உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியல் சாசனத்தை அழிக்க நினைக்கும் பா.ஜ.,: ராகுல்

அரசியல் சாசனத்தை அழிக்க நினைக்கும் பா.ஜ.,: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜாம்ஷெட்பூர்: '' அரசியல்சாசனத்தை அழிக்க பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் விரும்புகின்றன,'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றம் சாட்டினார்.ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: நாட்டில் இரு சித்தாந்தங்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. ஒரு பக்கம் ' இண்டியா ' கூட்டணி உள்ளது. மறுபுறம் பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., ஆகியன உள்ளன. ஒரு பக்கம் அன்பு ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் ஆகியன உள்ளன. மறுபுறம் வெறுப்புணர்வு, வன்முறை, கோபம் ஆகியன உள்ளன. ' இண்டியா' கூட்டணி அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என விரும்புகிறது. ஆனால், அதனை அழிக்க வேண்டும் என பா.ஜ.,வும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் நினைக்கின்றன.கோடீஸ்வரர்களுக்கு பா.ஜ., அளிக்கும் நிதியை, மக்களுக்கு அளிக்க வேண்டும் என ' இண்டியா ' கூட்டணி விரும்புகிறது. பணவீக்கம் பெண்களை பெரிதும் பாதித்துள்ளது. அவர்கள் தான் நாட்டின் முதுகெலும்பு.மக்களிடம் பணம் இருக்கும் போது அதனை அவர்கள் செலவு செய்வார்கள். இதன் மூலம் புதிய தொழிற்சாலை உருவாவதுடன், வேலைவாய்ப்பு உருவாகும். இது எங்களது கொள்கை. இளைஞர்களை பிரதமர் மோடி வேலையில்லாதவர்களாக ஆக்கி உள்ளார். பொது மற்றும் தனியார் துறைகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இட ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் என்ற தடையை அகற்றுவோம். ஜார்க்கண்டில், தலித்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும். இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

SP
நவ 10, 2024 10:57

இந்த நபர் எந்த பொது அறிவும் இல்லாமலேயே எதிர்கட்சிதலைவர் என்ற முக்கிய பொறுப்பில் உள்ளார்.இதெல்லாம் இந்தியாவன் சாபக்கேடு.


sankar
நவ 10, 2024 10:15

அரசியல் சாசனம் என்று வெறும் எம்ட்டி புத்தகத்தை வெற்று கால்களுடன் கூடிய புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு அலைகிறார் பப்பு என்று ஆங்கில ஊடகங்கள் ஆதாரத்துடன் கிழித்து தொங்க விட்டுவிட்டு இவர் வண்டவாளத்தை


பர்வேஸ், நாகை
நவ 10, 2024 08:41

வெற்று காகித கட்ட அரசியல் அமைப்பு சட்ட புத்தகம் என்று பாராளுமன்றத்தில காட்டி பம்மாத்து போட்ட கரகாட்ட கோஷ்டி தான நீங்க


Dharmavaan
நவ 10, 2024 08:21

என்று ராகுல் குடும்பம் அழிகிறதோ அன்றே இந்தியாவுக்கு விமோச்சனம்


Rajasekar Jayaraman
நவ 10, 2024 06:34

இந்திய மக்களுக்கு எதிரான எதுவும் இந்தியர்களுக்கு வேண்டாம்.


தனி
நவ 10, 2024 00:33

காங்கிரஸ் ஒழிந்தால்தான் இந்தியா முன்னேறும்


Pandi Muni
நவ 09, 2024 22:54

நான் யாருன்னு உமக்கு தெரியாது ஆனா நீங்க யாருன்னு எனக்கும் தெரியும் இந்திய மக்களுக்கும் தெரியும்.


வாய்மையே வெல்லும்
நவ 09, 2024 22:06

பால்டாயில் கலந்த பினாயில் குடித்து பெனாத்தும் இத்தாலி கும்பல். இவர் வாயில நல்லதே வராது . இவர் வாங்கிவந்த வரம் அப்படி .


RAJ
நவ 09, 2024 21:57

அண்ணே... நீங்கதான் நிறைய பிரிண்ட் போட்டு வச்சுட்டீங்களே அண்ணே.. நிறைய handbook வேற கைவசம் இருக்கு. நோ ஒர்ரி அண்ணே . ... வேணும்னா இன்னும ஒரு ஒண்ணரை டன் பிரிண்ட் போட்டுக்கலாம் அண்ணே .. பதட்டப்படாதீங்க அண்ணே.. ரிலாக்ஸ் அண்ணே...


GMM
நவ 09, 2024 21:43

50 சதவீத உச்ச வரம்பு நீக்கி 100 சதவீத இட ஒதுக்கீடு செய்தாலும் 100 சதவீத மக்கள் வேலை வாய்ப்பு எப்போதும் கொடுக்க முடியாது. நிர்வாகத்தை அரசியலுக்கு தமிழகம் போல் ஊழல் மாநிலமாக மாற்றலாம். பிஜேபி அரசியல் சாசனத்தை மதிக்க, காங்கிரஸ், திராவிட , கேஜ்ரிவால் ஊழல் குழுக்களை தண்டிக்க சட்ட போராட்டத்தில் இறங்கி வழி தெரியாமல் தடுமாறுகிறது. காலத்திற்கு ஏற்ப சாசன மாற்றம் அவசியம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை