உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துரைமுருகனுக்கு ஏமாற்றம்; உதயநிதிக்கு ஏற்றம்: தமிழிசை நச்

துரைமுருகனுக்கு ஏமாற்றம்; உதயநிதிக்கு ஏற்றம்: தமிழிசை நச்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வர் பேசியது துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும், உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும் என்று பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார். ஒவ்வொரு முறையும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது முதல்வர் ஸ்டாலினிடம் தவறாமல் கேட்கப்படும் கேள்வி, 'அமைச்சரவை மாற்றம் இருக்குமா, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி எப்போது' என்ற கேள்விதான். பல்வேறு வார்த்தைகளில் கேள்விகள் முன் வைக்கப்பட்ட போதிலும் ஒவ்வொரு முறையும் முதல்வர் ஸ்டாலின் அளித்த பதிலால் தி.மு.க.,விலும், உதயநிதி ஆதரவாளர்கள் தரப்பிலும் எதிர்பார்ப்பு கூடிக் கொண்டு வருகிறது.இன்றைய லேட்டஸ்ட் செய்தியாளர்களின் சந்திப்பிலும் கூட முதல்வர் ஸ்டாலின் சொன்னது இதுதான்: அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்பதுதான். அவரின் சூசகமான பதில், உதயநிதி விரைவில் துணை முதல்வர் ஆவது உறுதி என்பதையே சொல்கிறது என்று உதயநிதி ஆதரவாளர்கள் குஷியாக இருக்க ஆரம்பித்துள்ளனர்.இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பதிலளித்து வருகின்றனர். பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசையும் இதற்கு பதில் அளித்துள்ளார். அவர் கூறி உள்ளதாவது; யார் ஏமாற போகின்றனர் என்பது அமைச்சரவை மாற்றத்தின் போது தெரியும். முதல்வர் கூறிய மாற்றம் துரைமுருகன் போன்றோருக்கு ஏமாற்றமாகவும், உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும்.தி.மு.க.,வில் பல்வேறு மூத்த நிர்வாகிகள் இருக்கும் போது வாரிசு அரசியலை முன்னெடுப்பது சரியா?இவ்வாறு தமிழிசை கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ravi Kulasekaran
செப் 24, 2024 22:11

ஒரு வேளை சனாதன வழக்கில் தண்டனை 3 வருடங்களுக்கு மேல் கிடைத்தால் என்ன ஆகும்


Dharmavaan
செப் 24, 2024 21:15

வட இந்தியர்கள் உணர்ந்தார்கள் தமிழ் நாடு இன்னும் உணரவில்லை எமோஷனல் இடியட்ஸ்


Narayanan Muthu
செப் 24, 2024 19:23

அம்மணிக்கு மாற்றம் வந்தாலும் எப்போதும் ஏமாற்றம்தான். அந்த வயித்தெரிச்சல் இப்படி பேச வைக்கிறது.


அப்பாவி
செப் 24, 2024 17:17

அண்ணாச்சிக்கு ஏற்றம். மியூசிக்குக்கு இறக்கம்னு சொன்னா நம்புவாங்களா?


ஆரூர் ரங்
செப் 24, 2024 17:04

காங்கிரசை அழித்தது வாரிசு அரசியல்தான் என்பதை திமுக உணரவில்லை.


V RAMASWAMY
செப் 24, 2024 16:29

காலங்காலமாக அந்த கட்சியின் வளர்ச்சிக்கும் ஏற்றத்திற்கும் பாடுபட்ட மூத்த தலைவர்களை உதாசீனப்படுத்தி வாரிசு அரசியலை ஆதரித்தால், கட்சியில் ஏமாற்றம் மட்டுமல்ல, கண்டிப்பாக பூசலும் விரிசலும் ஆரம்பிக்கும். இது சரிவுக்கு ஆரம்பமாயிருக்கும்.


theruvasagan
செப் 24, 2024 14:56

துரைமுருகனுக்கு எதற்கு ஏமாற்றம். மத்வங்களுக்கு துணை முதல்வர் பதவி என்பது யாராவது கொடுத்தா்தான். ஆனால் இவருக்கு பேரிலேயே உள்ளது. என்றென்றைக்கும் து.மு தான்


அரசு
செப் 24, 2024 13:53

உங்களுக்கு ஏம்மா வயிதெரிச்சல்? இருக்காதா பின்னே. தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் பதவி காலி, இரு மாநில கவர்னர் பதவி காலி, நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி, வழி காட்டுக் குழுவிலும் இடமில்லை என்று எத்தனை வேதனைகளை தாங்குவார்.


Ms Mahadevan Mahadevan
செப் 24, 2024 13:49

சொந்த அனுபவம் .பேசுகிறார்


Ramesh Sargam
செப் 24, 2024 13:31

ஆனால் துரைமுருகன் அந்த ஏமாற்றத்தை ஒப்புக்கொள்ளமாட்டார். எதிர்த்து போராடவும் மாட்டார். அந்த அளவுக்கு அடிமையாக இவ்வளவு காலங்கள் கட்சியில் காலம் கடத்திவிட்டார். அந்த கருணா குடும்பத்தினருக்கு அடிமையாக இருந்துவிட்டார். மீதி இருக்கும் காலத்தையாவது இப்பொழுது இருக்கும் ஏதோ ஒரு துறையின் அமைச்சராக இருந்துவிடலாம் என்கிற எண்ணம் அவருக்கு.


முக்கிய வீடியோ