உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., ரூ.2,100; காங்கிரஸ் ரூ.3,000; மஹா.,வில் போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதி!

பா.ஜ., ரூ.2,100; காங்கிரஸ் ரூ.3,000; மஹா.,வில் போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதி!

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 வழங்கப்படும் என பா.ஜ.,வும், மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என காங்கிரஸ் கூட்டணி கட்சியும் தேர்தல் வாக்குறுதி வெளியிட்டுள்ளனர்.மஹாராஷ்டிராவில் நவம்பர் 20ம் தேதி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டுப்பதிவுக்கு குறுகிய காலமே உள்ளதால் பா.ஜ.,வின் மஹாயுதி கூட்டணியும், காங்கிரசின் மகா விகாஸ் அகாடியும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளன. மும்பையில் நடந்த நிகழச்சியில் இன்று (நவ.,10) பா.ஜ., தேர்தல் வாக்குறுதியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.

வாக்குறுதிகள் என்னென்ன?

* பெண்களுக்கு மாதம் ரூ.2,100 ஊதியத் தொகை வழங்கப்படும். மாதம் ரூ.2,100 வீதம் ஆண்டுக்கு மகளிருக்கு தலா ரூ.25,200 வழங்கப்படும்.* அடுத்த ஐந்தாண்டுகளில் 25 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும்.* முதியோர் ஓய்வூதியத்தை 1,500 ரூபாயில் இருந்து 2,100 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.* விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும்.* எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி., பிரிவினருக்கு ரூ.15 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.* மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வரப்படும்.*மின் கட்டணத்தில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.* 25,000 பெண் போலீசார் பணியமர்த்தப்படுவார்கள் * 45,000 கிராமங்களுக்கு விரிவான சாலை அமைக்கப்படும்.* விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.15,000 வழங்கப்படும்.

காங்கிரஸ் கூட்டணி கட்சி வாக்குறுதி

மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சி தேர்தல் வாக்குறுதிகளை மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூ கார்கே உள்ளிட்ட தலைவர்கள் வெளியிட்டனர்.* மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆட்சிக்கு வந்தால், மாதம் தோறும் பெண்களுக்கு ரூ.3000 வழங்கப்படும்.* ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு, ரூ.3 லட்சம் உதவி பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.* மஹாராஷ்டிரா மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டம் செயல்படுத்தப்படும்.* விவசாயிகள் கடனை உரிய நேரத்தில் கட்டி முடித்தால், ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

சந்திரசேகர்
நவ 11, 2024 12:21

இப்படியே போனால் யாரும் வேலைக்கு போய் சம்பாதிக்காமல் வீட்டீலேயே இருந்து சாப்பிட்டு கொண்டு ஜாலியாக இருக்கலாம்


அப்பாவி
நவ 11, 2024 07:49

பாஞ்சி லட்சம் குடுக்கலாம்ன மாதிரி.


Murthy
நவ 10, 2024 22:03

வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க முடியாதவர்கள் பணம்கொடுத்து ஓட்டை வாங்குவார்கள் . ...


முருகன்
நவ 10, 2024 20:53

இலவசங்களை கேலியாக பேசியவர்கள் இலவசம் கொடுக்க வைத்து இருப்பதே மக்களுக்கு கிடைத்த வெற்றி


Ramesh Sargam
நவ 10, 2024 20:07

நல்ல படிப்பு கொடுப்போம், நல்ல வேலைவாய்ப்புக்கள் உருவாக்குவோம், நல்ல மருத்துவ உதவி செய்வோம் என்று வாக்குறுதி செய்யுங்கள். அதைவிட்டு பணம் கொடுத்து மக்களை கவர நினைக்காதீர்கள். அது முறையல்ல. அது திருட்டுத்தனம். அது கேப்மாரித்தனம்.


Sampath Kumar
நவ 10, 2024 17:20

அனைத்துக்கும் ரோல் மாடல் திராவிட மோதலே பிஜேபிக்கு உண்ணாமல் செல்வாக்கு இருந்தால் பணம் கொடுக்க மாட்டோம் என்று சொல்ல ,முடியுமா ?


ஆரூர் ரங்
நவ 10, 2024 16:59

மூணு படி ல ஆரம்பிச்சது இப்போ எங்கேயோ போய் கொண்டிருக்குது.


RAAJ68
நவ 10, 2024 16:50

இது லஞ்சம் கொடுப்பதற்கு சமம் இப்படிப்பட்ட ஆசைகளை காட்டி ஓட்டு வாங்குவதை தடை செய்ய உச்ச நீதிமன்றம் முன் வர வேண்டும் எந்த கட்சியும் இந்த மாதிரி மக்களை பிச்சை எடுக்க அனுமதிக்க கூடாது மக்களுக்கு யார் மீது நம்பிக்கை இருக்கிறதோ அவர்களுக்கு ஓட்டு போடட்டும் நாங்கள் பணம் கொடுப்போம் நிலம் கொடுப்போம் இலவச மின்சாரம் கொடுப்போம் இலவச பேருந்து வசதி தருவோம் இதையெல்லாம் மறைமுக லஞ்சம் கொடுப்பதற்கு சமம் இல்லையா உச்சநீதிமன்ற நீதிபதிகளே நீங்கள் இதையெல்லாம் கவனிக்க வேண்டாமா


இறைவி
நவ 10, 2024 16:47

மக்களுக்கு இலவங்களைக் கொடுத்து ஓட்டு வாங்கி பதவியில் அமர்ந்து அதன் மூலம் பலமடங்கு கொள்ளை அடித்து அந்த பணத்தில் அடுத்த தேர்தலில் மீண்டும் பணம் கொடுத்து மீண்டும் ஒட்டு மீண்டும் பதவி என்பதை தீயமுக ஆரம்பித்ததை அஇஅதிமு கழகமும் காபி அடித்தது இல்லாமல் இந்தியா முழுவதும் பரப்பி விட்டது. இண்டி கூட்டணியில் காங்கிரஸ் இந்த வழியை நன்றாக பிடித்துக் கொண்டு இந்தியா முழுதும் கடை பிடிக்க ஆரம்பித்து விட்டது. பிஜேபி நாட்டின் முன்னேற்றம் பற்றி மட்டுமே பேசி ஓட்டு வாங்க முடியாத நிலைமை. மக்கள் நாளைய நல்வாழ்வை விட இன்றைய ஒட்டுக்கு கிடைக்கும் பணத்தையும், இலவங்களையும், சாராயத்தையும் பெரிதாக நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். இன்று அமலில் இருக்கும் சட்டங்கள் பெரும்பாலும் வழக்குகளை ஆயுளுக்கும் இழுக்கக் கூடியவைகளாக, அரசியல் வியாதிகளுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் மட்டுமே உதவக்கூடியவைகளாக காங்கிரஸ் ஆட்சியில் இயற்றப்பட்டவை. உதாரணம், நேஷனல் ஹெரால்டு வழக்கு, மேல்முறையீட்டில் இருக்கும் 2ஜி வழக்கு, பல மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மீது இருக்கும் ஊழல் வழக்குகள், இவை எல்லாம் பழைய சட்டங்கள் கொடுக்கும் குறுக்கு வழிகளில் வாய்தா, வாய்தா என்று தலைமுறைகளுக்கு தொடர்வதை பார்க்கிறோம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சவுகரியமாக வெளி உலகில் உலாவி வயது முதிர்ந்து இறந்தும் விடுவார்கள். வழக்கு மட்டுமே உயிரோடு இருக்கும். இம்மாதிரி தாமதங்களை தவிர்க்க சட்ட மாற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் ராகுல் மாதிரி ஆட்களும் அவரின் இண்டி கூட்டணி தலைவர்களும் அரசியல் சாசனத்தை மாற்ற சதி என்று முட்டுக் கட்டை போடுகிறார்கள். இம்மாதிரி சட்ட மாற்றத்திற்கு இரண்டு சபைகளிலும் பிஜெபிக்கு பெரும்பான்மை வேண்டும். அந்த பெரும்பான்மை, நாடாளுமன்றத்தில் இருந்தால் மட்டும் போதாது. பல மாநிலங்களிலும் ஆட்சி மற்றும் பெரும்பான்மை வேண்டும். மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க அந்த பெரும்பான்மையை பெற பிஜெபியும் கீழே இறங்கி வருகிறது. மகாபாரதத்தில் கண்ணன் செய்தது போல, அநீதியை அழிக்க வெறும் தர்மம், நீதி மட்டுமே போதாது. சில நேரங்களில் அநீதியின் வழிகளில்தான் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்துதான் பிஜெபியும் அந்த வழியிலேயே செல்கிறது. அதுவும் இலவசங்களை அறிவிக்கிறது. என்று மக்கள் நேர்மையான ஆட்சியையும், உழைப்பினால் கிடைக்கும் உயர்வையும் விரும்புகிறார்களோ, அன்றுதான் இம்மாதிரி சுரண்டல் கட்சிகள் மறையும்.


Amar Akbar Antony
நவ 10, 2024 16:44

மிக கேவலமான வாக்குறுதிகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை