உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு கெஜ்ரிவாலை எதிர்த்து பர்வேஷ் வர்மா ஆதிஷி சிங்குக்கு எதிராக ரமேஷ் பிதுரி

பா.ஜ., வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு கெஜ்ரிவாலை எதிர்த்து பர்வேஷ் வர்மா ஆதிஷி சிங்குக்கு எதிராக ரமேஷ் பிதுரி

புதுடில்லி:டில்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை பா.ஜ., நேற்று வெளியிட்டது.மொத்தம் 70 தொகுதிகளைக் டில்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கிறது. ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறது.இந்நிலையில், பா.ஜ.,வேட்பாளர்களின் முதல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.அதில், 29 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் புதுடில்லி தொகுதியில், முன்னாள் எம்.பி., பர்வேஷ் வர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.முதல்வர் ஆதிஷி சிங் களமிறங்கியுள்ள கல்காஜி தொகுதியில், முன்னாள் எம்.பி., ரமேஷ் பிதுரி போட்டியிடுகிறார்.அக்கட்சியின் தேசியப் பொறுப்பாளர்களான துஷ்யந்த் குமார் கவுதம் - கரோல் பாக், ஆஷிஷ் சூத் - ஜனக்புரி, அரவிந்தர் சிங் லவ்லி - காந்தி நகர் ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர்.ஆம் ஆத்மி அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி வகித்து ராஜினாமா செய்து, பா.ஜ.வில் சேர்ந்த கைலாஷ் கெலாட், பிஜ்வாசன் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.டில்லி பா.ஜ., முன்னாள் தலைவர் சதீஷ் உபாத்யாய் மாளவியா நகரில் போட்டியிடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை