உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் பா.ஜ., ஓட்டு சதவீதம் அதிகரிப்பு!

கேரளாவில் பா.ஜ., ஓட்டு சதவீதம் அதிகரிப்பு!

திருவனந்தபுரம் : லோக்சபா தேர்தலில் திருச்சூரில் நடிகர் சுரேஷ்கோபியின் வெற்றி மற்றும் ஒட்டுமொத்தமாக ஓட்டு சதவீதம் உயர்ந்திருப்பது, கேரளாவில் புதிய அரசியல் மாற்றத்துக்கான முன்னோட்டமாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.கேரளாவில் மார்க்., - கம்யூ., தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மற்றும் காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிகளே பாரம்பரியமாக கோலோச்சி வருகின்றன. இரு கூட்டணிகளே மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. இந்த லோக்சபா தேர்தலில் தென் மாநிலங்களில் பா.ஜ., கூடுதல் கவனம் செலுத்தியது. அதற்கான பலன் தெரியவந்துள்ளது.

ஆதரவு

தமிழகம் மற்றும் கேரளாவில், பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவிலும் இது வெளிப்படை. கர்நாடகாவில் அதிக தொகுதிகளை அள்ளியது.கேரளாவில், திருச்சூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட பிரபல நடிகர் சுரேஷ் கோபி வென்றார். மேலும், கடந்த 2019 தேர்தலின்போது, 15 சதவீதமாக இருந்த கட்சியின் ஓட்டு சதவீதம், 19 ஆக உயர்ந்துள்ளது.இது குறித்து அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளதாவது: கடந்த 2011 சட்டசபை தேர்தலில் இருந்து, பா.ஜ.,வுக்கான ஆதரவு படிப்படியாக உயரத் துவங்கியது. இந்தத் தேர்தலில் அது மிகவும் வெளிப்படையாக தெரிந்துள்ளது. ஒரு லோக்சபா தொகுதியில் வென்றதுடன், தன் ஓட்டு சதவீதத்தை பா.ஜ., கணிசமாக உயர்த்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், பா.ஜ., தன் இருப்பை உறுதி செய்ய மேற்கொண்ட முயற்சிகளே. மாநிலத்தில் சிறுபான்மையினர், குறிப்பாக கிறிஸ்துவர்கள் அதிகம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில், 46 சதவீதம் பேர் சிறுபான்மையினர். தலித் கிறிஸ்துவர் எண்ணிக்கையையும் இதனுடன் சேர்த்தால், இங்கு ஹிந்துக்களே சிறுபான்மையினர்.ஆளும் இடது ஜனநாயக முன்னணி மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை, சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலில் ஈடுபட்டுள்ளன. இதனால், ஹிந்துக்கள் தாமாகவே பா.ஜ., பக்கம் திரும்பிஉள்ளனர்.

பரபரப்பு

அதுபோலவே, கிறிஸ்துவர்களும், பா.ஜ.,வை ஒரு மதவாத கட்சி என்ற பிம்பத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். அனைத்து தரப்பினருக்குமான கட்சியாக பா.ஜ., அங்கு பார்க்கப்படுகிறது. அதனால், கிறிஸ்துவர்களின் ஒரு பகுதியினர் ஆதரவும், பா.ஜ.,வுக்கு கிடைத்து வருகிறது.இங்குள்ள இரண்டு கூட்டணிகளும், முஸ்லிம்களுக்கு மிகவும் ஆதரவாக உள்ளன. தேசிய அளவிலும் இதே நிலைதான் உள்ளது. இதனால், இந்தத் தேர்தல் முடிவுகள், இனி மாநிலத்தில் மும்முனை போட்டியாக மாறும். அடுத்து வரும் தேர்தல்கள் மிகவும் பரபரப்பாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மத்திய அமைச்சர் பதவி?

சுரேஷ்கோபிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது. இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:அதையெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு எம்.பி.,யாக கேரளா மற்றும் அண்டை மாநிலமான தமிழகத்துக்கு தேவையானவற்றை நிறைவேற்ற முயற்சிப்பேன். கேரளாவின் வளர்ச்சிக்காக நாம் கொண்டு செல்லும் திட்டங்களை, மத்திய அமைச்சரவை நிறைவேற்றித் தந்தால் எனக்கு போதும். ஒரு எம்.பி., யாக என்னால் பல அமைச்சகங்களில் பணியாற்ற முடியும். அதை தான் செய்ய விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Syed ghouse basha
ஜூன் 07, 2024 18:24

இது பஜகவின் வெற்றி அல்ல சுரேஷ்கோபியின் வெற்றி


ஆரூர் ரங்
ஜூன் 07, 2024 11:50

லவ் ஜிகாத்துக்கு பயந்து பெரும்பாலான கிருஸ்தவர்கள் சுரேஷ் கோபி அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். நிறைய பாதிரியார்கள் ஆதரவறிக்கை விடுத்தனர். மற்ற தொகுதி மக்களும் இனி காங்கிரசை பாக் முஸ்லிம் கட்சியாகவே பார்க்கும் நிலை விரைவில் ஏற்படும்.


tmranganathan
ஜூன் 07, 2024 08:58

சுரேஷ் கோபி மற்ற நடிகர்களைவிட மக்கள் மனதில் உயரிடம் பெற்றவர். ஆகவே மோடி ந்திரி பதவி கொடுப்பார்.


vijay
ஜூன் 07, 2024 08:37

இருபத்தி மூணு இல்லாட்டி இருபத்தி நாலு கட்சி ஒன்னு கட்சி சேர்ந்து இருநூற்றி முப்பத்தி நாலு ஜெயிச்சும் ஆட்சி அமைக்க முடியல. ஒரே கட்சி பெரும்பான்மை பெற முடியாத அளவுக்கு பல தொகுதிகளில் தோற்றாலும் ஆட்சி அமைக்க முடியுது. பிஜேபி உத்திர பிரதேச தோல்விக்கு பல காரணங்கள் சொன்னாலும், ஜாதி வாரி வேட்பாளர்கள் தேர்வில் குழப்பம், அதனால் ஏற்பட்ட உள்ளடி குளறுபடிகள், நாம்தான் ஜெயிப்போம் என்ற மமதையில் உத்திரபிரதேச பிஜேபி தொண்டர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் தேர்தல் நாட்களில் வாக்காளர்களிடம் சென்று முறைப்படி களப்பணி வேலைகள் செய்யாதது உட்பட காரணங்கள். அகிலேஷ் யாதவ் இந்த விஷயத்தில் மும்முரமா செயல்பட்டார், அவரின் யாதவ் சமுதாயம் இல்லாத பட்டியல் இன வேட்பாளர்களை நிறுத்தியது போன்ற பணிகள் அகிலேஷ் யாதவிற்கு அதிக வெற்றிகளை கொடுத்தது. இதுதான் அங்கு அரசியல் கள நிலவரம். பிஜேபி லைட்டாக, லேட்டாக விழிப்படைந்து கட்சி நான்கு-ஐந்து கட்ட தேர்தல்களில் விழிப்படைந்து களப்பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தால் ஐம்பது சீட்டுகளை பெற்று இருக்க முடியும். இந்த முறை அங்கு ஆர்.எஸ்.எஸ் களப்பணி ஆற்றாமல் ஒதுங்கி இருந்ததாக செய்திகள் உண்டு. அதுதான் உள்ளடி வேலைகள் காரணம் என்று சொல்கிறேன். அப்புறம், காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் நித்திஷ் மற்றும் நாயுடு இருவரையும் இழுத்து அவர்கள் பக்கம் கொண்டு வரவேண்டும். அங்கு குடும்பம் பெரிய கூட்டு குடும்பம், அவரவர் சக்திக்கேற்ப எனக்கு இவ்வளோ பங்கு வேணும், எனக்கு இதுதான் வேணும் என்று பங்கு போடுவார்கள். போதாக்குறைக்கு, அப்படியே இண்டி ஆட்சி அமைத்து விட்டால் அங்கு குடும்ப சிக்கல்கள் இருக்கும். பிஜேபி-யும் சும்மா இருக்காது, கொஞ்சம் எம்.பி-க்களை தங்கள் பக்கம் இழுத்து விடுவார்கள், ஆட்சி பணால், டமால். ஆக, ஆக, பிஜேபி ஆட்சி மைக்க முடிஞ்சாலும் நாம ஜெயிச்சிட்டோம் என்று இண்டி கூட்டணி ஆதரவாளர்கள் மனதை தேற்றிக்கொள்ளலாம். யார் வெளியே போயி யாருடைய ஆட்சி கவிழ்ந்தாலும் சிக்கல் நாட்டுக்குத்தான், பிரச்சினை மக்களுக்குத்தான். ஏன்னா, ஆயிரம் ரெண்டாயிரம், பத்தாயிரம், பிமிப்பிலிக்கி பிளாப்பி என்று வாங்கிட்டு வோட்டு போடற மக்கள், வோட்டு போட்ட கட்சிக்கு மாறாக பிஜேபி போன்ற கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் எங்கே இலவசம் எங்கே எனது அது இது என்று புலம்பி தீர்ப்பார்கள். நான் அவர்களிடம், நாட்டை பாருங்கள் என்று கேட்கவில்லை, நாட்டுக்காக வோட்டு போடுங்கள் என்றுகூட கேட்கவில்லை. முதல் வேண்டுகோள்- வெறும் கொலுசு, ரெண்டாயிரம் அப்புறம் பாட்டில் பிரியாணி போன்றவற்றிக்கு வோட்டு போட்டபிறகு மாசம் மாசம் என்ன ரெண்டாயிரம் ரொவாய், தினமும் பிரியாணி தரப்போறாங்களா?. ரெண்டாவது வேண்டுகோள், வெறும் அடிப்படை கணக்கு தெரிந்தவர்கள் கூட அறியமுடியும், வருஷம் ஒரு லட்சம் ரொவாய் குறைந்தது ஐந்து முதல் பத்து கோடி ஏழை பெண்களுக்கு கொடுத்தால் கூட ஐந்து வருடங்களில் இருபத்தி ஐந்து முதல் ஐம்பது லட்சம் கோடிகள் செலவாகும். நமது நாட்டின் பட்ஜெட் என்ன என்பதை தெரிந்துகொண்டால் நாடு திவாலாகும் என்பதை தெரிந்துகொள்ளலாம். இதுல வரிகளை குறைப்போம் என்றார்கள்.


அரசு
ஜூன் 07, 2024 07:56

இப்படி சொல்லிட்டு மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.


C.SRIRAM
ஜூன் 07, 2024 10:06

இன்றைய மாமூல் வாங்கியாச்சா ?


Kasimani Baskaran
ஜூன் 07, 2024 06:47

வடக்கன் தெற்கன் என்றெல்லாம் இனி உருட்ட முடியாது போல...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை