உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாஜ எம்.எல்.ஏ. எம்.பி மீது தாக்குதல்; மம்தாவுக்கு 24 மணி நேர கெடு: எச்சரித்த மேற்கு வங்க கவர்னர்!

பாஜ எம்.எல்.ஏ. எம்.பி மீது தாக்குதல்; மம்தாவுக்கு 24 மணி நேர கெடு: எச்சரித்த மேற்கு வங்க கவர்னர்!

கோல்கட்டா: பாஜ எம்.பி. எம்.எல்.ஏ. மீது தாக்குதல் நடத்தப்பட்டநிலையில், முதல்வர் மம்தாவுக்கு, மேற்கு வங்க கவர்னர் சி.வி. அனந்த போஸ்,24 மணி நேர இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஜல்பைகுரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாக்ரகட்டாவில் நிவாரணப் பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்தபோது செல்வாக்கு மிக்க பழங்குடியினத் தலைவரும் பாஜ எம்பியுமான ககென் முர்மு மற்றும் உள்ளூர் எம்எல்ஏ சங்கர் கோஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த தாக்குதலில் அவர்கள் இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். காயமடைந்த தலைவர்களை இன்று மேற்கு வங்க கவர்னர் அனந்த போஸ் நேரில் சென்று பார்வையிட்டார்.அதனை தொடர்ந்து அனந்த போஸ் கூறியதாவது:சிலிகுரியில் உள்ள மருத்துவனையில் தாக்குதல் நடத்தப்பட்ட தலைவர்களை நேரில் சென்று பார்வையிட்டேன். முர்முவின் கண்ணுக்குக் கீழே எலும்பு முறிவு உட்பட முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சையளிக்க அறுவை சிகிச்சை தலையீடு தேவைப்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். - முதல்வர் மம்தா உடனடியாக சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும் அல்லது சாத்தியமான அரசியலமைப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும். மாநிலத்தில் தற்போது இது ஒரு வினோதமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு மக்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். அராஜகத்தை அனுமதிக்க முடியாது. காவல்துறை பாதுகாக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு நெரிக்கப்படுகிறது. வங்கம் சிறந்த காவல் துறைக்கு தகுதியானது. மக்கள் குண்டர்களால் பயப்படுகிறார்கள். இது தொடர முடியாது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், இயல்புநிலை திரும்ப வேண்டும்.குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும்.மாநிலத்தில் ஏற்பட்டுள்ள 'கழுத்தை நெரிக்கும்' சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்த அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் சமர்ப்பித்துள்ளோம்.இவ்வாறு அனந்த போஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ