மேலும் செய்திகள்
பல பெண்களை ஏமாற்றிய 'கல்யாண மன்னன்' கைது
08-Dec-2024
பெங்களூரு : பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி., தேஜஸ்வி சூர்யா, திருமணத்திற்கு தயாராகிறார். பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி., தேஜஸ்வி சூர்யா. 'யங், டைனமிக் அரசியல்வாதி' என அறியப்படும் இவர், லோக்சபாவில் பேசிய உரைகளின் மூலம், கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுதும் பிரபலமானார்.அரசியல் வாழ்க்கையில் பிசியாக இருக்கும் இவருக்கு 34 வயதாகியும், இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்ட போது, அமைதி காத்து வந்தார். தற்போது சத்தமில்லாமல் திருமண வேலையை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னையை சேர்ந்த பாடகரும், பரதநாட்டிய கலைஞருமான சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இரு குடும்பத்தினரும் திருமணம் குறித்து பேசி முடிவு செய்ததாகவும், மார்ச் 4ம் தேதி பெங்களூரில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், தேஜஸ்வி சூர்யா இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மணப்பெண்
மணப்பெண் கர்நாடக இசைப் பாடகி, பரத நாட்டியம் இரண்டிலும் சிறப்பாக செயல்படுகிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் எம்.ஏ., பட்டம்; சென்னை சமஸ்கிருத கல்லுாரியில் சமஸ்கிருதத்தில் எம்.ஏ., பட்டம்; சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் பயோ இன்ஜினியரிங் படிப்பில் பி.டெக்., பட்டம் படித்து உள்ளார்.'பொன்னியின் செல்வன்' 2 ம் பாகம் கன்னட மொழி பெயர்ப்பில் ஒரு பாடலும் பாடி உள்ளார். சைக்கிளிங், டிரெக்கிங், நடைபயணம் போன்றவற்றில் ஈடுபாடு உடையவர். தனியாக யு டியூப் சேனலும் நடத்தி வருகிறார். இவரது சேனலை, 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
08-Dec-2024