உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வுக்கு கிடைத்தது ரூ.259 கோடி நன்கொடை

பா.ஜ.,வுக்கு கிடைத்தது ரூ.259 கோடி நன்கொடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி,: தேர்தல் அறக்கட்டளைகள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு 2022 - 23ல் வழங்கப்பட்ட நன்கொடைகளில், 71 சதவீத தொகையான 259 கோடி ரூபாய், பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளது. தேர்தல் பங்கு பத்திர விற்பனை வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் வழங்கப்படுவது போலவே, அறக்கட்டளைகள் வாயிலாகவும் நன்கொடைகள் அளிக்கப்படுகின்றன.கடந்த 2013 முதல் இந்த நடைமுறை அமலில் உள்ளது.இந்த நன்கொடைகளை வசூலித்து அரசியல் கட்சிகளுக்கு வழங்குவதற்கு என்றே, பல்வேறு நிறுவனங்களும் அறக்கட்டைகளை துவங்கி, அதன் வாயிலாக நன்கொடைகளை பெற்று வினியோகித்து வருகின்றன. அந்த வகையில், 2022 - 23ம் ஆண்டு அறக்கட்டளைகள் வாயிலாக வசூலான நன்கொடை விபரங்களை ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:கடந்த 2022 - 23ல், மொத்தம் 39 பெரு நிறுவனங்கள், 363 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடைகளை அரசியல் கட்சிகளுக்கு வழங்கி உள்ளன. இதில், 34 பெரு நிறுவனங்கள் 360 கோடி ரூபாய் நன்கொடை தொகையினை 'ப்ரூடண்ட்' தேர்தல் அறக்கட்டளைக்கு அளித்துள்ளன. இதில், 259 கோடி ரூபாய் நன்கொடை, பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளது. இது மொத்த நன்கொடை வசூலில் 71 சதவீதமாக உள்ளது. பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சிக்கு 90 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. இது மொத்த வசூலில் 25 சதவீதம்.ஒய்.எஸ்.ஆர்., காங்., - ஆம் ஆத்மி, காங்., உள்ளிட்ட மூன்று கட்சிகளுக்கும் சேர்த்து, 17.40 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளன.ப்ரூடண்ட் தேர்தல் அறக்கட்டளை மட்டுமே, பா.ஜ.,வுக்கு 256 கோடி ரூபாய் அளித்துள்ளது. கடந்த 2021 - 22ல் பா.ஜ.,வுக்கு 336 கோடி ரூபாய் கிடைத்தது.பா.ஜ., - பாரத் ராஷ்ட்ர சமிதி, ஒய்.எஸ்.ஆர்., காங்., - காங்., உள்ளிட்ட கட்சிகளுக்கு ப்ரூடண்ட் தேர்தல் அறக்கட்டளை நன்கொடை அளித்து உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

J.Isaac
ஜன 05, 2024 18:19

நன்கொடை அல்ல, கையூட்டு


Indian
ஜன 05, 2024 10:18

கேட்டு வாங்கியதா, மிரட்டி வாங்கியதா அல்லது சன்மானமா ?


Karmegam,Sathamangalam
ஜன 05, 2024 14:26

எதுவாக இருந்தாலும் உனக்கு என்ன அக்கறை போயி உன் டொப்பிள் கொடி நாட்டுக்கு நீயும் சேர்ந்து பிச்சை எடுத்து அவன்களின் ஒரு வேளை பசியையாவது போக்கு..


duruvasar
ஜன 05, 2024 10:12

ஜெ ஹி புரம் டிரஸ்ட் என ஆரம்பித்து திமுகவுக்கு கார்பரேட் லஞ்சம் தரலாமே.


செந்தமிழ் கார்த்திக்
ஜன 05, 2024 10:11

உலகிலையே பணக்கார கட்சி BJParty தான். (குறிப்பு : உலகிலையே). மேற்கூறிய தொகை எல்லாம் சும்மா டீ, சமோசா சாப்பிட மட்டுமே. கார்ப்பரேட் கம்பனிகளின் பின்வாசல் வழியாக வாங்கியது எல்லாம் வேற கணக்கு. சும்மாவா 15 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி செய்தார்கள். சாதாரண மக்களுக்கு இதன் பின்னணி புரிய வாய்ப்பே இல்லை.


R.RAMACHANDRAN
ஜன 05, 2024 09:59

இந்த நாட்டில் பெரும் நிறுவனங்கள் ஆளும் அரசியல் காட்ச்சிகளுக்கு நிதியினை வாரி வழங்குவதால் அவர்கள் சொல்லும் வேலையையெல்லாம் அரசாங்கத்தை ஆள்பவர்கள் செய்கின்றனர்.ஏழைகளுக்காக அரசாங்கம் என கபட நாடகம் நடத்துகின்றனர்.


jagan
ஜன 05, 2024 03:36

செந்தில் பாலாஜி கரூர் வீடு 310 கோடி. 260 கோடி செலவு செய்தாகிவிட்டது (இத்தாலி மாபிள் மட்டுமே 86 கோடி).


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 05, 2024 01:55

கார்ப்பரேட் லஞ்சம்.


vadivelu
ஜன 05, 2024 07:44

நீங்க சொன்னா சரியாய் இருக்கும், உங்க அனுபவம் சொல்லுது.


வாய்மையே வெல்லும்
ஜன 05, 2024 07:48

இம்ரான் புத்தி இப்படி தான் பேசுவாய்


Ramesh Sargam
ஜன 05, 2024 00:35

காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தனியாக எவ்வளவு கிடைத்தது என்று கூறவில்லையே?


Kumar
ஜன 04, 2024 23:40

இந்த 259 கோடி ஊழலை உச்ச நீதிமன்றம் ஏன் கண்டு கொள்ள மறுக்கிறது?


Kundalakesi
ஜன 04, 2024 23:05

ED raid prudent la nadakuma


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 05, 2024 01:56

பாஜாக்காவுக்கு பணம் வரலைன்னா நிச்சயம் நடக்கும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை