்டணியின் தோல்விக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

மும்பை மாநகராட்சி தேர்தல்: காங்கிரஸ் தனித்து போட்டி

ஆசியாவிலேயே பணக்கார மாநகராட்சியான மும்பை உட்பட மஹாராஷ்டிராவில் உள்ள, 29 மாநகராட்சிகளின், 2,869 வார்டுகளுக்கு, 2026 ஜனவரி, 15ல், ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது; 16ல் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில், ''மும்பை மாநகராட்சி தேர்தலில், காங்., தனித்து போட்டியிடும்,'' என, மஹாராஷ்டிரா காங்., பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா நேற்று அறிவித்தார். இதனால், மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் சலசலப்பு உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

வாய்மையே வெல்லும்
டிச 22, 2025 13:50

இதே நாளில் அந்நிய நாடான பட்டயாவிலும் தேர்தல் நடந்துள்ளதாம்.


அப்பாவி
டிச 22, 2025 12:26

vennu கேரளாவில் evm மிஷின் பற்றி என்ன சொல்கிறார்


krishna
டிச 22, 2025 17:21

SIR NEENGA VERA EERA VENGAAYAM VENUGOPAL 200 ROOVAA COOLIKKU EDHA VENA VIPPARU.


Venugopal, S
டிச 22, 2025 23:14

அங்கே inti கூட்டணி ஆட்சி நடப்பதால் தேர்தல் நேர்மையாகவும் நடந்தது. கான் க்ராஸ்சின் மகத்தான வெற்றி அதற்கு சாட்சி


duruvasar
டிச 22, 2025 11:08

மதியத்திற்கு மேல்தான் வருவார்கள்.


ராமகிருஷ்ணன்
டிச 22, 2025 10:19

200 ரூபாய் ஊபிஸ்களின் கதறல் போதவில்லை. இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறேன்


Ambika. K
டிச 22, 2025 07:15

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தல் திருத்தணி மலை மட்டுமல்ல சாதாரா மலை மீதும் எதிரொலிக்கும்.


Palanisamy Sekar
டிச 22, 2025 05:22

அவ்ளோதான் காங்கிரசுக்கு இறுதி சடங்கை செய்தாச்சு போங்க. இனி தொல்லியல் துறையை கொண்டுதான் காங்கிரஸ் என்கிற கட்சி நாட்டில் இருந்ததா என்று தேடவேண்டும் போல. நாடு செய்த புண்ணியம் போல.


J.V. Iyer
டிச 22, 2025 05:21

எதற்காக சிவசேனா தொடங்கப்பட்டதோ, அதை எதிர்த்து பால் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரேயின் செயல் தந்தைக்கு பச்சை துரோகம். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்ற்றுவதை எதிர்த்து அண்மையில் கையெழுத்திட்டது மன்னிக்கமுடியாதது. ஹிந்துக்கள் மன்னிக்கக்கூடாது.


Kasimani Baskaran
டிச 22, 2025 04:24

அதே போரடிக்கும் ஓட்டு திருட்டு, இவிஎம் பாஜகவுக்கு வேலை செய்கிறது என்று உருட்டுவதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.


தாமரை மலர்கிறது
டிச 22, 2025 02:23

காங்கிரஸ் என்ற கட்சி மன்மோகன் சிங்குடன் முடிந்து விட்டது. இனி அதைப்பற்றி பிரயோஜனமில்லை.


Venugopal, S
டிச 22, 2025 01:49

இருக்க வே இருக்கு, ஓட்டு திருட்டு, EVM மெஷின் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டும்...


Keshavan.J
டிச 22, 2025 06:50

உன் புலம்பல் பார்த்த சந்தோஷம்மாவும் மற்றும் சிரிப்பும் வருது. ஓரமா ஒக்காந்து அழு


vivek
டிச 22, 2025 07:25

ஓசி பிரியாணிக்கும் இருநூறு ரூபாய்க்கும் அண்டி பிழைக்கும் வீணா போன...


Barakat Ali
டிச 22, 2025 13:47

ராகுலின் பிதற்றலே அதுதானே ????


முக்கிய வீடியோ