உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்பால் வரம்பில் பிரதமர்: பா.ஜ.,

லோக்பால் வரம்பில் பிரதமர்: பா.ஜ.,

புதுடில்லி:லோக்பால் சட்டவரம்பில் பிரதமரை கொண்டு வர வேண்டும் என பா.ஜ., கூறியுள்ளது. இது தொடர்பாக பா.ஜ., செய்தி தொடர்பாளர் சையத் ஷாநவாஸ் ஹூசைன் கூறுகையில், லோக்பால் மசோதா தொடர்பாக எங்களது நிலை தெளிவாக உள்ளது. பிரதமரையும் சட்டவரம்பில் சேர்த்து வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும். கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது பிரதமராக இருந்த வாஜ்பாய், தன்னையும் லோக்பால் வரம்பில் சேர்த்துக்கொள்ள தானாக முன் வந்தார் என கூறினார். மேலும் அவர், இந்த சட்டவரம்பில் நீதித்துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும். மசோதா தொடர்பாக சட்டம் மற்றும் நீதிக்கான நிலைக்குழுவில் எங்களது கருத்துக்களை தெரிவிப்போம் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ