மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
ஷிவமொகா: ''கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பெயரில், 40,000 கோடி ரூபாய் ஊழல் செய்த பா.ஜ.,வுக்கு, எனது காசோலை பவுன்ஸ் ஆனதாக கூறி, என் பதவியை ராஜினாமா செய்யுமாறு கேட்க தகுதி இல்லை,'' என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.ஷிவமொகாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:கொரோனா நேரத்தில் ஊழல் நடந்ததாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் குற்றம் சாட்டி உள்ளார். இதில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா குடும்பத்தினர் பெயர் அடிபடுகிறது. அப்படி இருந்தும் பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா, என்னை ராஜினாமா செய்ய சொல்வது கேலிக்கூத்து.காசோலை மூலம் லஞ்சம் வாங்கிய அப்பாவை சிறைக்கு அனுப்பிய வேலையை நான் செய்யவில்லை. தைரியம் இருந்தால், எத்னாலின் குற்றச்சாட்டுக்கு விஜயேந்திரா பதில் செல்லலட்டும்.என் தந்தை மீது சி.பி.ஐ., ஊழல் வழக்கு பதிவு செய்தபோது, தடை உத்தரவு வாங்காமல், நீதிமன்றத்தில் விடுலையானார். தற்போது காசோலை பவுன்ஸ் பண பரிவர்த்தனை, எனது தந்தை உயிருடன் இருக்கும் போது நடந்தது. இப்போது நீதிமன்றம் மூலம் தீர்த்து வைத்துள்ளோம்.கிராம பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற தகுதியற்ற எம்.எல்.சி., ரவிகுமாரும்; உத்தரஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பங்காரப்பா லே - அவுட் என்ற பெயரில், நில மோசடி செய்த அசோக் ஆகியோர் எனக்கு எதிராக பேசுவது நகைச்சுவையாக உள்ளது. நேரம் வரும்போது அனைத்து தவறான செயல்களையும் மக்கள் முன் கொண்டு வருவோம்.அயோத்தியில் ராமர் பெயரில் நிதி முறைகேடு நடந்துள்ளது.பணம் சம்பாதிப்பதற்காக ராமரை வீதிக்கு கொண்டு வரக்கூடாது. இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
2 hour(s) ago
2 hour(s) ago