உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் பா.ஜ., தேசிய குழுக் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

டில்லியில் பா.ஜ., தேசிய குழுக் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், பா.ஜ.,வின் இருநாள் தேசிய குழு கூட்டம் புதுடில்லியில் இன்று துவங்கியது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அரங்கில் வைக்கப்பட்டிருந்த மத்திய அரசின் சாதனைகள் குறித்த கண்காட்சியை பார்வையிட்டார்.லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. இதற்கான பணிகளை தலைமை தேர்தல் கமிஷன் முன்னெடுத்துள்ளது. தேர்தலை ஒட்டி காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரங்களை துவக்கி உள்ளன.இந்நிலையில், பா.ஜ.,வின் தேசிய குழு கூட்டம் டில்லியில் இன்று துவங்கியது. அங்குள்ள பாரத் மண்டபத்தில் கட்சியின் தேசிய தலைவர் .நட்டா தலைமையில் இரண்டு நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மோடியை, சால்வை அணிவித்து நட்டா வரவேற்று அழைத்து சென்றார்.பா.ஜ., தேசிய குழுக்கூட்டத்தை முன்னிட்டு, மாநாட்டு அரங்கில் பா.ஜ., அரசின் சாதனைகளை விளக்கும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை பிரதமர் மோடி, நட்டா ஆகியோர் பார்வையிட்டனர்.

நாளை பிரதமர் உரை

இக்கூட்டத்தில், லோக்சபா தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தேர்தல் யுக்திகள், கருத்துக்கணிப்பு ஆய்வுகள் குறித்தும் இரண்டு நாள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. நாளை (பிப்.18) பா.ஜ.,வின் முக்கிய கூட்டத்தின் போது மோடி அரசின் 10 ஆண்டு கால சாதனை குறித்து தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, சட்டப்பிரிவு 370 ரத்து, ஜி- 20 மாநாடு நிகழ்வு போன்றவற்றை வெற்றிகரமாகச் செய்த பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நிறைவு உரை ஆற்ற உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

SRIDHAAR.R
பிப் 17, 2024 13:29

கள பணியில் திமுகவை போல பணியாற்ற யாரும் இல்லை


AMSA
பிப் 17, 2024 16:33

தமிழ் நாட்டில் திமுகவை போல் கொள்ளை அடிக்கவும் யாரும் இல்லை


A1Suresh
பிப் 17, 2024 12:55

இதற்கு முந்தைய பாஜக தலைவர்கள் போல இன்றைய தொண்டர்கள் உள்ளனர். வெறுமனே கட்சித்தலைவர்களின் முகத்தை பார்த்து ஓட்டு விழுந்துவிடாது. எப்படி திரு.அண்ணாமலை அவர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் பாதயாத்திரை சென்று பேசுகிறாரோ அது போல பூத்-ஏஜென்டுகள் தத்தமது பகுதிகளில் பிரசாரம் செய்யவேண்டும். குறைந்தது நாற்பத்தெட்டு நாள்கள் ஒரு மண்டலமாவது மக்களை சந்தித்து தீவிர பிரசாரம் செய்யவேண்டும்


A1Suresh
பிப் 17, 2024 12:51

தமிழகத்தில் பாஜக தூங்குகிறது. பூத்-கமிட்டி உறுப்பினர்கள் பெரும்பாலோர் சோம்பேறிகள். கட்சியில் களையெடுக்க வேண்டும். எஸ்விசேகர் போல கட்சிப்பணி ஆற்றுகிறார்கள். இதனால் ஒரு பலனும் கிட்ட்டாது. திரு.அண்ணாமலை போல பணியாற்ற வேண்டும். வடக்கு மாநிலங்கள், கர்நாடகம் போல இங்கும் தொண்டர்கள் இல்லை.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ